Type Here to Get Search Results !

உலகின் மிக நீளமான ஆறுகள் டாப் 10 பட்டியல்

 உலகின் மிக நீளமான ஆறுகள் டாப் 10 பட்டியல்



1.நைல் நதி

ஆறுகளில் மிகப்பெரிய நீரோடை கொண்ட ஆறு நைல் நதி ஆகும். இது மிகப்பெரிய ஆற்று படுகையையும் கொண்டது. உலகின் மிக நீளமான ஆறுகளில் முதன்மையானது.

6650 கிமீ நீளம் (4132 miles ) கொண்ட மிக நீளமான ஆறு நைல் நதி ஆகும். இது ஆப்ரிக்காவின் வட கிழக்கு பகுதியில் உள்ளது.

நைல் நதியானது வெள்ளை நைல் மற்றும் நீல நைல் என்ற இரண்டு துணை ஆறுகளை கொண்டுள்ளது. எகிப்து நாட்டின் பண்டைய கால குடி ஏற்றங்கள் நைல் நதிக் கரையில் அமைந்திருந்தன.


2. அமேசான் ஆறு

அமேசான் காடுகள் வழியாக பாய்கின்றன. உலகின் இரண்டாவது மிக நீளமான ஆறு ஆகும். தென் அமெரிக்காவில் உள்ளது.

6400 கி.மீ நீளம் கொண்ட மிகப்பெரிய ஆறு ஆகும். பரப்பளவில் உலகின் மிகப்பெரிய ஆற்று படுக்கை கொண்டது.

உலகின் மிகப்பெரிய ஆறு என்ற சிறப்பு இதற்கு இருந்தாலும் நீளத்தில் நைல் நதியே மிக பெரியதாக உள்ளது.

இது மழைக்காடுகள் என்று அழைக்கப்படுகிறது. உலகின் சுற்றுசூழல்-யை பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இங்கு அனகோண்டா வகைப் பாம்புகள் மற்றும் டால்பின் வகை மீன் இனங்கள் போன்ற அரியவகை உயிரினங்கள் இந்த ஆற்றில் வசிக்கின்றது.

உலகிலுள்ள உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு இங்கு வாழ்வது குறிப்பிடத்தக்க ஒன்று.


3. யாங்சி ஆறு

யாங்சி ஆறுகள் உலகின் மூன்றாவது பெரிய ஆறு ஆகும். இது சீனாவில் உள்ள மிகப்பெரிய ஆறு. 6,300 கி.மீ நீளம் கொண்டது. சீன நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை வளப்படுத்துகிறது.

இந்த ஆற்றுப் பகுதியில் ஏற்படக்கூடிய சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக அங்கு வசிக்கும் சீன முதலை, துடுப்பு மீன், கடல் பன்றி போன்ற இனங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளன.

கடல் மட்டத்தில் இருந்து 5170 மீ உயரமாக உள்ளது. ஆசிய கண்டத்தில் உள்ள ஆறுகளில் மிக நீளமான ஆறு இதுவாகும்.


4. மிசிசிப்பி ஆறு

6,275 கிமீ கொண்ட உலகின் நான்காவது பெரிய ஆறு ஆகும். இது வட அமெரிக்காவில் உள்ள நீண்ட பெரிய ஆறாகும்.

பல வளைவுகள் கொண்டதாக உள்ளது. மிசிசிப்பி என்ற பெயர் இதில் மிசி என்பதற்கு விசாலம், சிப்பி என்பதற்கு தண்ணீர் என்று பொருள். இந்திய வார்த்தைகளின் அடிப்படையில் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளை வளப்படுத்துகிறது. இங்கு உயிரியல் பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளது.


5. யெனீசீ ஆறு

யெனீசீ ஆறு, உலகின் ஐந்தாவது மிகப்பெரிய ஆறு ஆகும். 5549 கிமீ நீளம் கொண்ட ஆற்றுப்படுகை உடையது. பைகால் ஏரியில் இருந்து யெனீசீ ஆறு உற்பத்தி ஆகிறது.

55 வகையான மீன்களுக்கு இருப்பிடமாக உள்ளது.

6. மஞ்சள் ஆறு

மஞ்சள் ஆறு சீனாவில் பாய்கிறது. இது சீன நாட்டின் இரண்டாவது நீளமான ஆறாகும்.

இதனை அந்நாட்டின் துயரம் என்று அழைக்கப்படுகிறது. 5,464 கிமீ நீளமுடைய உலகின் ஆறாவது பெரிய ஆறு ஆகும்.

மஞ்சள் நதியின் ஆற்றுப்படுகையில் வண்டல் மண் படிவம் அதிகமாக இருப்பதால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். எனவே இது மஞ்சள் நதி என்று அழைக்கப்படுகிறது.  2007 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி மூன்றில் ஒரு பங்கு விவசாயம் மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த முடியாது.

ஆலைகள் மற்றும் நகரத்தில் இருந்து வெளிவரும் கழிவுகளால் நீரானது மாசடைந்துள்ளது.


7. ஓப் ஆறு

உலகின் ஏழாவது மிகப்பெரிய ஆறு ஓப் ஆறு ஆகும். 5410 கிமீ நீளம் கொண்ட நீண்ட நதியாகும். சைபீரியா நாட்டில் உள்ள பெரிய ஆறு ஆகும்.

நதி முகத்துவாரத்தில் ஓப் ஆறு உலகின் மிக பெரியது ஆகும். விவசாயம் செய்வதற்கு, மீன் பிடிக்க, நீரில் இருந்து மின் உற்பத்தி போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.


8. பரனா ஆறு

4850 கிமீ நீளம் கொண்ட உலகின் எட்டாவது பெரிய ஆறு பரனா ஆறு. தென் அமெரிக்காவில் உள்ள இரண்டாவது நீளமான நதி ஆகும்.


பரனா என்பதற்கு ” கடலைப் போன்றது ” என்று பொருள். இங்கு அணைகள் கட்டப்பட்டு நீர் மின்சாரம் எடுக்கப்படுகிறது.

பிரேசில், பராகுவே, மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகள் வழியாக பரனா ஆறு சென்று அந்நாட்டை வளமாக்குகிறது.


9. காங்கோ ஆறு

உலகின் ஒன்பதாவது மிகப்பெரிய ஆறு காங்கோ ஆறாகும். இதன் ஆற்றுப்படுகை 4700 கிமீ கொண்டதாகும்.உலகில் உள்ள மிகப்பெரிய ஆறுகளில் அதிக ஆழம் கொண்ட ஆறு காங்கோ ஆறாகும்.

அதிக கனஅளவில் நீரைக் கொண்டு செல்லும் ஆறுகளில் இரண்டாவது இடத்தைக் கொண்டது.

ஆப்ரிக்காவில் பாயும் முக்கிய ஆறாக விளங்குகிறது. காங்கோ பேரரசு காலத்தில் இந்த நதிக்கு காங்கோ ஆறு என்ற பெயர் உருவானது.


10. அமுர் ஆறு

உலகின் பத்தாவது மிகப்பெரிய ஆறு அமுர் ஆறாகும். 4444 கிமீ நீளம் கொண்ட பெரிய ஆறாகும்.

கருப்பு ட்ராகன் என்று சீன மொழியில் அழைக்கப்படுகிறது. சீனா மற்றும் ரஷியாவின் எல்லைப் பகுதியில் பாய்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad