Type Here to Get Search Results !

ஆஸ்திரேலியா நாட்டின் வரலாறு - 2023

ஆத்திரேலியா Australia




ஆத்திரேலியா (Australia) என்பது உலகின் மிகச்சிறிய கண்டமாகவும் உலகின் மிகப்பெரும் தீவாகவும் உள்ள பெருநிலப்பரப்பையும், தசுமேனியா தீவு, இந்திய, பசிபிக் பெருங்கடல்களில் உள்ள சில சிறிய தீவுகளையும் உள்ளடக்கிய நாடு. இது பொதுநலவாய ஆத்திரேலியா (Commonwealth of Australia) என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது. எந்த நாட்டுடனும் இதற்கு நில எல்லை கிடையாது. இந்தோனீசியா, கிழக்குத் திமோர், பப்புவா நியூ கினி ஆகிய நாடுகள் இதன் வடக்கேயும், சொலமன் தீவுகள், வனுவாட்டு, நியூ கலிடோனியா ஆகியன வடகிழக்கேயும், நியூசிலாந்து தென்கிழக்கேயும் இதன் அயல் நாடுகளாக அமைந்துள்ளன.


கிட்டத்தட்ட 42,000 ஆண்டுகளாக ஆத்திரேலியப் பழங்குடிகள் ஆத்திரேலியப் பெரு நிலப்பரப்பில் வாழ்ந்து வருவதாக வரலாறு சொல்கிறது.அவ்வப்போது வடக்கில் இருந்து மீனவர்களும், பின்னர் 1606 இல் டச்சு நாடுகாண் பயணிகள் ஐரோப்பாவில் இருந்தும் இங்கு வந்து போன பின்னர், 1770 இல் ஆத்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் வந்திறங்கிய ஆங்கிலேயர் அதனை ஐக்கிய இராச்சியத்துக்கென உரிமை கொண்டாடினர். ஆரம்பத்தில் ஆங்கிலேய, சுகொட்டியக் குற்றவாளிகளின் குடியேற்றத் திட்டமாக சனவரி 26, 1788 இல் நியூ சவுத் வேல்சு என்ற குடியேற்றப் பகுதி உருவாக்கப்பட்டது. பின்னர் மக்கள் தொகை பெருக, ஆத்திரேலியாவின் மேலும் பல புதிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு 19ம் நூற்றாண்டின் காலப்பகுதியில் சுயாட்சி கொண்ட மேலும் ஐந்து பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகள் அமைக்கப்பட்டன. சனவரி 1, 1901 இல் ஆறு தனித்தனியான குடியேற்றப் பகுதிகளும் ஒன்றிணைந்து பொதுநலவாய ஆத்திரேலியா என்ற திறந்த மக்களாட்சி அரசியலமைப்புடன் கூட்டமைப்பு அரசை உருவாக்கின. இதன் தலைநகரம் கான்பரா ஆகும்.


பரப்பளவில் ஆறாவது பெரிய நாடாக இருப்பினும் இதன் மக்கள்தொகை வெறும் 23.2 மில்லியன்கள் (2.32 கோடி, 2013 மதிப்பீட்டின் படி மட்டுமே. இவர்களில் 60 விழுக்காட்டினர் பெருநிலப்பரப்பில் மாநிலத் தலைநகரங்களை அண்டி வாழ்கின்றனர். ஆத்திரேலியா மேற்கத்திய பொருளாதார முறைகளைப் பின்பற்றுகிறது. ஆள்வீத வருமானம் வலுவான பொருளாதார நாடுகளுக்கு இணையானது. தொழிலாளிகளில் 5% மட்டும் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். எண்ணெய் வளமும், கனிம வளமும் மிகுந்த நாடு.



ஆத்திரேலியா  பெயர்க் காரணம்

ஆத்திரேலியா என்ற பெயர் Australis என்ற இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து உருவானது. தெற்கே என்பது இதன் கருத்து. 1521 இல் எசுப்பானியர் பசிபிக் பெருங்கடலில் பயணம் செய்த முதலாவது ஐரோப்பியர் ஆவர். ஆங்கில மொழியில் முதன் முதலாக ஆத்திரேலியா என்ற சொல் 1625 இல் பயன்படுத்தப் பட்டது.[7] சக்கார்த்தாவில் நிலை கொண்டிருந்த டச்சு கிழக்கிந்தியக் கம்பனியினர் 1638 இல் தெற்கே தாம் புதிதாகக் கண்டுபிடித்த இடத்திற்கு Australische என்ற பெயரை இட்டனர்.


ஆத்திரேலியாவை முதன் முதலில் சுற்றி வந்த மேத்தியூ பிலிண்டர்சு என்ற பிரித்தானிய மாலுமி 1814 இல் தனது A Voyage to Terra Australis என்ற நூலில் "ஆத்திரேலியா" என்ற பெயரைப் பயன்படுத்தியதில் இருந்து இப்பெயர் பரவலாக வழக்கூன்றியது. நியூ சவுத் வேல்சு ஆளுநர் லக்லான் மக்குவாரி 1817, திசம்பர் 12 இல் இப்பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்.[8] 1824 இல் இப்பெயர் ஏற்பு பெற்றது.


ஆத்திரேலிய ஆங்கிலத்தில் "ஆஸ்திரேலியா" əˈstɹæɪljə, -liːə, -jə என்றவாறு பலுக்கப்படுகிறது.[9] 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து ஆத்திரேலியா நாட்டை உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் ஓசு (Oz) என்றும், ஆத்திரேலியர்களை "ஒசி" (Aussie) எனவும் சுருக்கமாக அழைக்கப்படுகிறார்கள்.


ஆத்திரேலியாவின்  வரலாறு

ஆத்திரேலியாவின் முதல் மனிதர் குடியேறியது 42,000 முதல் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  இவர்கள் தற்போது ஆத்திரேலியாவில் உள்ள பழங்குடிகளின் மூதாதையர் என அறியப்படுகிறது. இவர்கள் நியூ சவுத் வேல்சு மாநிலத்தில் லெக்முங்கோ (Laje Mungo) என்னுமிடத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் வசித்தாலும் அவர்கள் தற்போதைய தென்கிழக்காசியத் தீவுகளிலிருந்து மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாகத் நம்பப்படுகிறது. மரபணு மற்றும் மொழி அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் (பிற நாட்டினத்தவர்களுடன்) உறுதிப்படவில்லை. இப்பழங்குடினரில் பெரும்பான்மையானோர் வேட்டையாடுபவர்கள். குயின்சுலாந்தின் தூர-வடக்கிலும், டொரெசு நீரிணைத் தீவுகளிலும் வாழும் பழங்குடியினர் மெலனேசியர்கள். இவர்களின் பண்பாடு, வாழ்க்கை முறை ஏனைய பழங்குடியினரை விட வேறுபட்டவை.


 உலகின் மிக தட்டையாக அமைந்துள்ள நாடு எது?

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகரம்  எது?

Canberra (கான்பரா)

ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய விலங்கு எது?

கங்காரு (Kangaroo)

ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய பறவை எது?

ஈமியூ அல்லது ஈம்யூ



சில விடயங்களில் மக்கள் இரு வேறு துருவங்களாகப் பிரிந்து நிற்கிறார்கள்.  ஆஸ்திரேலியர்கள் அப்படி பிரிந்து நிற்கும் பல விடயங்கள் இருந்தாலும், இந்த மாதம் இருபத்தாறாம் நாள் பலரையும் பிரித்து வைத்திருக்கிறது.


தேசம் - Nation என்பது பெரும்பாலும் ஒரே மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இனக் குழுக்கள் வாழும் பகுதிகள் என்றும், நாடு - Country என்பது ஒரு நிலப்பரப்பை, ஒரு பகுதியை இலகுவாக நிர்வகிக்க தோற்றுவிக்கப்பட்டது என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.  உலகில் பல தேசங்களைக் கொண்ட நாடுகளும் உண்டு. ஒரே மொழியைத் தாய் மொழியாய்க் கொண்ட இனக் குழுக்கள் வாழும் நிலப்பகுதிகள் பல நாடுகளாகப் பிரிந்தும் காணப்படுகின்றன.


பல நாடுகள் தாம் உருவான நாளை, சுதந்திரம் பெற்ற அல்லது குடியரசாக மாறிய நாளை சிறப்பாகக் கொண்டாடுகின்றன.  பல்லாயிரம் வருடங்களாக மனிதர்கள் நாம் வாழும் இந்த மண்ணில் வாழ்ந்திருந்தாலும், 1901ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் தான் ஆஸ்திரேலியா என்ற நாடு உருவானது.  ஆனால் நாம் அதனை பெரிதாக கொண்டாடுவதில்லை.  26 நாட்கள் கழித்து அதனைக் கொண்டாடுவதற்கான காரணம் என்ன?  அதற்கு நாம் சில வருடங்கள் பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.


A New Voyage round the World என்ற நூலை 1697ம் ஆண்டு பிரசுரித்த William Dampier என்ற கடற்கொள்ளைக்காரன், 17ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், உலகை மூன்று முறை சுற்றி வந்திருக்கிறார்.  பிரித்தானிய அரசின் அங்கீகாரத்துடன் பயணத்தை மேற்கொண்ட இவர், ஆஸ்திரேலிய கண்டத்தையும் தன் வரைபடங்களில் சேர்த்திருக்கிறார்.  அந்த வரைபடங்கள் தான் Captain James Cook ஆஸ்திரேலியா வருவதற்கு உதவிபுரிந்திருக்கின்றன.


ஆனால் பிரித்தானியர்கள் ஆஸ்திரேலியா நோக்கி கடற்பயணத்தை மேற்கொள்ள முன் France, Holland, Spain, மற்றும் Portugal போன்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே - Captain James Cook ஆஸ்திரேலியாவில் கால் பதிக்க 250 வருடங்களுக்கு முன்னரே, ஆஸ்திரேலியாவிற்கு வந்திருக்கிறார்கள்.


ஆங்கிலேயர் முதல் முறையாக இந்த மண்ணிற்கு வந்த போதோ, அதன் பின்னர் Captain Cook வந்த போதோ, பிரித்தானியக் காலனி இங்கே நிறுவப்படவில்லை...


ஆளில்லாத பாரிய தீவில் தாமும் குடியேற வேண்டுமென்றும் அதன்மூலம் தென்துருவத்தில் தாமும் நிலை கொள்ள வேண்டுமென்றும் பிரித்தானியாவும் விரும்பியது.  பிரித்தானியாவிற்கெதிராக அமெரிக்காவில் புரட்சி நடந்து கொண்டிருந்த வேளை அது.  பிரித்தானிய கைதிகளை அமெரிக்காவிற்கு அனுப்புவது இயலாத விடயமாகிவிட்ட காலம் என்று சொல்லலாம்.


அந்த வேளையில் தான் Captain Cook இந்தப் பிரதேசத்திற்கு வந்தார்.  அது 1770ஆம் ஆண்டு.  Captain Cook உடன் Joseph Banks என்ற ஒரு பணம் படைத்த விஞ்ஞானி, மற்றும் அமெரிக்கர் James Matra ஆகியோரும் பயணித்தனர்.  Joseph Banksஇன் உந்துதலில், "A Proposal for Establishing a Settlement in New South Wales" என்ற திட்ட வரை படத்தை பிரித்தானிய அரசிடம் 1783ம் ஆண்டு ஆகஸ்து மாதத்தில் James Matra கையளித்தார்.  அமெரிக்காவில் பிரித்தானியர்களை ஆதரிப்பவர்களுக்கு ஆபத்து இருந்த காரணத்தால், அவர் எழுதிய திட்ட வரை படத்தில், பிரித்தானியாவை ஆதரிக்கும் அமெரிக்கர்களையும் சீனர்களையும் பசிஃபிக் தென்கடல் தீவுகளில் வாழும் மக்களையும் இந்த ஆளில்லாக் கண்டத்தில் குடியேற்றுவதன் மூலம், அதனை பிரித்தானிய காலனியாக்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தார்.


இதே வேளை, பிரித்தானியாவில், பெருகி வரும் கைதிகள் எல்லோரையும் அங்குள்ள சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப் போதிய இடமிருக்கவில்லை.  கொலை செய்தவர்கள் மட்டுமல்ல, சில்லறைத் திருட்டு செய்தவர்களையும் சிறையில் அடைத்தால் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் என்ன செய்யும்?  அதற்கான தீர்வு என்ன என்று பிரித்தானிய அரசின் Secretary of State, Lord Sydney யோசித்துக் கொண்டிருந்த வேளை... ஆஹா, ஒரு கல்லில் இரு மாங்காய்கள் என்று, James Matraவுடைய திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து அதனை செயல்படுத்த ஆயத்தங்கள் மேற் கொள்ளப்பட்டன.


சிறு குற்றம் புரிந்தவர்களைக் கப்பலில் ஏற்றி, ஆளில்லாக் கண்டத்திற்கு அனுப்புவது..... இராணுவ வீரர்களையும் அங்கே அனுப்பி, ஒரு புதிய காலனியை உருவாக்குவது.... எப்படி அந்தத் திட்டம்.  அதற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டுமென்றால், அங்கு செல்பவர்கள் செயற்திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும் இல்லையா? எனவே, குற்றவாளிகளைத் தெரிவு செய்யும்போது, கட்டுமானத் தொழில் தெரிந்தவர்களுக்கு முதலுரிமை கொடுக்கப்பட்டது.  இந்தத் தேசம் கைதிகளால் கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்று தான் வரலாறு சொல்லும்.  ஆனால், புதிய காலனியை உருவாக்குவதற்குக் கைதிகள் உபயோகப்படுத்தப்பட்டார்கள் என்பது தான் வரலாற்று உண்மை


Captain Arthur Phillip தலைமையில் 736 கைதிகளையும் 300 இராணுவ அதிகாரிகளையும் உள்ளடக்கிய 1530 பேரைத்தாங்கிய 11 கப்பல்கள் இந்த மண்ணில் காலடி வைத்தபோது தான் ஐரோப்பிய குடியேற்றம் ஆரம்பமாகியது. 


ஐரோப்பியர்கள் ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக வந்திறங்கியது ஜனவரி 26 என்று சிலர் நம்புகிறார்கள்.... அதில் உண்மை இல்லை.


உண்மையில், அதற்கு முந்தைய வாரமே இந்தப் 11 கப்பல்களும் தரை தட்டி விட்டன.  ஜனவரி 26ஆம் நாள் தான் Sydney Cove என்ற இடத்தில் பிரித்தானிய கொடி முதல் முதலாக ஏற்றப்பட்டு, பிரித்தானியர்கள் இந்த நாட்டின் மீது உரிமை கொண்டாட ஆரம்பித்த நாள்.


ஆஸ்திரேலிய தினத்தை 1788ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியர்கள் கொண்டாடுவதாக சிலர் நம்புகிறார்கள்.... அதில் உண்மை இல்லை.


ஐரோப்பியர்கள் இந்த மண்ணில் காலடி பதித்த நாட்களில் ‘First Landing Day’ அல்லது ‘Foundation Day’ என்று New South Wales colony கொண்டாடி வருகிறது.


Regatta Day என்று Tasmania), Proclamation Day என்று தெற்கு ஆஸ்திரேலியா, Empire Day என்று வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு மாநிலங்கள் கொண்டாடி வந்திருக்கின்றன.  1935ஆம் ஆண்டிலிருந்து தான், நாம் இப்போது பார்ப்பது போல், ஆஸ்திரேலிய தினம் கொண்டாடப்பட ஆரம்பித்தது.  1994ஆம் ஆண்டில் தான், ஜனவரி 26ஆம் நாள், நாடளாவிய வகையில் விடுமுறையாக்கப்பட்டது.


“ஆஸ்திரேலிய தினத்தன்று நாம் ஆஸ்திரேலியாவைப் பற்றி விரும்பும் அனைத்தையும் கொண்டாடுகிறோம்: நிலம், வாழ்க்கை முறை, எல்லோருக்கும் வழங்கப்படும் சம வாய்ப்பு - sense of fair go, மக்களாட்சி, நாம் அனுபவிக்கும் சுதந்திரங்கள், மேலும் குறிப்பாக நம் மக்களைக் கொண்டாடுகிறோம்” என்று National Australia Day Council  வெளியிட்டுள்ள “Australia Day celebrations guidelines” என்ற வழிகாட்டி சொல்கிறது.


ஆஸ்திரேலிய வரலாற்றில் ஜனவரி 26 ஒரு முக்கியமான தேதியாக காலப்போக்கில் மாறிவிட்டது. விடுதலையான குற்றவாளிகளின் கொண்டாட்டமாகத் தொடங்கி, இப்போது ஆஸ்திரேலியாவின் கொண்டாட்டமாக நாட்டின் பல்வேறு மக்களையும் இந்த நாள் பிரதிபலிக்கிறது.


இந்நாட்டில் வாழும் முக்கால்வாசிப் பேர், ஒரு விடுமுறை நாள் என்பதற்கும் அப்பால் ஜனவரி 26ஆம் நாள் அர்த்தம் நிறைந்த நாள் என்று நம்புகின்றனர்.  பாதிக்கும் மேற்பட்டவர்கள்,  மாநில அரசுகள், உள்ளூராட்சி மன்றங்கள், சமூகக் குழுக்கள் ஏற்பாடு செய்த ஆஸ்திரேலியா தின நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்கள் அல்லது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒன்று கூடி மகிழ்வாக இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா நாளில் 16,000 க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுகிறார்கள்.


ஆனால் சில பூர்வீக மக்களும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் மற்றவர்களுக்கும் இதனை ஒரு துக்க நாள் என்று கருதுகிறார்கள்.


சில பூர்வீக குடிமக்களுக்கு, அவர்கள் அறிந்த ஆஸ்திரேலியா 1788 ஜனவரி மாதத்தில் முடிவடைந்து விட்டது. ஆஸ்திரேலியாவின் காலனித்துவம் கொடூரமானது; படுகொலைகள் நடந்தன, சமூகங்கள் ஒடுக்கப்பட்டன, நிலம் பறிக்கப்பட்டது. சில தலைமுறைகள் திருடப்பட்டன என்று, திருடப்பட்ட தலைமுறைகளின் கதைகள் பரவலாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.


எனவே, சிலர் ஜனவரி 26ஆம் நாளை ‘படையெடுப்பு நாள்’(invasion day) அல்லது ‘உயிர்வாழும் நாள்’(survival day) என்று குறிப்பிடுகின்றனர்.


கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆஸ்திரேலிய தினத்தை மாற்றுவதற்கான அடி மட்ட இயக்கங்கள் பாரிய அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளன. 


நாங்கள் தமிழர்கள்.  இந்த மண்ணின் பூர்வீக மக்கள் அல்ல.  ஆஸ்திரேலிய பூர்வீக மக்களில் சிலர் ஜனவரி 26ஆம் நாளை ‘படையெடுப்பு நாள்’என்றும் வேறு சிலர் ‘உயிர்வாழும் நாள்’என்றும் விபரிக்கும் போது, அது குறித்த அனைத்து உணர்வுகளையும் எம்மால் உணர முடியுமா என்பது சந்தேகம் தான்.  இருந்தாலும், ஒரு முக்கியமான பிரச்சினையை முன்னிலைப்படுத்தவும், மற்றைய ஆஸ்திரேலியர்களுக்கு ஜனவரி 26ஆம் நாளின் முக்கியத்துவம் என்ன என்று சிந்திக்க வேண்டிய நேரமும் இது தான்.


‘ஆஸ்திரேலியா தினம்’குறித்து சில பூர்வீக குடிமக்கள் சிலர் பகிர்ந்து கொண்ட கருத்துகள் இவை.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad