Type Here to Get Search Results !

சந்திரயான்-2 Chandrayaan-2

சந்திரயான்-2   Chandrayaan-2



சந்திரயான்-2 (Chandrayaan-2) என்பது சந்திரயான்-1 இற்குப் பின்னர் நிலாவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட இந்தியாவின் இரண்டாவது விண்கலம் ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (இசுரோ) வடிவமைக்கப்பட்ட இவ்விண்கலம், ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்தில் இருந்து 2019, சூலை 22 அன்று நிலாவை நோக்கி ஜி. எஸ். எல். வி மார்க் III ஏவுகலன் மூலம் ஏவப்பட்டது. இவ்விண்கலத்தில் நிலா சுற்றுக்கலன், தரையிறங்கி, தரையூர்தி(நடமாடும் ஆய்வகம்) ஆகியன உள்ளடங்கியிருந்தன. இவை அனைத்தும் இந்தியாவிலேயே வடிவமைத்து கட்டமைக்கப்பட்டன.இதன் முதன்மையான அறிவியல் குறிக்கோள் நிலா மேற்பரப்பு உட்கூற்று வேறுபாடுகளை ஆய்வு செய்து படம் வரைதலும் நிலாத் தண்ணீர் செறிவாக அமையும் இடங்களைக் கண்டறிதலும் ஆகும்.


சந்திரயான்-1    

சந்திரயான்-2

சந்திரயான்-3

தரையூர்தி நிலாவின் மேற்பரப்பில் வேதிப்பகுப்பாய்வை 14 நாட்களுக்கு (1 நிலா நாள்) மேற்கொள்ளவும், தான் திரட்டிய தரவுகளைச் சுற்றுக்கலன், தரையிறங்கியூடாக புவிக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டிருந்தது. சுற்றுக்கலன் ஒரு ஆண்டு காலம் நிலாவைச் சுற்றி 100 x 100 கிமீ சுற்றுவட்டத்தில் சுற்றிவந்து தனது பணிகளை மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.2019 செப்டம்பர் 7 இல் நிலாவில் நிலநேர்க்கோட்டின் கிட்டத்தட்ட 70° தெற்கே மன்சீனசு சி, சிம்பேலியசு என் ஆகிய இரு குழிகளிடையேயுள்ள மேட்டுச்சமவெளியில் சந்திரயான்-2 இன் தரையிறங்கியும், உலாவியும் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.


என்றாலும், 2019, செப்டம்பர் 6 இல் தரையிறங்க முயலும்போது, தன் திட்டமிட்ட தடவழியில் இருந்து விலகியதால் அது நிலாத்தரையில் மொத்தியநிலைக்குத் தள்ளப்பட்டது. எனவே, தரையிறங்கியை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கம் செய்ய இயலவில்லை.இசுரோ பெற்ற பழுது பகுப்பாய்வு அறிக்கையின்படி, மொத்தல் சிறு மென்பொருள் வழுவியதால் நேர்ந்ததாகக் கூறப்பட்டது. இதனால், இசுரோ 2023 இல் சந்திரயான்-3 வழியாக நிலாத்தரையில் மென்மையான தரையிறக்கத்துக்கு மறுமுயர்சி செய்ய முடிவெடுத்தது.


சந்திரயான்-2   Chandrayaan-2 வரலாறு

சந்திரயான் -1 இன் தொடர்திட்டமான சந்திரயான்-2 திட்டதில் ஒருங்கிணைந்து செயல்ப்பட, 2007 நவம்பர் 12 இல் இராசுகாசுமோசு பேராளர்களும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனப் பேராளர்களும் இருமுகமைகளுக்கும் இடையில் ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர் இசுரோ வட்டணைக்கல்ம், தரையூர்தி இரண்டுக்கும் முதன்மைப் பொறுப்பையும், இராசுகாசுமோசு தரையிறங்கியை தருவதாகவும் ஒப்புக்கொல்லப்பட்டது. இந்திய அரசு, 2008, செப்டம்பர் 18 இல் இந்திய முதன்மை அமைச்சர் மன்மோகன் தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சர் மன்றத்தில் இத்திட்டத்துக்கான ஒப்புதலை அளித்தது. விண்கலத்தின் வடிவமைப்பு, 2009 ஆகத்தில் இருநாடுகளின் அறிவியலாளர்களின் மீள்பார்வைக் கூட்டத்தில் முடிக்கப்பட்டது.


இசுரோ திட்டமிட்டபடி, சந்திரயான்-2 இன் அறிவியல் கருவிகளை இறுதிப்படுத்தி இருந்த போதும்,  உருசியா தரையிறங்கியைக் காலத்தே உருவாக்காததால், 2013 ஜனவரியில் திட்டம் தள்ளிவைத்து 2016 ஆம் ஆண்டுக்கு மீள்திட்டமிடப்பட்டது.செவ்வாய்க்கான போபோசு கிரன்ட்டுத் திட்டம் பழுதுற்றதால் 2012 இல் மறுபடியும் சந்திரயான் -2 விண்கலத்திட்டத்துக்கான தரையிறங்கி கட்டுமானம் காலத் தாழ்த்தமானது. ஏனெனில், போபோசு கிரன்ட்டுத் தொழில்நுட்பச் சிக்கல்கள் சந்திரயான்-2 வின் தரையிறங்கியிலும் பயன்படுத்தியுள்லதால் அவற்ற மீள்பார்வையிட வேண்டியதாயிற்று. உருசியா 2015 இலும் தரையிறங்கியைத் தர இயலாமையைத் தெரிவித்ததும், நிலாத் திட்டத்தைத் தனியாகவே உருவாக்கி நிறைவேற்றத் திட்டமிட்டது. சந்திரயான்-2 திட்டத்துக்குப் புதிய காலநிரல் வகுக்கப்பட்டதாலும், 2013 இல் செவ்வாய்த் திட்ட ஏவுதலுக்கான வாய்ப்புச் சாளரம் ஏற்பட்டதாலும் பயன்படுத்தாத சந்திரயான்-2 விண்கல வன்பொருட்கள் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தில் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது.


முதலில் 2018 மார்ச்சில் விண்கல்ம் ஏவத் திட்டமிடப்பட்டது. மேலும், ஏவூர்தியில் சில ஓர்வுகள் செய்ய, 2018 ஏப்பிரலில் இருந்து அக்தோபர் வரை காலந்தாழ்த்தப்பட்டது. 2019, சூன் 19 இல் நடந்த நான்காம் ஒட்டுமொத்த தொழில்நுட்ப மீள்பார்வைக் கூட்டத்தில்லுருவமைப்பிலும் தரையிறங்கும் வரிசையிலும் நடைமுரைப்படுத்தலில் பல மாற்றங்கள் திட்டமிடப்பட்டதால் ஏவுதல் 2019 முதல் அரையாண்டுக்கு தள்ளிப் போக நேர்ந்தது. 2019 பிப்ரவரியில் ந்டந்த ஆய்வுகளில் தரையிறங்கியின் கால்கலில் இரண்டு சிறுசிதைவுக்கு உள்ளானது.


சந்திராயன்-2, 2019 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் நாள் அதிகாலை 2.51 மணிக்கு சிறி அரிகோட்டாவில் உள்ளசத்தீசு தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவத் திட்டமிடப்பட்டிருந்தது. விண்கலம் ஏவப்பட 56 மணித்துளிகள் இருந்த போது, சந்திராயன்-2 திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சந்திராயனை ஏவும் ஏவுதளக் கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் இவ்வாறு நிகழ்ந்தது எனவும் அறிவியல் அறிஞர்கள் தெரிவித்தனர். பின்னர் தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், சூலை 22 ஆம் நாள் பிற்பகல் 2.43 மணிக்கு சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.


சந்திரயான்-1 செயற்கைகோளில் இருந்த சூரியமின் பலகம் பழுதடைந்ததால் வரையறுத்த 100 கி.மீட்டருக்கு பதில் 200 கி.மீ. உயரத்தில் சந்திரயான் -1 சுற்றிக் கொண்டிருந்தது. எனினும் 95% பணிகளை அது முடித்துவிட்டதாக `இசுரோ' தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், சந்திரயான்-2 திட்டத்துக்கான செயற்கைக்கோள உருவாக்கும் பணிகள் முடிவடைந்தன.

இத்திட்டப் பணிகளின் தலைவராக மயில்சாமி அண்ணாதுரை இருந்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad