Questions and answers about Chandrayaan
சந்திராயன் 3 நிலவில் தரையிறங்கியது எப்போது?
2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் நாள் மாலை 6 மணி 4 நிமிடம் நேரத்தில் நிலவின் தென்பகுதியில் தடம் பதித்தது.
சந்திராயன் 3 திட்ட இயக்குநர் யார்?
சந்திராயன் 3 திட்ட இயக்குநர் வீர முத்துவேல். இவர் சந்திராயன் 2 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட போதும் திட்ட இயக்குநராக செயல்பட்டார்.
சந்திரயான் 3 பெயர் என்ன?
அதன்படி தற்போது சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கியுள்ள இடத்திற்கு இந்தியா "சிவசக்தி" என பெயர் வைப்பதாகவும் இந்த பெயரை சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றி பாதைக்கு எடுத்துச் சென்றதில் பெண்கள் மற்றும் ஆண்களின் பங்கு அதிகமாக இருப்பதால் இந்த பெயரை இந்தியா தேர்வு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்
சந்திரயான் 3 எந்த நோக்கத்திற்காக ஏவப்பட்டது?
ஏவுதல் சந்திரயான் -3 திட்டமிட்டபடி 2023 ஜூலை 14, இசீநே 2:35 மணி(இசீநே) பிற்பகலில் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில், சென்னைக்கு 80 கி. மீ. (50 மைல்) வடக்கே அமைந்துள்ள சிறி அரிகோட்டா நகரத்தில் உள்ள சத்தீசு தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.
சந்திராயன் திட்ட இயக்குனர் யார்?
நிலவு குறித்த ஆய்வுக்கு முதலில் வித்திட்டது சந்திரயான் 1 திட்டம்தான். இந்த திட்டத்தின் இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை பணியாற்றியுள்ளார். ரூ. 386 கோடியில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் மகத்தான வெற்றி பெற்றது.
சந்திரயான் 3 என்ன செய்யும்?
சந்திரயான்-3 மேற்கொள்ளும் ஆய்வுகளில், அதன் தரையிறங்கி கலன், ஊர்திக்கலன், உந்துவிசைக் கலன் மட்டுமின்றி சந்திரயான்-2இன் ஆர்பிட்டரும் பெரும் பங்கு வகிக்கப் போகின்றது. நிலாவின் தென் துருவப்பகுதியில் 70 டிகிரி அட்சரேகையில் லேண்டர் தரையிறங்குகிறது. அந்தப் பகுதியில்தான் சந்திரயான்-3 தனது ஆய்வுகளைச் செய்யப் போகிறது.
சந்திராயன் 1 எப்போது விண்ணில் ஏவப்பட்டது?
சந்திரயான் -1 திட்டம் 2008, அக்தோபர் 22 இல் விண்ணில் ஏவப்பட்டது.
சந்திராயன் 2 திட்ட இயக்குனர் யார்?
வனிதா முத்தையா 36 வயதான வனிதா முத்தையா சந்திரயான் 2 திட்டத்தின் இயக்குநராக செயல்பட்டார்
நிலவிற்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய விண்கலம் எது?
நிலவிற்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய விண்கலம் சந்திராயன்–1 ஆகும்.