பிரித்தானியர் இலங்கையை கைப்பற்றிமைக்கான மூன்று காரணங்களை தருக?
இலங்கையின் அமைவிடம் முக்கியத்துவம்
திருகோணமலை துறைமுகத்தில் முக்கியத்துவம்
வர்த்தக நடவடிக்கைகளில் இலங்கை பெற்று வந்த முக்கியத்துவம்
இலங்கையின் அமைவிடம் முக்கியத்துவம்
இந்தியாவின் கிழக்கு மேற்குக் கரையோரங்களை பிரித்தானியர்கள் கைப்பற்றியிருந்தனர் இப்பிரதேசங்களை பாதுகாக்க இலங்கையை கைப்பற்ற வேண்டி இருந்தது
இந்து சமுத்திரத்தின் கடலாதிக்கத்தை பெற்றுக்கொள்வதற்கு இலங்கையின் அமைவிடம் ஆங்கிலேயருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது இலங்கையில் இருந்துக்கொண்டு இந்து சமுத்திரத்தை கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது
மேலைத்தேய கீழைத்தேய கடற்பாதையின் மத்திய நிலையமாக இலங்கை விளங்கியது. கிழக்கே சீனா கம்போடியா முதலிய நாடுகளிலிருந்து வரும் கப்பல்களும் மேற்கே நன்னம்பிக்கை முனையிலிருந்து வரும் கப்பல்களும் சந்திக்கும் மத்திய நிலையமாக இலங்கை விளங்கியது.
திருகோணமலை துறைமுகத்தின் முக்கியத்துவம்
வங்காள விரிகுடாவையும் தென்கிழக்கு ஆசியாவையும் நோக்கி அமைந்த இயற்கை துறைமுகமாக விளங்கியது.
இது மலைகளால் சூழப்பட்ட இயற்கைத்துறைமுகமாக விளங்கியது. இதனால் பருவக் காற்றுக்காலங்களிலும் சூறாவளிகளிலிருந்தும் இங்கிருந்த கப்பல்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது
இந்து சமுத்திரத்தில் ஆங்கிலேயருக்கும் பிரான்சியருக்கும் இடையே போர் நடந்தது இப்போரில் அதிகமான கப்பல்கள் சேதமடைந்தன இக்கப்பல்களை பாதுகாப்பாக பழுதுப்பார்பதற்கு ஏற்ற இடமாக திருகோணமலைத் துறைமுகம் காணப்பட்டது.
வர்த்தக நடவடிக்கைகளில் இலங்கை பெற்றிருந்த முக்கியத் துவத்தை விளக்குக?
மிக உயர்ந்த தர கறுவா மிளகு கிராம்பு ஏலம் சாதிக்காய் போன்ற வாசனைத் திரவியங்கள் இலங்கையின் கிடைத்தமை
யானைகள் முத்து போன்ற வர்த்தகப் பொருட்கள் கிடைத்தமை
பிரித்தானியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு சந்தையாக இலங்கை காணப்பட்டமை
கண்டி மன்னர்களை சந்தித்த மூன்று ஆங்கிலேய தூதுவர்களை தருக?
ஐோன்பைபஸ் 1762இல் கீர்த்தி ஸ்ரீ ,ராஜசிங்fid சந்தித்தார்
ஹியூ போயிட் 1882ல் இராஜாதி ராஜசிங்கனை சந்தித்தார்
றொபட் அண்றுாஸ் 1795 இராஜாதிராஐவிங்கனைசந்தித்தார்
யூ கடிதம் என்றால் என்ன?
பிரான்சில் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து பிரான்ஸ் ஒல்லாந்தை கைப்பற்றியது. அவ்வாறு கைப்பற்றியதும் இளவரசன் வில்லியம் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினான் ஒல்லாந்துக்குரிய இலங்கையின் கரையோர பிரதேசங்களை பிரான்சியர் கைப்பற்றி விடுவர் என்று ஆங்கிலேயர் அச்சம் அடைந்தனர். இதனால் கரையோர பிரதேசங்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு வில்லியத்திடம் ஆங்கிலேயர் ஒரு கடிதத்தை பெற்றுக்கெண்டனர் இக்கடிதத்தை மன்னர் இங்கிலாந்தில் உள்ள கியூ மாளிகையில் வைத்து எழுதியதால் இது கியூ கடிதம் என்று அழைக்கப்படுகின்றது.
ஆங்கிலேயர் இலங்கையின் கரையேரங்கைளை எப்பேது கைபற்றினர்
கியூ கடிதத்தை இலங்கையில் இருந்த ஒல்லாந்து ஆளுநர் பன்எங்கள்பெக் ஏற்றுக்கொள்ளவில்லை இதனால் ஆங்கிலேயர் திருகோணமலையில் இருந்த பெட்ரிக்கோட்டையை 1795 ஆகஸ்ட் 26 இல் கைப்பற்றினர் தொடர்ந்து யாழ்ப்பாணம் மன்னார் கற்பிட்டி கொழும்பு முதலிய அனைத்து கோட்டைகளையும் ஆங்கிலேயர் கைப்பற்றினர்
1797 கழகத்திற்கான காரணங்களை தருக?
ஆங்கில வர்த்தக கம்பெனி தென்னை வரி உப்பு வரி மீன் வரி புகையிலை வரி முதலிய பல புதிய வரிகளை விதித்தமை
முன்பு உள்நாட்டு உத்தியோகத்தர்களெ வரி வசூலித்தார்கள் அவர்களுக்கு இலங்கை மக்களின் மொழி தெரிந்திருந்தது ஆனால் வர்த்தக கம்பெனி அவர்களுக்கு பதிலாக வரி வசூலிக்க சென்னையிலிருந்து அவுமில்தார்கள் என்ற உத்தியோகத்தர்களை வரவழைத்தார்கள் இவர்களுக்கு இலங்கை மக்களின் மொழி தெரியாததால் பல பிரச்சனைகள் ஏற்பட்டன.
முன்பு பொருட்கள் மூலமாக வரி செலுத்தப்பட்டது ஆனால் அவுமில்தார்கள் பணமாகவே வரிசெலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். பணப்புழக்கம் குறைவாக இருந்த அக்காலத்தில் பணமாக வரி கட்டுவது மக்களுக்கு பிரச்சனையாக இருந்தது.
மியூரன் குழுவின் சிபாரிசுகள்
புதியவர்கள் நீக்கப்பட வேண்டும்
பொருளாகவும் வரி செலுத்தலாம்
உள்நாட்டு உத்தியோகத்தர்களே வரி வசூலிக்க வேண்டும்
இரட்டை ஆட்சி
- கரையோர ஆட்சியில் பொருளாதார நடவடிக்கைகள் வர்த்தகக் கம்பனியினாலும் அரசியல் நடவடிக்கைகள் பிரித்தானிய அரசாங்கத்தாலும் மேற்கொள்ளப்பட்டது இது இரட்டை ஆட்சி எனப்பட்டது 1798- 1802 வரை இது இடம்பெற்றது.
- இலங்கையின் முதலாவது பிரித்தானிய ஆளுநராக பிரட்டிக் நோர்த்
- 1798- 1805 வரை இலங்கையில் பதவி வகித்தார்.
இரட்டை ஆட்சி தோல்வியடைந்தமைகான காரணங்கள்?
- இரட்டை ஆட்சியில் ஆளுநரின் உத்தியோகத்தர்கள் வர்த்தகக் கம்பனியின் உத்தியோகத்தர்கள் என இரு சாரார் உருவாக்கினர் இவர்கள் இடையே முரண்பாடு ஏற்பட்டது.
- கம்பனியின் உத்தியோகத்தர்கள் ஆளுநருக்கு ஒத்துழைக்கவில்லை இதனால் இரட்டை ஆட்சி பலவீனமடைந்தது
1803 படையெடுப்பிற்கான காரணங்கள்?
- கண்டியில் மழைக்காலம் தொடங்கியது ஆங்கில வீரர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர்.
- அந்த வீரர்களை கொழும்புக்கும் கண்டிக்கும் இடையிலான வீதிகளை தடை செய்தனர் இதனால் உணவையும் ஆயுதங்களையும் பெறுவது ஆங்கிலேயருக்கு கடினமாக இருந்தது மேலும் அவர்களுக்கு மலேரியா நோயும் உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டன.
- கண்டிவீர்ர்களின் திடீர் தாக்குதல் ஆங்கிலேயரின் தோல்விக்கு காரணமாகும்
- பிக்குகளும் பிரதானிகளும் மக்களும் மன்னனை ஆதரித்தமையால் மன்னன் இப்படையெடுப்பில் வெற்றி பெற்றான்
1815 ஆளுநர் பிரவுண்ரிக் கண்டியை கைப்பற்ற வழிவகுத்த காரணிகளை தருக
- அரசனுக்கும் பிரதானிகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகள்
- அரசனுக்கும் பிக்குகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகள்
- பிரதானிகளுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடுகள்
- அரசனுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகள்
- ஆளுநரின் திட்டமிட்ட செயற்பாடுகள்
- ஜோன்டொயிலியில் தந்திரமான நடவடிக்கைகள்
அரசனுக்கும் பிரதானிகளும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளை விளக்குக .
1. பிரதானிகளிடம் இருந்த பொறுப்புகளை அரசன் தனது நாயக்க உறவினர்களுக்கு வழங்கினான். இதனால் அரசன் மீது பிரதானிகள் அதிர்ச்சி அடைந்தார்கள்
2. தன்னை அரசனாகிய பிலிமத்தலாவைக்கு மரண தண்டனை விதித்தான்.
3. எகலபொலவின் மனைவியையும் பிள்ளைகளையும் கொடூரமாக கொலை செய்தான்
4. பிரதானிகளின் பிரதேசங்களை பிளவு படுத்தினான்
உதாரணம் சப்ரகமுவ திசாவனியை இரண்டாக பிளவுப்படுத்தினான்
5. பிரதானிகள் இடையே பிரச்சனையை உருவாக்கினான்
உதாரணம் பிலிமத்தலாவை மரணத்தின் பின்பும் அவனது முதலமைச்சர் பதவிக்கு எகலபொலவை நியமித்துவிட்டு இரண்டாவது அமைச்சராக அவனது எதிரியான மொல்லிகொடவை கூடவே நியமித்தான்
அரசனுக்கும் பிக்குகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் விளக்குக
1.பரணதல தேரர் முதலிய பல பிக்குகளுக்கு மரண தண்டனை வழங்கியமை
2. தலதா மாளிகைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட நவீனப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பிக்குகளின் சம்மதத்தை பெற்றுக் கொள்ளாமை
3. போகம்பரை வாவியை விஸ்தரிப்பதற்கு மன்னன் போயமலுவிகாரையையும் 4 தேவாலயங்களையும் அகற்ற நடவடிக்கை எடுத்தான் இதனை பௌத்த விரோத செயல்கள்களாக பிக்குகள் கருதியமை
4. மன்னன் பௌத்த மதத்தை சேராதவனாக இருந்தமை