இலங்கையை ஆட்சி செய்த 3 ஜரோப்பிய இனத்தவர்கள்?
போர்த்துக்கேயர்
ஒல்லாந்தர்
பிரித்தானியர்
பிரித்தானியர் இலங்கையின் கரையோரங்களில் எப்போது கைப்பற்றினர்?
1996 பெப்ரவரி மாதம் கைப்பற்றினார்கள்
பிரித்தானியர் கண்டி ராஜ்ஜியத்தை இப்போது கைப்பற்றினார்கள்?
1815 கைப்பற்றினார்கள்
ஆங்கிலேயர்கள் இலங்கையில் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள்?
133 வருடங்கள்
போர்த்துக்கேயர் இந்தியாவின் கள்ளிக்கோட்டை துறைமுகத்திற்கு எப்போது வந்தார்கள்?
1498 இல் போர்த்துக்கேய மாலுமி வஸ்கொடகாமா இந்தியாவின் கள்ளிக்கோட்டைக்கு வந்தார்
இலங்கைக்க்கு போர்த்துக்கேயர் எப்போது வந்தார்கள்?
1505 காலித்துறைமுகத்துக்கு வந்தனர்
ஒல்லாந்தர் எப்போது போர்த்துக்கேயரிடமிருந்து இலங்கையின் கரையோர பிரதேசங்களை கைப்பற்றினர்?
1658 இல் கைப்பற்றினர்
பிரித்தானியர் இலங்கையை கைப்பற்றிமைக்கான மூன்று காரணங்களை தருக?
இலங்கையின் அமைவிடம் முக்கியத்துவம்
திருகோணமலை துறைமுகத்தில் முக்கியத்துவம்
வர்த்தக நடவடிக்கைகளில் இலங்கை பெற்று வந்த முக்கியத்துவம்
இலங்கையின் அமைவிடம் முக்கியத்துவம்
இந்தியாவின் கிழக்கு மேற்குக் கரையோரங்களை பிரித்தானியர்கள் கைப்பற்றியிருந்தனர் இப்பிரதேசங்களை பாதுகாக்க இலங்கையை கைப்பற்ற வேண்டி இருந்தது
இந்து சமுத்திரத்தின் கடலாதிக்கத்தை பெற்றுக்கொள்வதற்கு இலங்கையின் அமைவிடம் ஆங்கிலேயருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது இலங்கையில் இருந்துக்கொண்டு இந்து சமுத்திரத்தை கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது
மேலைத்தேய கீழைத்தேய கடற்பாதையின் மத்திய நிலையமாக இலங்கை விளங்கியது. கிழக்கே சீனா கம்போடியா முதலிய நாடுகளிலிருந்து வரும் கப்பல்களும் மேற்கே நன்னம்பிக்கை முனையிலிருந்து வரும் கப்பல்களும் சந்திக்கும் மத்திய நிலையமாக இலங்கை விளங்கியது.
திருகோணமலை துறைமுகத்தின் முக்கியத்துவம்
வங்காள விரிகுடாவையும் தென்கிழக்கு ஆசியாவையும் நோக்கி அமைந்த இயற்கை துறைமுகமாக விளங்கியது.
இது மலைகளால் சூழப்பட்ட இயற்கைத்துறைமுகமாக விளங்கியது. இதனால் பருவக் காற்றுக்காலங்களிலும் சூறாவளிகளிலிருந்தும் இங்கிருந்த கப்பல்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது
இந்து சமுத்திரத்தில் ஆங்கிலேயருக்கும் பிரான்சியருக்கும் இடையே போர் நடந்தது இப்போரில் அதிகமான கப்பல்கள் சேதமடைந்தன இக்கப்பல்களை பாதுகாப்பாக பழுதுப்பார்பதற்கு ஏற்ற இடமாக திருகோணமலைத் துறைமுகம் காணப்பட்டது
வர்த்தக நடவடிக்கைகளில் இலங்கை பெற்றிருந்த முக்கியத் துவத்தை விளக்குக?
மிக உயர்ந்த தர கறுவா மிளகு கிராம்பு ஏலம் சாதிக்காய் போன்ற வாசனைத் திரவியங்கள் இலங்கையின் கிடைத்தமை
யானைகள் முத்து போன்ற வர்த்தகப் பொருட்கள் கிடைத்தமை
பிரித்தானியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு சந்தையாக இலங்கை காணப்பட்டமை