Type Here to Get Search Results !

சந்திரயான்-3 Chandrayaan-3

சந்திரயான்-3  Chandrayaan-3



சந்திரயான்-3 (Chandrayaan-3) என்பது இந்திய நிலாப்பயண சந்திரயான் திட்டத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இசுரோ) திட்டமிட்டுள்ள மூன்றாவது மிக அண்மைய நிலாத் தேட்டத் திட்டமாகும். 2023 சூலையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2019 இல் சந்திரயான்-2 இல் ஏவப்பட்டதைப் போன்று, விக்ரம் என்ற நிலாத் தரையிறங்கியையும், பிரக்யான் என்ற நிலாத் தரையூர்தியையும் கொண்டுள்ளது.


சந்திரயான்-3 சதீசு தவான் விண்வெளி மையத்தில் இருந்து 2023 சூலை 14 அன்று ஏவப்பட்டது. விண்கலம் 2023 ஆகத்து 5 அன்று நிலாவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. விக்ரம் தரையிறங்கி பிரக்யான் தரையூர்தியுடன் நிலாவின் தென்முனைப் பகுதியில் ஆகத்து 23 அன்று 12:33 ஒசநே நேரத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கி, தென்முனையில் தரையிறங்கிய முதலாவது நாடாகவும், அத்துடன் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய நான்காவது நாடாகவும் இந்தியாவை உருவாக்கியது. தரையிறங்கி 2023, செப்டம்பர் 3 அன்று இறங்கிய இடத்தில் இருந்து துள்ளிக் குதித்து 30–40 cm (12–16 அங்) அளவு தள்ளிய இருப்பை அடைந்தது 

சந்திரயான்-1    

சந்திரயான்-2

சந்திரயான்-3


விக்ரம் தரையிறங்கியும் பிரக்யான் தரையூர்தியும் செப்டம்பர் முறையே செப்டம்பர் 2 அன்றும் 4 அன்றும் இறங்கிய இடத்தில் உள்ள சூரிய ஆற்றல் அருகி வந்ததால் உறங்க வைக்கப்பட்டன. தரையிறங்கியும் தரையூர்தியும் செப்டம்பர் 22 அண்று சூரிய எழுச்சியின்போது மீண்டும் வேலை செய்ய திட்டமிடப்பட்டது. unrise on 22 September. என்றாலும், செப்டம்பர் 22 அன்று விக்ரம் தரையிறங்கியும் பிரக்யான் தரையூர்தியும் விழிப்பு அழைப்புக்குத் துலங்காமல் தவறவிட்டன.


பின்னணி

சந்திரயான் நிகழ்நிரலின் இரண்டாம்கட்டமாக, சந்திரயான்-2 ஏவூர்தி மார்க் 3 (LVM 3) வழியாக விண்ணில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஏவியது. இதில் ஒரு சுற்றுகலனும் ஒரு தரையிறங்கியும் ஒரு தரையூர்தியும் இருந்தன. இதன் நோக்கம் தரையிறக்கியை மெதுவாக நிலாத்தரையில் 2019 செப்டம்பரில் இறக்கி தரை ஊர்தியை நிலாவில் இயக்குதலாகும். 

முந்தைய அறிக்கைகளில் இருந்து இந்தியாவும் யப்பானும் கூட்டாக நிலாத் தென்முனைக்குச் செல்லத் திட்டமிட்டது தெரிய வந்துள்ளது. இதில் யப்பான் ஏவுகலத்தையும் தரையூர்தியையும் இந்தியா தரையிறக்கியையும் வடிவமைப்பதாக இருந்துள்ளது. இத்திட்டத்தில் களப் பதக்கூறுகள் எடுத்தலும் நிலாவில் இரவில் வாழும் தொழில்நுட்பங்களும் அடங்கியுள்ளன.


சந்திரயான்-2 திட்ட விக்ரம் தரையிறங்கியின் மென்மையான தரையிறக்கம் பொய்த்துப்போனதால், 2025 ஆம் ஆண்டின் கூட்டுச்செயல் திட்டத்தைச் சிறப்பாக முடிக்க, நிலாவில் மெதுவாகத் தரையிறங்கும் மற்றொரு திட்டம் இந்தியாவுக்குத் தேவையாகிவிட்டது.


ஐரோப்பிய விண்வெளி முகமை(ESA) இயக்கும் ஐரோப்பிய விண்வெளிக் கண்காணிப்பு(எசுட்டிராக்) ஓர் ஒப்பந்தப்படி இத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு நல்கும். இந்தப் புதிய இணை ஒத்துழைப்பு ஏற்பாட்டின் கீழ் ஐரோப்பிய விண்வெளி மையம் முதல் இந்திய மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான்-1, சந்திரயான்-3 நிலாச் செயற்கைக்கோள், சூரிய ஆராய்ச்சித் திட்டமான ஆதித்யா-எல்-1 போன்ற இசுரோவின் விண்வெளிப் பயணத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்கும். கைம்மாறாக, எதிர்கால எசா(ESA) திட்டங்கள், இசுரோ இயக்கும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இசுட்டிராக்) நிலையங்களின் ஒத்துழைப்பைப் பெறும். 


சந்திரயான்-3 நோக்கம்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சந்திரயான்-3 இன் நோக்கங்களாகப் பின்வருபவற்றைக் கொண்டுள்ளது.

1 தரையிறங்கியைப் பாதுகாப்பாகவும் மெதுவாகவும் நிலாத்தரையில் இறக்கிவிடல்.

2 நிலாவில் தரையூர்தி உலாவும் திறன்களை நோக்கீட்டாலும் செயல்விளக்கத்தாலும் நிறுவுதல்

3 நிலாவின் உட்கூற்றை நன்கு புரிந்து கொள்ளவும் நடைமுறைக்குப் பயன்படுத்தவும் நிலாத்தரையில் கிடைக்கும் வேதி, இயல்தனிமங்களின் மீது களத்திலேயே அறிவியல் செய்முறைகளை மேற்கொண்டு அவற்றின் நோக்கீடுகளைப் பதிவுசெய்தல் கோளிடை எனும் சொல் இருகோள்களுக்கு இடையே தேவைப்படும் தொழில்நுட்பங்களை உருவாக்கிச் செயல்படுத்தலைக் குறிக்கும் அடைமொழியாகும்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad