ஆஞ்சநேயர் மந்திரம்
கும்பகருணன் இராவணன் அல்ல என்பதை அனுமன் எவ்வாறு உணர்ந்தான்?
அந்நேரத்தில் கும்பகருணன் போரில் மடிந்த செய்தி இராவணனுக்கு எட்டியது; ஆறாத் துயரத்தில் ஆழ்ந்தான்; 'தம்பியை இழந்தது ஈடு செய்ய முடியாத இழப்பு' என்பதை உணர்ந்தான்; போர்க்களத்தை நோக்கி அவன் சிந்தனை சுழன்றது.
சிறிய திருவடி என்று அழைக்கப்படுபவர் யார்?
திருமாலின் இராமாவதாரத்தில் அவரின் தொண்டரான அனுமன்.
கம்பராமாயணத்தின் உட்பிரிவு எது?
கம்பர் இயற்றிய இராமாயணம் என்பதால், இது கம்பராமாயணம் என்று அழைக்கப்படுகிறது. கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 118 படலங்களையும் உடையது.
அனுமன் பீமன் தந்தை யார்?
அனுமனின் தாய் அஞ்சனாதேவி, தந்தையின் நாமம் கேசரீ (வானரத் தலைவர்). இவர்களின் குல தெய்வம் வாயு (பஞ்சபூதங்களில் ஒருவர்) ஆவார். இவரே அனுமனுக்குத் தந்தையாகவும், குருவாகவும் இருந்து வழி நடத்தியதால் அனுமன் வாயுபுத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
கம்பராமாயணம் மூல நூல் எது?
கம்பராமாயணம் என்பது கம்பரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்களுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். மூல இராமாயணத்தினை இயற்றியவர் வால்மீகி முனிவர் இவர் வடமொழியில் இராமாயணத்தினை இயற்றியிருந்தார்.
அனுமன் யார் மைந்தன்?
அஞ்சனை மைந்தன் என்றும் வாயு புத்ரன் என்றும் அழைக்கப்படும் ஆஞ்சநேயர், ராமாயணத்தில் ராமனுக்கு தொண்டனாய் இருந்தவர். கடல் கடந்து சென்று சீதையை அடையாளம் காட்டியவர்.
ஆஞ்சநேயர் யாருடைய அவதாரம்?
அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர் என்கின்றனர்.
ஆஞ்சநேயருக்கு உகந்த நாள் எது?
ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம். புதன், வியாழன், சனி இம்மூன்று கிழமைகளில் வழிபடுவதால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும். ஆஞ்சநேயரை பல விதமான முறைகளில் வழிபாடு செய்வதால் நினைத்தது நினைத்த நேரத்தில் நடைபெறும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும்.
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ஏன்?
உடனடியாக தனக்கு அருகில் படந்து சென்ற வெற்றிலைக் கொடியை எடுத்து, மாலையாக்கி அனுமனின் கழுத்தில் அணிவித்தாள் சீதை. மகாலட்சுமியின் அம்சமான சீதா தேவியின் கைகளால் அணிவிக்கப்பட்ட மாலையால் மனம் மகிழ்ந்தார் அனுமன்
அனுமன் பீமன் தந்தை யார்?
அனுமனின் தாய் அஞ்சனாதேவி, தந்தையின் நாமம் கேசரீ (வானரத் தலைவர்). இவர்களின் குல தெய்வம் வாயு (பஞ்சபூதங்களில் ஒருவர்) ஆவார். இவரே அனுமனுக்குத் தந்தையாகவும், குருவாகவும் இருந்து வழி நடத்தியதால் அனுமன் வாயுபுத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
அனுமனை எப்படி வழிபடலாம்?
துளசி மாலையும் வெற்றிலை சுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு விஷேசமானவை. பூஜையை ஆரம்பிக்கும்போது ஸ்ரீ ராமஜெயம் அல்லது ஸ்ரீராம ஜெயராம ஜய ஜய ராம என்ற மந்திரத்தை 54 அல்லது 108 முறை தியானிக்க வேண்டும். அதன் பிறகு தமது பிரார்த்தனையைச் சொல்லி நாமாவளி மற்றும் மலர் வழிபாட்டின் அர்ச்சனை செய்ய வேண்டும்.
அனுமனை எப்படி வழிபடலாம்?
செவ்வாய்கிழமையில் அனுமனை வழிபடும் முறை :
விரதம் - செவ்வாய்கிழமையில் அனுமனுக்கு விரதம் இருந்து, அருகில் உள்ள கோவிலுக்கு சென்று அனுமனை வழிபடுவது சிறப்பானதாகும். மாலையில் எளிமையான உணவுகளை உண்டு விரதத்தை நிறைவு செய்யலாம். இனிப்பு ஏதாவது சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்வத சிறப்பு.
துன்பம் போக்கும் ஆஞ்சநேயர் 108 போற்றி
துன்பங்களில் இருந்து விடுபட நினைப்பவர்கள் அனுமனுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது அனுமனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வரலாம்.
1. ஓம் அனுமனே போற்றி
2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி
3. ஓம் அறக்காவலனே போற்றி
4. ஓம் அவதார புருஷனே போற்றி
5. ஓம் அறிஞனே போற்றி
6. ஓம் அடக்கவடிவே போற்றி
7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி
9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி
10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி
11. ஓம் ஆனந்த வடிவே போற்றி
12. ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
14. ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
15. ஓம் இசை ஞானியே போற்றி
16. ஓம் இறை வடிவே போற்றி
17. ஓம் ஒப்பிலானே போற்றி
18. ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
19. ஓம் கதாயுதனே போற்றி
20. ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
21. ஓம் களங்கமிலாதவனே போற்றி
22. ஓம் கர்மயோகியே போற்றி
23. ஓம் கட்டறுப்பவனே போற்றி
24. ஓம் கம்பத்தருள்பவனே போற்றி
25. ஓம் கடல் தாவியவனே போற்றி
26. ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
27. ஓம் கீதாபாஷ்யனே போற்றி
28. ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
29. ஓம் கூப்பிய கரனே போற்றி
30. ஓம் குறுகி நீண்டவனே போற்றி
31. ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி
32. ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி
33. ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
34. ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
35. ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி
36. ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
37. ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
38. ஓம் சீதாராம சேவகனே போற்றி
39. ஓம் சூராதி சூரனே போற்றி
40. ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி
41. ஓம் சொல்லின் செல்வனே போற்றி
42. ஓம் சூரியனின் சீடனே போற்றி
43. ஓம் சோர்வில்லாதவனே போற்றி
44. ஓம் சோக நாசகனே போற்றி
45. ஓம் தவயோகியே போற்றி
46. ஓம் தத்துவஞானியே போற்றி
47. ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
48. ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
49. ஓம் தீதழிப்பவனே போற்றி
50. ஓம் தீயும் சுடானே போற்றி
51. ஓம் நரஹரியானவனே போற்றி
52. ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி
53. ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
54. ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி
55. ஓம் பண்டிதனே போற்றி
56. ஓம் பஞ்சமுகனே போற்றி
57. ஓம் பக்தி வடிவனே போற்றி
58. ஓம் பக்த ரட்சகனே போற்றி
59. ஓம் பரதனைக் காத்தவனே போற்றி
60. ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி
61. ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
62. ஓம் பயம் அறியாதவனே போற்றி
63. ஓம் பகையை அழிப்பவனே போற்றி
64. ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி
65. ஓம் பிரம்மச்சாரியே போற்றி
66. ஓம் பீம சோதரனே போற்றி
67. ஓம் புலனை வென்றவனே போற்றி
68. ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
69. ஓம் புண்ணியனே போற்றி
70. ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி
71. ஓம் மதி மந்திரியே போற்றி
72. ஓம் மனோவேகனே போற்றி
73. ஓம் மாவீரனே போற்றி
74. ஓம் மாருதியே போற்றி
75. ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
76. ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
77. ஓம் மூலநட்சத்திரனே போற்றி
78. ஓம் மூப்பில்லாதவனே போற்றி
79. ஓம் ராமதாசனே போற்றி
80. ஓம் ராமநாமப் பிரியனே போற்றி
81. ஓம் ராமதூதனே போற்றி
82. ஓம் ராம சோதரனே போற்றி
83. ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி
84. ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி
85. ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
86. ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
87. ஓம் ராமாயண நாயகனே போற்றி
88. ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
89. ஓம் ராகவன் கண்மணியே போற்றி
90. ஓம் ருத்ர வடிவனே போற்றி
91. ஓம் லட்சியப் புருஷனே போற்றி
92. ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி
93. ஓம் லங்கா தகனனே போற்றி
94. ஓம் லங்காவை வென்றவனே போற்றி
95. ஓம் வஜ்ர தேகனே போற்றி
96. ஓம் வாயுகுமாரனே போற்றி
97. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
98. ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
99. ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
100. ஓம் விளையாடும் வானரனே போற்றி
101. ஓம் விஸ்வரூபனே போற்றி
102. ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி
103. ஓம் வித்தையருள்பவனே போற்றி
104. ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி
105. ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
106. ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி
107. ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி