இராஜதந்திர கடவுச்சீட்டு diplomatic passport sri lanka - 2023
கடவுச்சீட்டில் சிறப்பாக குறிப்பிடப்பட்டிருந்தாலேயொழிய, இக்கடவுச்சீட்டு அனைத்து நாடுகளுக்கும் 10 வருடங்களுக்குச் செல்லுபடியாகும். மிகவும் முக்கியமான ஆட்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் குறித்துரைக்கப்பட்ட பதவிகளை வகிப்பவர்களுக்காக இக்கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும்.
"தகைமை பெற்ற ஆட்களின் பெயர்ப் பட்டியலுக்கான சுற்றறிக்கையைப் பார்க்கவும்."
விண்ணப்பப் பத்திரங்களை எங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம் ?
கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திலில்.
அச்சிடப்பட்ட விண்ணப்பப் பத்திரத்தை இங்கு பதிவிறக்கம் செய்க.
கண்டி, மாத்தறை, வவுனியா மற்றும் குருணாகல் பிராந்திய அலுவலகங்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை ?
விண்ணப்பதாரியின் மிக அண்மையில் பெறப்பட்ட கடவுச்சீட்டும் தரவுகள் பதியப்பட்ட பக்கத்தின் நிழற் பிரதியும். (தயவுசெய்து விபரங்களுக்காக கீழே பார்க்கவும்.)
புகைப்பட ஸ்டுடியோ ரசீது.
விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி.
விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் மூலப்பிரதியும் நிழற்பிரதியும்.
விவாகச் சான்றிதழின் மூலப் பிரதியும், நிழற் பிரதியும். தேவைக்கேற்ப. (விவாகத்திற்குப் பிந்திய பெயரை உறுதிப்படுத்துவதற்காக.)
பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக பாராளுமன்றத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்ட கடிதம்.
வெளிநாட்டுப் பதவிகளுக்காக - வெளியுறவு அமைச்சின் கோரிக்கைக் கடிதம்.
ஏனைய ஆட்களுக்காக - வரிசை அமைச்சினால் வழங்கப்பட்ட கடிதம்.
* செல்லுபடியான கடவுச்சீட்டொன்று ஏற்கெனவே உங்களிடம் இருப்பின் விண்ணப்பப் பத்திரத்துடன் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தை எங்கு சமர்ப்பிக்க வேண்டும் ?
கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு.
இராஜதந்திர கடவுச்சீட்டுக்கான தயாரிப்புக் கட்டணம் யாது ?
சாதாரண அடிப்படையில் - இலங்கை ரூபா. 5,000.00
அவசர அடிப்படையில் - இலங்கை ரூபா. 20,000.00