Type Here to Get Search Results !

சுவிட்சர்லாந்து அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்

சுவிட்சர்லாந்து சிறப்புகள்

கூட்டாட்சியின் அதிகாரத் தலைமையிடமாக பேர்ண் நகரமும் நாட்டின்பொருளாதார மையங்களாக உலகளாவிய நகரங்களான ஜெனீவாவும், சூரிச்சும் திகழ்கின்றன. இங்கு ஆறோ அல்லது கடலோ கிடையாது.. அதற்குப் பதிலாக இங்கு நிறைய ஏரிகள்(Lakes) உள்ளன. மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்றது ஜெனீவா ஏரி!



சுவிட்சர்லாந்து அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்

1. எழுதப்பட்ட அரசியலமைப்பு

சுவிற்சலாந்து அரசியலமைப்பு எழுதப்பட்ட நீண்ட அரசியலமைப்பாகும். இது 04 அத்தியாயங்களையும் 196 உறுப்புகளையும் கொண்டதாகும். இதன்படி தற்போதைய

அரசியலமைப்பு 1998 டிசம்பர் 18ம் திகதி சமஷ்டி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன்

1999 ஏப்ரல் 04ம் திகதி மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் மக்களினால் அங்கீகரிக்கப்பட்டதாகும். 

2. நெகிழா அரசியலமைப்பு

சுவிற்சலாந்து அரசியலமைப்பு நெகிழா அரசியலமைப்பாகும். இங்கு அரசியலமைப்பினை திருத்துவது கடினமானதாகும். அரசியலமைப்பினை திருத்துவதற்கு மக்கள் தீர்ப்பு, தொடக்க உரிமை ஆகிய இரு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

சுவிற்சலாந்து அரசியலமைப்பின் 139 ஆவது உறுப்புரை அரசியலமைப்பு திருத்தம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி குறிப்பிடுகின்றது. இதன்படி சுவிற்சலாந்து மக்களில் 100,000 லட்சம் பேர் 18 மாதங்களுக்கு தமது கையொப்பங்களை திரட்டி குறித்த அரசியலமைப்பு திருத்தத்தை அல்லது புதிய அரசியலமைப்பு மசோதாவை சட்டமன்றத்திற்கு முன்மொழியலாம்.

அதனை சட்டமன்றம் மறுக்கமுடியாது என்பதுடன் பெரும்பான்மை மக்கள் அங்கீகரிக்கும் பட்சத்தில் திருத்தம் அல்லது புதிய அரசியலமைப்புச் சட்டமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். இது

சுவிற்சலாந்து அரசியலமைப்பு நெகிழா அரசியலமைப்பு என்பதை தெளிவுபடுத்துகிறது.

3. குடியரசு அரசியாட்சிலமைப்பு

சுவிற்சலாந்து ஐரோப்பாவில் உள்ள மிகவூம் பழமையான குடியரசாகும். இந் நாட்டின் 1998 ஆம் ஆண்டு அரசியலமைப்பானது மத்தியில் மட்டுமன்றி பலவிதமான கன்ரங்களிலும் குடியாட்சியை தாபித்துள்ளது. குறிப்பாக நாட்டின் அனைத்து அமைப்புக்களிலும் குடியரசின் செல்வாக்கை காணமுடிகிறது. ஓவ்வொரு கன்ரங்களிலும் பிரதிநிதித்துவ ஆட்சி முறை நடைபெறவேண்டுமென

அரசியலமைப்பு வலியுறுத்துகிறது . 18 வயதினை பூர்த்தி செய்த சகலருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

4. கூட்டாட்சி குழு

சுவிற்சலாந்தில் அதிகாரங்கள் ஒரு தனிநபரிடம் கொடுக்கப்படாமல் ஏழு பேர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதுவே கூட்டாட்சிகுழுவாகும். இதனை  சமஷ்டி கவுன்சில் 04 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு தெரிவு செய்யப்படும் 07 உறுப்பினர்களும் சேர்ந்தே ஆட்சி

செய்கின்றனர்.

5. இரு அவை பாராளுமன்றம்

சுவிற்சலாந்து சட்டவாக்கத்துறை கூட்டாட்சி பாராளுமன்றம் என அழைக்கப்படுகிறது. இதனை சமஷடி அசம்பிளி எனவ்ம் அழைப்பர். இது தேசிய சபை, மாநில சபை என ஈரங்க சபைகளை கொண்டுள்ளது. தேசிய சபை அங்கத்தவர்கள் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட மாநில சபை அங்கத்தவர்கள் மாநிலங்களால் தெரிவு செய்யப்படுவர். பாராளுமன்ற சட்டங்கள் தலையானதும் இறுதியானதுமல்ல. சட்டம் தொடர்பாக பிரச்சினை ஏற்படும் போது அது மக்கள் தீர்ப்பிற்கு விடப்படும்.

6. கட்டாய இராணுவ சேவை

அரசாங்கம் நிலையான படையை வைத்திருக்கக் கூடாதென அரசியலமைப்பு குறிப்பிடுகின்றது. பாதுகாப்பு குடிமக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. 20 வயதை அடைந்த அனைவரும் கட்டாய இராணுவ சேவையில் ஈடுபட வேண்டும் என அரசியலமைப்பு குறிப்பிடுகின்றது.


7. ஜனநாயகத்தன்மை

சுவிற்சலாந்து ஜனநாயகத்தன்மை மிக்கது. இது பழமையான ஜனநாயக நாடாகும். இங்கு மக்கள் இறைமை, பிரஜைகள் மத்தியில் சமத்துவம், சர்வஜன வாக்குரிமை போன்ற ஜனநாயக பண்புகள் காணப்படுகின்றன. இவர்களுக்கு சிறிது காலம் மறுபயிற்சியளிக்கப்பட்டு இராணுவத்திற்கு தயாராக்கப்படுவர். போர்காலங்களில் மட்டுமே படைத்தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். நாடு எப்போதும் போருக்கு தயாராக இருக்க வேண்டுமென வலியுறுத்தபப்பட்டுள்ளது.

8. நேரடி ஜனநாயக ஏற்பாடுகள்

சுவிற்சலாந்தில் குடியொப்பம், தொடக்க உரிமை ஆகிய நேரடி ஜனநாயக ஏற்பாடுகள் பின்பற்றப்படுகின்றன.

9. தாராள சிந்தனைகள்

19ம் நூற்றாண்டில் தாராளவாத சிந்தனைகள் சுவிற்சலாந்து அரசியல்யாப்பு வரைஞர்கள்

மீது தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. இதன்படி சுவிற்சலாந்து அரசியலமைப்பு தாராளவாத சிந்தனைகளின் அடிப்படையில் அமையப்பெற்றுள்ளது எனலாம்.

10. மனித உரிமைகளும் பொறுப்புக்களும்

சுவிற்சலாந்து அரசியலமைப்பானது அடிப்படை சமூக, குடியியல் உரிமைகள் பலவற்றை தமது பிரஜைகளுக்கு வழங்கியுள்ளது. அரசியலமைப்பின் 06ம் உறுப்புரை ஒவ்வொருவரும் தத்தமது

திறமைகளுக்கும்இ தத்தமது அரசுகளினது, சமூகத்தினது நோக்கங்களுக்கும் ஏற்ப தங்களை முன்னேற்றிக் கொள்ள பொறுப்பானவர்கள் எனக் குறிப்பிடுகின்றது. ஏனைய நாடுகளின் அரசியலமைப்புக்களை போலல்லாமல் சுவிற்சலாந்து அரசியலமைப்பில் உரிமைகள் அரசியலமைப்பின் பல பாகங்களிலும் காணப்படுகிறது. சட்டத்தின் முன் சகலரும் சமமாக கருதப்பதுடன் அனைத்து மக்களுக்கும் எழுத்துரிமை, மதவுரிமை, பொருளாதார உரிமை, சமூதாய உரிமை போன்றவை வழங்கப்பட்டுள்ளன.



சுவிட்சர்லாந்து அரசியலமைப்பின் முக்கிய தன்மைகள்

சுவிட்சர்லாந்து விசா

சுவிட்சர்லாந்து சுற்றுலா

சுவிட்சர்லாந்து அரசியலமைப்பு துவக்க பொறுப்பு

Switzerland

பிரான்ஸ் அரசியலமைப்பு

Switzerland capital

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad