Type Here to Get Search Results !

General Knowledge Questions and Answers


General Knowledge Questions and Answers



 01  .   இலங்கையை ஆட்சி செய்த 3 ஜரோப்பிய இனத்தவர்கள்? 

 போர்த்துக்கேயர் 

  ஒல்லாந்தர் 

  பிரித்தானியர்

  பிரித்தானியர் இலங்கையின் கரையோரங்களில் எப்போது கைப்பற்றினர்?

 1996 பெப்ரவரி மாதம் கைப்பற்றினார்கள்

பிரித்தானியர் கண்டி ராஜ்ஜியத்தை இப்போது கைப்பற்றினார்கள்?

1815 கைப்பற்றினார்கள்


02.  ஆங்கிலேயர்கள் இலங்கையில் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள்?

        133 வருடங்கள்

03  போர்த்துக்கேயர் இந்தியாவின் கள்ளிக்கோட்டை துறைமுகத்திற்கு எப்போது வந்தார்கள்?

              1498 இல் போர்த்துக்கேய மாலுமி வஸ்கொடகாமா இந்தியாவின் கள்ளிக்கோட்டைக்கு வந்தார்

05.   இலங்கைக்க்கு போர்த்துக்கேயர் எப்போது வந்தார்கள்?

                     1505 காலித்துறைமுகத்துக்கு வந்தனர்

07. ஒல்லாந்தர் எப்போது போர்த்துக்கேயரிடமிருந்து  இலங்கையின்  கரையோர பிரதேசங்களை கைப்பற்றினர்?

                    1658 இல் கைப்பற்றினர்


08.  பிரித்தானியர் இலங்கையை கைப்பற்றிமைக்கான மூன்று காரணங்களை தருக?

இலங்கையின் அமைவிடம் முக்கியத்துவம்

திருகோணமலை துறைமுகத்தில் முக்கியத்துவம்

வர்த்தக நடவடிக்கைகளில் இலங்கை பெற்று வந்த முக்கியத்துவம்

 இலங்கையின் அமைவிடம் முக்கியத்துவம் 


09. இந்தியாவின் கிழக்கு மேற்குக் கரையோரங்களை பிரித்தானியர்கள் கைப்பற்றியிருந்தனர் இப்பிரதேசங்களை பாதுகாக்க இலங்கையை கைப்பற்ற வேண்டி இருந்தது

 இந்து சமுத்திரத்தின் கடலாதிக்கத்தை பெற்றுக்கொள்வதற்கு இலங்கையின் அமைவிடம் ஆங்கிலேயருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது இலங்கையில் இருந்துக்கொண்டு இந்து சமுத்திரத்தை கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது


10.   மேலைத்தேய கீழைத்தேய கடற்பாதையின் மத்திய நிலையமாக இலங்கை விளங்கியது. கிழக்கே சீனா கம்போடியா முதலிய நாடுகளிலிருந்து வரும் கப்பல்களும் மேற்கே நன்னம்பிக்கை முனையிலிருந்து வரும் கப்பல்களும் சந்திக்கும் மத்திய நிலையமாக இலங்கை விளங்கியது.

 திருகோணமலை துறைமுகத்தின் முக்கியத்துவம்


  வங்காள விரிகுடாவையும் தென்கிழக்கு ஆசியாவையும் நோக்கி  அமைந்த இயற்கை துறைமுகமாக விளங்கியது.

  இது மலைகளால் சூழப்பட்ட இயற்கைத்துறைமுகமாக விளங்கியது. இதனால் பருவக் காற்றுக்காலங்களிலும்  சூறாவளிகளிலிருந்தும் இங்கிருந்த   கப்பல்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது

 இந்து சமுத்திரத்தில் ஆங்கிலேயருக்கும் பிரான்சியருக்கும் இடையே போர் நடந்தது இப்போரில் அதிகமான கப்பல்கள்  சேதமடைந்தன இக்கப்பல்களை பாதுகாப்பாக பழுதுப்பார்பதற்கு ஏற்ற இடமாக திருகோணமலைத் துறைமுகம் காணப்பட்டது

11.  வர்த்தக நடவடிக்கைகளில் இலங்கை பெற்றிருந்த முக்கியத்        துவத்தை   விளக்குக?

மிக உயர்ந்த தர கறுவா மிளகு கிராம்பு ஏலம் சாதிக்காய் போன்ற வாசனைத் திரவியங்கள் இலங்கையின் கிடைத்தமை

யானைகள் முத்து போன்ற வர்த்தகப் பொருட்கள் கிடைத்தமை

பிரித்தானியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு சந்தையாக இலங்கை காணப்பட்டமை 


12.  கண்டி  மன்னர்களை சந்தித்த மூன்று ஆங்கிலேய தூதுவர்களை தருக?

ஐோன்பைபஸ் 1762இல் கீர்த்தி ஸ்ரீ ,ராஜசிங்fid சந்தித்தார்

 ஹியூ போயிட் 1882ல் இராஜாதி ராஜசிங்கனை சந்தித்தார் 

றொபட் அண்றுாஸ் 1795 இராஜாதிராஐவிங்கனைசந்தித்தார்


 13.  யூ கடிதம் என்றால் என்ன?


 பிரான்சில் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து பிரான்ஸ் ஒல்லாந்தை கைப்பற்றியது. அவ்வாறு கைப்பற்றியதும் இளவரசன் வில்லியம் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினான் ஒல்லாந்துக்குரிய இலங்கையின் கரையோர பிரதேசங்களை பிரான்சியர் கைப்பற்றி விடுவர் என்று ஆங்கிலேயர் அச்சம் அடைந்தனர். இதனால் கரையோர பிரதேசங்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு வில்லியத்திடம் ஆங்கிலேயர் ஒரு கடிதத்தை பெற்றுக்கெண்டனர் இக்கடிதத்தை மன்னர் இங்கிலாந்தில் உள்ள கியூ மாளிகையில் வைத்து எழுதியதால் இது கியூ  கடிதம் என்று அழைக்கப்படுகின்றது.

14.   ஆங்கிலேயர்  இலங்கையின் கரையேரங்கைளை எப்பேது கைபற்றினர் 

கியூ கடிதத்தை இலங்கையில் இருந்த ஒல்லாந்து ஆளுநர்  பன்எங்கள்பெக் ஏற்றுக்கொள்ளவில்லை இதனால் ஆங்கிலேயர் திருகோணமலையில் இருந்த பெட்ரிக்கோட்டையை 1795 ஆகஸ்ட் 26 இல் கைப்பற்றினர் தொடர்ந்து யாழ்ப்பாணம் மன்னார் கற்பிட்டி கொழும்பு முதலிய அனைத்து கோட்டைகளையும் ஆங்கிலேயர் கைப்பற்றினர்

15.   1797 கழகத்திற்கான காரணங்களை தருக?


ஆங்கில வர்த்தக கம்பெனி    தென்னை வரி உப்பு வரி மீன் வரி புகையிலை வரி முதலிய பல புதிய வரிகளை விதித்தமை

 முன்பு உள்நாட்டு உத்தியோகத்தர்களெ வரி  வசூலித்தார்கள்              அவர்களுக்கு இலங்கை மக்களின் மொழி தெரிந்திருந்தது ஆனால்          வர்த்தக கம்பெனி அவர்களுக்கு பதிலாக வரி வசூலிக்க                   சென்னையிலிருந்து அவுமில்தார்கள் என்ற உத்தியோகத்தர்களை         வரவழைத்தார்கள் இவர்களுக்கு இலங்கை மக்களின் மொழி              தெரியாததால் பல பிரச்சனைகள் ஏற்பட்டன.

 முன்பு பொருட்கள் மூலமாக வரி செலுத்தப்பட்டது ஆனால் அவுமில்தார்கள் பணமாகவே வரிசெலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். பணப்புழக்கம் குறைவாக இருந்த அக்காலத்தில் பணமாக வரி கட்டுவது மக்களுக்கு பிரச்சனையாக இருந்தது. 

 16. மியூரன் குழுவின் சிபாரிசுகள்


 புதியவர்கள் நீக்கப்பட வேண்டும்

  பொருளாகவும் வரி செலுத்தலாம்

 உள்நாட்டு உத்தியோகத்தர்களே வரி வசூலிக்க வேண்டும் 


17.  இரட்டை ஆட்சி


 கரையோர ஆட்சியில் பொருளாதார நடவடிக்கைகள் வர்த்தகக் கம்பனியினாலும் அரசியல் நடவடிக்கைகள் பிரித்தானிய அரசாங்கத்தாலும் மேற்கொள்ளப்பட்டது இது இரட்டை ஆட்சி எனப்பட்டது 1798- 1802  வரை இது இடம்பெற்றது. 


18.  இலங்கையின் முதலாவது பிரித்தானிய ஆளுநராக பிரட்டிக் நோர்த்

      1798- 1805 வரை இலங்கையில் பதவி வகித்தார். 


19.  இரட்டை ஆட்சி தோல்வியடைந்தமைகான காரணங்கள்?

 இரட்டை ஆட்சியில் ஆளுநரின் உத்தியோகத்தர்கள் வர்த்தகக் கம்பனியின் உத்தியோகத்தர்கள் என இரு சாரார் உருவாக்கினர் இவர்கள் இடையே முரண்பாடு ஏற்பட்டது.  கம்பனியின் உத்தியோகத்தர்கள் ஆளுநருக்கு ஒத்துழைக்கவில்லை இதனால் இரட்டை ஆட்சி பலவீனமடைந்தது


20. 1803 படையெடுப்பிற்கான காரணங்கள்?

கண்டியில் மழைக்காலம் தொடங்கியது ஆங்கில வீரர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர். 

அந்த வீரர்களை கொழும்புக்கும் கண்டிக்கும் இடையிலான வீதிகளை தடை செய்தனர் இதனால் உணவையும் ஆயுதங்களையும் பெறுவது ஆங்கிலேயருக்கு கடினமாக இருந்தது மேலும் அவர்களுக்கு மலேரியா நோயும் உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டன.

 கண்டிவீர்ர்களின் திடீர் தாக்குதல் ஆங்கிலேயரின் தோல்விக்கு காரணமாகும்

பிக்குகளும் பிரதானிகளும் மக்களும் மன்னனை ஆதரித்தமையால் மன்னன் இப்படையெடுப்பில் வெற்றி பெற்றான் 


21. 1815 ஆளுநர் பிரவுண்ரிக்  கண்டியை கைப்பற்ற வழிவகுத்த காரணிகளை தருக 

  அரசனுக்கும் பிரதானிகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகள்

 அரசனுக்கும் பிக்குகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகள்

  பிரதானிகளுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடுகள்

  அரசனுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகள்

  ஆளுநரின் திட்டமிட்ட செயற்பாடுகள்

  ஜோன்டொயிலியில் தந்திரமான நடவடிக்கைகள் 


22 அரசனுக்கும் பிரதானிகளும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளை விளக்குக 
  பிரதானிகளிடம் இருந்த பொறுப்புகளை அரசன் தனது நாயக்க உறவினர்களுக்கு வழங்கினான். இதனால் அரசன் மீது பிரதானிகள் அதிர்ச்சி அடைந்தார்கள்

  தன்னை அரசனாகிய பிலிமத்தலாவைக்கு மரண தண்டனை விதித்தான்.

  எகலபொலவின் மனைவியையும் பிள்ளைகளையும் கொடூரமாக கொலை செய்தான்

 பிரதானிகளின் பிரதேசங்களை பிளவு படுத்தினான்

   உதாரணம் சப்ரகமுவ திசாவனியை இரண்டாக பிளவுப்படுத்தினான்

  பிரதானிகள் இடையே பிரச்சனையை உருவாக்கினான்

உதாரணம் பிலிமத்தலாவை மரணத்தின் பின்பும் அவனது முதலமைச்சர் பதவிக்கு  எகலபொலவை நியமித்துவிட்டு இரண்டாவது அமைச்சராக அவனது எதிரியான மொல்லிகொடவை கூடவே நியமித்தான்


*  அரசனுக்கும் பிக்குகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் விளக்குக
           பரணதல தேரர் முதலிய பல  பிக்குகளுக்கு மரண தண்டனை வழங்கியமை

* தலதா மாளிகைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட நவீனப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பிக்குகளின்   சம்மதத்தை பெற்றுக் கொள்ளாமை

போகம்பரை வாவியை விஸ்தரிப்பதற்கு மன்னன் போயமலுவிகாரையையும் 4 தேவாலயங்களையும் அகற்ற நடவடிக்கை எடுத்தான் இதனை பௌத்த விரோத செயல்கள்களாக பிக்குகள் கருதியமை

ü  மன்னன் பௌத்த மதத்தை சேராதவனாக இருந்தமை


v  பிரதானிகளுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் விளக்குக
ü  கொமொல்லிகொடைக்கும் எகலபொலவிற்கும்இடையில் ஏற்பட்ட பிரச்சனையால் கண்டி இராச்சியத்தின் அரசியல் ஒருமைப்பாடு பலவீனமடைந்தது

ü  பிரதானிகள் ஒருவருக்கொருவர் எதிராக செயற்பட்டதால் அரசனுக்கும் அவர்களுக்கும் இடையே இருந்த தொடர்புகள் சீர்குலைந்தது

v       v அரசனுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகளை      விளக்குக


1803 இல் அரசனுக்கு ஆதரவாக இருந்த பொதுமக்கள் 1815 இல் அரசனுக்கு எதிராக மாறினார்கள் இதற்கான காரணங்களாவன

ü  மன்னன் மதுவுக்கு அடிமையாகியமை

ü  சப்றகமுவ கிளர்ச்சி சம்பந்தப்பட்ட நூறுக்கும் மேற்பட்டோருக்கு மன்னன் மரண தண்டனை வழங்கினான்

ü  தனக்கு எதிராக கிளர்ச்சி செய்த எகலபொலவின் மனைவியையும் பிள்ளைகளையும் கொடூரமாக கொன்றமை

ü  மன்னன் பிரதானிகளையும்  பிக்குகளையும் கொன்றமை

ü  சப்ரகமுவ நான்கு கோறளைகளைசேர்ந்த மக்கள் கண்டி நகருக்கு அரசகரும சேவைக்கு வந்தார்கள். அவர்கள் இரவில் கண்டியில் தங்கக்கூடாது என்று மன்னன் கட்டளையிட்டான். இது மக்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தியது

இவ்வாறு மன்னன் மீது அதிருப்தி அடைந்த மக்களே  1815 இல் ஆங்கிலேயர் மன்னனை கைது செய்ய உதவினர் 


  v   முதலாவது சுதந்திரப் போராட்டத்திற்கான                        காரணங்களை      தருக


ü  தமக்கு அரசர் ஒருவர் இல்லை என்ற ஏக்கம் கண்டி மக்களுக்கு ஏற்பட்டமை

ü  புத்தரின் பெளத்த சமயம்  அழிந்துவிடும் என்று மக்களுக்கு ஏற்பட்ட அச்சம்

ü  தமது பழக்க வழக்கங்களை மதிக்காது பிரித்தானியரால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்பட்ட குழப்பம்

பிரதானிகளின் சலுகைகளும் செல்வாக்கும் பாதிக்கப்பட்டமை

சிங்களவர்கள் அதிகமாக வாழும் வெல்லஸ்ஸ பகுதிக்கு மடிகே முகாந்திரம் பதவிக்கு ஹஜ்ஜி மரிக்கார் என்ற முஸ்லிமை ஆங்கிலேயர்கள் நியமித்தார்கள் இதுவே போராட்டத்திற்கான உடனடி காரணமாகும். 


v  சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் சிலரை தருக

ü  கெப்பெட்டிபொலநிலமே

ü  மடுகல்லதிசாவை

ü  கிவுலெகெதர மொஹட்டால

ü  பிலிமத்தலாவை

ü பட்டாவே ரட்டராலே



 v  போராட்டம் பரவிய இடங்களை தருக

ü  வெல்லஸ்ஸ

ü  தும்பறை

ü  ஹரிஷ்பத்துவ

ü  மாத்தளை

ü  நுவரகலாவிய 

ü  சப்ரகமுவ

üபஸ்துன்கோறளை


v  ஒவ்வொரு பகுதிக்கும்  தலைமை தாங்கிய கிளர்ச்சி              தலைவர்களை தருக

ü  கெப்பெட்டிபொலநிலமே - ஊவா வெல்லஸ்ஸ பகுதி

ü  மடுகல்லதிசாவை - தும்பறை பகுதி

ü  உடகம்பாநிலமே -  தும்பறை பகுதி

ü  பிலிமதலாவ - ஏழு கோறளை பகுதி




v 1818 போராட்டம் தோல்வி அடைந்ததற்கான                காரணங்களை  தருக

          ü  போராட்டம் திட்டமிட்டு நடத்தப்படவில்லை

    ü  எல்லா கட்சி தலைவர்களும் ஒரே நேரத்தில் தாக்குதலை                 மேற்கொள்ளவில்லை

    ü  போராட்டத்தை அடக்குவது ஆங்கிலேயருக்கு இலகுவானதாக              அமைந்தது


ü  ஆங்கிலேயரால் கிளர்ச்சியை அடக்க கடுமையான முறைகள் பின்பற்றப்பட்டன

ü  கிளர்ச்சியை அடக்க ஆங்கிலேயர் பால்நில கொள்கையை கடைப்பிடித்தார்கள் போராட்டக்காரர்களின் வீடுகளையும் பயிர்களையும் தீயிட்டு கொளுத்துவது பால்நில கொள்கையாகும்

ü   போராட்ட தலைவர்களிடையே முரண்பாடுகள் ஏற்பட்டமை

ü  ஆங்கிலேயர் துப்பாக்கி பீரங்கி முதலிய நவீன ஆயுதங்களை பயன்படுத்தினர் அவற்றுக்கு முகம் கொடுக்க கிளர்ச்சியாளர்களால் முடியவில்லை

ü  அரசனாக முன்வந்த துரைசாமி போலியானவன் என்று மக்களுக்கு தெரிய வந்தது அவன் வில்பாவே என்ற இடத்தில் இருந்து வந்த பிக்கு என மக்கள் அறிந்து கொண்டமை


v 1818 சுதந்திரப் போராட்டத்தின் விளைவுகளை தருக

போராட்டத்திற்கு தலைமை தாங்கிய கொப்பட்டிபொல மடுகல்ல எல்லேபொல ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
எகலபொல முதலிய சிலர் மொரிசியஸ் தீவுக்கு நாடு கடத்தப்பட்டனர்
1815 கண்டி ஒப்பந்தம் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக 1818  கண்டி பிரகடனம் வெளியிடப்பட்டது பிரகடனத்தில் 56 வாசகங்கள் இடம் பெற்றன
கண்டி ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட பிரதானிகளின் அதிகாரங்களும் சலுகைகளும் நீக்கப்பட்டன அவை பிரித்தானிய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது 


1848 கிளர்ச்சிக்கான காரணங்களை தந்து விளக்குக 

ü  கிராம சபைகள் ஒழிக்கப்பட்டமை

கோல்புறூக்சபையின் சிபாரிசினால; கிராம சபைகள் ஒழிக்கப்பட்டன. இச்சபைகளே கிராமங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்த்து வைத்தன அணைக்கட்டு கால்வாய் குளம் என்பவற்றை இச்சபைகளே மேற்பார்வை செய்தன கிராமசபைகளை ஒழித்ததால் கிராமிய விவசாயம் பாதிக்கப்பட்டது


ü  காணி விற்பனை கொள்கை

காணியை விற்று அரசாங்கம் வருமானத்தைப் பெற வேண்டும் vன்று கோல்புரூக் சிபாரிசு செய்தது. இதற்கமையவே அரசாங்கம் 1840 இல் காணி சட்டத்தை கொண்டு வந்தது இச்சட்டத்தை பயன்படுத்தி மலையக மக்களின் காணிகளை ஆங்கில அரசாங்கம் சுவீகரித்தது. இதனால் மக்களின் விவசாயம் மந்தை வளர்ப்பு பாதிக்கப்பட்டன இதனால் இக்கிளச்சியை விவசாயிகளை முன்னின்று நடத்தினர்.

ü  பிரித்தானியர் பௌத்த சமயத்தை புறக்கணித்தனர் மிஷனரிகளை வரவழைத்து புரட்டஸ்தாந்து சமயத்தை பரப்ப அதிக நடவடிக்கை எடுத்தனர்

ü   பிரித்தானியர் சிங்கள மொழியை அலட்சியம் செய்து ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் வழங்கினர்.

ü   ஆளுநர் டொரிங்டன் அதிக வரிகளை விதித்தது கிளர்ச்சிக்கான உடனடி காரணமாகும் இவர் முத்திரைவரி  துப்பாக்கி வரி கடை வரி நாய் வரி வண்டி வரி தோனி வரி ஆள்வரி என்பவற்றை விதித்தார் துப்பாக்கி வupயாக வருடத்திற்கு இரண்டரை சிலிங் செலுத்த வேண்டியிருந்தது வருடத்திற்கு ஆறு நாட்கள் பாதை அமைக்கும் பணியில் ஈடுபடாதவர்கள் ஆள் வரி செலுத்த வேண்டியிருந்தது. 

 1848 போராட்டம் தோல்வி அடைந்ததற்கான காரணங்களை தருக

ü  போராட்டம் சில பகுதிகளில் மாத்திரம் தீவிரமாக நடைபெற்றது
ü  ஆங்கிலேயர் போராட்டம் பரவுவதை ஆரம்பத்திலேயே தடுத்து விட்டனர் இதனால் மாத்தளை குருநாகல் கண்டி ஆகிய பிரதேசங்களிலேயே போராட்டம் நடத்தப்பட்டது
ü  ஆளுநர் டொரிங்டன் மார்சலோ என்ற ராணுவ சட்டத்தைப் பிறப்பித்து போராட்டக்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.


·         கடஹபொல தேரர் 1848.8.6 சுட்டுக்கொல்லப்பட்டார்

·         புரன் அப்பு  1848.8.8 ல் சுட்டுக்கொல்லப்பட்டார்

·         கொங்காலேகொடபண்டா நூறு கசையடியுடன் நாடு கடத்தப்பட்டார்

ü  போராட்டம் முறையாக திட்டமிடவில்லை 
ü  ஆங்கிலேயரிடம் நவீன ஆயுதங்கள் இருந்தன
ü  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் விவசாயிகளாக இருந்ததனால் அவர்களுக்கு போர் பயிற்சி இருக்கவில்லை


      1848 போராட்டத்தில் விளைவுகளை விளக்குக

போராட்டத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு பேலி என்பவரின் தலைமையில் ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது
 குழுவின் சிபாரிசுக்கு அமைய போராட்டத்திற்கு காரணமான ஆளுநரின் பதவி நீக்கப்பட்டு இங்கிலாந்துக்கு திருப்பி அழைக்கப்பட்டார்
 விவசாயத்தை நீர்ப்பாசன நடவடிக்கைகளை மேம்படுத்த ஆங்கிலேயர் நடவடிக்கை எடுத்தனர் உதாரணம் 1815 இல் ஆளுநர் என்ரிப்போர்ட் இறக்காமம் குளத்தை திருத்தினார் 1900 ஆம் ஆண்டு நீர்ப்பாசனத் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது
மக்கள் கடுமையாக எதிர்த்த கடை வரி நாய் வரி என்பன நீக்கப்பட்டன முத்திரை வரி துப்பாக்கி வரி ஆள் வரி என்பன மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன
புனித தந்த தாதுவின் பொறுப்பு மீண்டும் ஒருமுறை பிரித்தானிய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது 
    கோல்புறூக் சீர்திருத்தத்தின் முக்கிய                  அம்சங்களை தருக

●     மலை நாட்டையும் கரை நாட்டையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருதல்

●     நிர்வாகச் செலவுகளை குறைப்பதற்கான சில திணைக்களை மூடுதலும் சில திணைக்களங்களை ஒன்றிணைத்தல்

●     குடியியல் சேவையாளர்களின் தொகையை குறைத்தலும் அவர்களின் சம்பளங்களை குறைத்தலும்

●     கிராம சபையை ஒழித்தல்

●     இராஜகாரிய முறையை ஒழித்தல்


v  பிரித்தானியர் பெருந்தோட்ட செய்கையை ஆரம்பிப்பதற்கு    முன்பு இலங்கையில் காணப்பட்ட பொருளாதார                 அம்சங்களை தருக

●     கிராமிய விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார மிச்சமிருந்தது நெட் சகியே பொருளாதாரத்தின் முக்கிய இடம் பெற்றது சேனை செய்கை தோட்டச் செய்கை மந்தை வளர்ப்பு என்பனவும் விவசாயத்தில் அடங்கியிருந்தன

●     சுய தேவை பொருளாதாரம் முறை அக்காலத்தில் நிலவியது தமக்கு தேவையானவற்றை தாமே உற்பத்தி செய்தல் சுயதேவை பொருளாதாரம் எனப்படும்

●     சிறிய அளவில் வர்த்தகமும் சிறு கைத்தொழில்களும் இடம்பெற்றன

●     பெருமளவு தொழில்கள் சாதியை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றன உதாரணம் தச்சனின் மகன் தட்சன் ஆகவே வேலை செய்ய வேண்டும்

●     இராஜகாரிய முறை நிலவியது அரசாங்கத்திற்கு தேவைப்பட்ட உழைப்பு இம்முறையின் மூலமே பெற்றுக்கொள்ளப்பட்டது

●     பண்டமாற்று பெருமளவு இடம் பெற்றது பொருளைக் கொடுத்து இன்னொரு பொருளை பெறுதல் பண்டமாற்று முறை எனப்பட்டது தாழ் நிலங்களில் ஓரளவு பணப்புழக்கமும் கண்டியில் குறைவான பணபுழக்கம் நடைமுறையில் இருந்தன


v  பிரித்தானியர் பெருந்தோட்ட செய்கையை அபிவிருத்தி          செய்த  எடுத்த நடவடிக்கைகளை தருக

●     அரசாங்க காணி விற்கும் கொள்கை ஒன்றை செயற்படுத்தல்

●     உள்நாட்டு வெளிநாட்டு தனியார் முதலீட்டாளர்களுக்கு காணிகளை வாங்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தல்

●     முதலீட்டாளர்களுக்கு சாதகமான கொள்கைகளை வகுத்தல்


இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு கோல்புறூக் சீர்த்திருத்தங்களே

காரணங்களாகும்


v  ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய பெருந்தோட்ட            பயிர்களை தருக

●     கோப்பி

●     சிங்கோனா

●     கொக்கோ

●     தேயிலை

●     இறப்பர்


v கோப்பியை இலங்கையில் அறிமுகப்படுத்தியவர் யார்

●     1822 இல் ஜோர்ஜ் பேர்ட் என்பவர் கம்பளையில் சிங்ஹபிட்டியவில் முதலாவது கோப்பித் தோட்டத்தை ஆரம்பித்தார்

●     1824 இல் ஆளுநர் எட்வர்ட் பான்ஸ் கண்ணொருவையில் தனது சொந்த கோப்பித் தோட்டத்தை ஆரம்பித்தார்


v கோப்பி செய்கை இலங்கையில் வளர்ச்சியடைய                 வழிவகுத்த காரணிகளை தருக

●     பிரித்தானியா பிரான்ஸ் ஜெர்மனி போன்ற நாடுகளில் கோப்பி பிரபலமடைந்தது இதனால் இலங்கையின் கோப்பி ஏற்றுமதி அதிகரித்தது

●     இலங்கையில் இருந்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கோப்பிக்கு தீர்வை குறைக்கப்பட்டது இதனால் இலங்கையில் இருந்த கோப்பி ஏற்றுமதியாளர்கள் இலாபம் அடைந்தனர்

●     குறைந்த செலவில் உயர்தரமான கோபியை இலங்கையில் உற்பத்தி செய்யக் கூடியதாக இருந்தது

●     கோல்புறூக் சிபாரிசுகள் கோபி உற்பத்தியில் பலர் ஈடுபடுவதற்கு வழிவகுத்தன

●     கோபிக்கு ஏற்ற தரை தோற்றமும் கால நிலையில் இலங்கையில் காணப்பட்டமை


vஇலங்கையில் கோப்பி செய்கை வீழ்ச்சி அடைந்ததற்கான      காரணங்களை தருக

●     1844 இல் பிரித்தானியர் சுதந்திர வர்த்தக கொள்கையை பின்பற்றியது இதனால் ஜாவா போன்ற நாடுகள் கோபி அதிகமாக ஏற்றுமதி செய்தனர் இதனால் இலங்கையில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது

●     1848 இல் உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது இதனால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகள் கோபி இறக்குமதியை குறைத்துக் கொண்டன

●     1869 இல் கோபி பயிரை இலை வெளிறல் நோய் ஹெமிலியா வெஸ்டர்டிரிக்ஸ் நோய் தாக்கியது இதனால் கோப்பி தோட்டங்களில் அடைந்தன

 v கோப்பிக்கு பதிலாக பயிர்கள் பயிரிடப்பட்டன அவை ஏன்        வெற்றி அளிக்கவில்லை

●     கோபிக்கு பதிலாக மகிழ்ச்சிக்கான பயிர் அறிமுகமாகியது அப்போதிலிருந்து குயினைன் மருந்து தயாரிக்கப் பட்டது இம்மருந்து மலேரியாவை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டது எனினும் சந்தையில் என்பதற்கான கேள்வி குறைவாக இருந்தமையால் சிக்கன பயிர்ச்செய்கை வெற்றிபெறவில்லை

●     அதன்பின்பு கோகோ பயிர் அறிமுகமாகியது நிழலில் பலரும் பயிராகும் இதற்காக அதிக பணம் செலவாகிறது இதனால் கோகோ பயிர் மாவட்டத்தை தவிர ஏனைய மாவட்டங்களில் வெற்றி அளிக்கவில்லை


vதேயிலைச் செய்கை இலங்கையின் வளர்ச்சி பெற்றமைக்கு   வழிவகுத்த காரணிகளை தருக

●     1873 இல் ஜேம்ஸ் டெய்லர் என்பவர் நூல்கள் என்ற இடத்தில் பத்து ஏக்கரில் தேயிலைச் செய்கை ஆரம்பித்தார் இவ்வாறு தேயிலை ஆரம்பிப்பதற்கு சாதகமான காலநிலை காரணமாக இலங்கையின் தென் மேலும் 2000 மில்லி மீட்டருக்கு அதிகமான மழையை பெறுவதே தேயிலைக்கு சாதகமாக அமைந்தது

●     தேயிலைக்கு லண்டனிலும் உலக சந்தையிலும் அதிக கேள்வி நிலவியது 1873 இல் பத்து ஏக்கரில் பயிர் 1890ல் 2 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடுவதற்கு கேள்வி நிலவியது காரணமாகும் மலைநாட்டில் புகையிரதப் பாதைகளும் தேயிலை பயிர்ச் செய்கை வளர்ச்சி அடைந்தது ஆளுநர் எட்வர்ட் கொழும்பு கண்டி பீதியையும் குருநாகல் கண்டி பீதியையும் பேதியையும் அமைத்தார்

●     மலிவாக தென்னிந்திய தொழிலாளர் கிடைத்தமை தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தொழிலாளர்கள் மிகக் குறைந்த கூலியில் வேலை செய்தனர் இதனால் தேயிலைக்கான உற்பத்தி செலவு குறைவடைந்தது

●     தலவாக்கலையில் அமைக்கப்பட்ட தேயிலை ஆராய்ச்சி நிலையம் இலங்கையின் வளர்ச்சிக்கு பங்காற்றியது



vதெங்கு செய்கை சிறப்பாக நடைபெறும் தென்னை முக்கோணத்தில்     உள்ள நகரங்களை தருக

●     குருநாகல்

●     கம்பகா

●     சிலாபம்


vதெங்கு செய்கையின் வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்திய       காரணிகளை விளக்குக

v  தெங்கு உற்பத்தி ஏற்றுமதி வாய்ப்புக்கள் கிடைத்தன தேங்காய் எண்ணெய் கொப்பரை புண்ணாக்கு முதலியன ஏற்றுமதி செய்யப்பட்டன

v  தேங்காய் இலங்கை மக்களின் முக்கிய உணவுப் பொருளாக விளங்கியது தேங்காய்க்கு உள்நாட்டு சந்தை சாதகமாக காணப்பட்டது பல உள்ளூர் கைத்தொழிலுக்கு மூலப்பொருளாக கொண்டு அமைந்தது உதாரணம் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு கயிறு உற்பத்தி

v  லுனுவில என்ற இடத்தில் தெங்கு ஆய்வு நிலையம் ஏற்படுத்தப்பட்டது இந்நிலையம் தெங்கு விருத்திக்காக பல நடவடிக்கைகளை எடுத்ததுடன் தென்னைமரம் தொடர்பான பல பரிசோதனைகளை மேற்கொண்டது

v  தென்னை பயிருக்கு தேவையான மணல் மண் கடற்காற்று மழை என்பன இலங்கையில் காணப்படுகின்றன இதனால் கம்பகா குருநாகல் சிலாபம் ஆகிய நகரங்களை இணைக்கும் முக்கோணத்திலும் ஏனைய கரையோரங்களிலும் செழிப்பாக வளர்கிறது


vஇலங்கையில் இறப்பர் எங்கு முதலில் பயிரிடப்பட்டது

1877 இல் பேராதனை பூங்காவில் பயிரிடப்பட்டது

vஇலங்கையில் இறப்பர் செய்கையின் வளர்ச்சிக்கு பங்காற்றிய    காரணிகளை தருக

●     ஐரோப்பாவின் மோட்டார் வண்டி தொழில் வளர்ச்சி அடைந்தது இத்தொழிலுக்கு டயர் டியூப் முதலிய ரப்பர் பொருட்கள் தேவை இதனால் மோட்டார் வண்டி தொழில் வளர்ச்சியால் இலங்கையின் இறப்பர் உற்பத்தி அதிகரித்தது

●     இறப்பர் செய்கைக்கு தேவையான மழையும் தரைத்தோற்றமும் மண்ணும் இலங்கையில் காணப்பட்டன இதனால் களுத்துறை  மாவட்டத்தில் முதலில் இறப்பர் வளர்ச்சி அடைந்தது பின்பு சபரகமுவ மாகாணம் மத்திய மாகாணத்திலும் வளர்ச்சி அடைந்தது சாய்வான நிலமும் 2000 மில்லி மீட்டருக்கு அதிகமான மழை வீழ்ச்சியும் இறப்பருக்கு சாதகமாக அமைந்தன

●     இலங்கையின் இறப்பருக்கு ஐக்கிய அமெரிக்காவில் அதிக கேள்வி நிலவியமை

●      முதலாம் உலக யுத்தத்திற்கு பின்பு இலங்கையின் இறப்பருக்கு உலகச் சந்தையில் அதிக விலை கிடைத்தமை

●     உலக சந்தையில் கேள்வி அதிகரித்தமை

●     தென்னிந்திய தொழிலாளர்கள் குறைந்த கூலியில் கிடைத்தமை



vதேசிய விவசாயத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று   ஆங்கிலேயர் தீர்மானித்து அதற்கான காரணங்களை தருக

●     இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் பெருகும் சனத்தொகைக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டுமென்று ஆங்கில ஆட்சியாளர்கள் தீர்மானித்தனர் விவசாயத்தை அபிவிருத்தி செய்தால் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கமுடியும் என ஆங்கிலேயர் கருதினர்

●     1914 தொடக்கம் 1918 காலப்பகுதியில் முதலாம் உலக யுத்தம் நடந்தது இக்காலத்தில் இலங்கைக்கு உணவை கொண்டு வந்த கப்பல்களும் பாதிக்கப்பட்டன இதனால் இலங்கைக்குரிய உணவை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஆங்கிலேயர் தீர்மானித்தனர்

●     1931 டொனமூர் சீர்திருத்தத்தின் ஆங்கிலேயர் இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை வழங்கினர் இதனால் கிராமிய விவசாயம் வளர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது விவசாய அமைச்சராக இருந்த டி எஸ் சேனநாயக்க அவர்கள் பல விவசாயக் குடியேற்றத் திட்டங்களை ஆரம்பித்தார் உதாரணம் கல்லோயா திட்டம்

●     1848 கிணற்றில் விவசாயிகளே மேற்கொண்டார்கள் விவசாயத்திற்கு தேவை செய்யாதது தமது தவறு என்று ஆங்கிலேயர்கள் உணர்ந்தார்கள் இதனால் விவசாயத்தை முன்னேற்ற பல நடவடிக்கைகளை எடுத்தார்கள்



vகாணி சட்டத்தில் அடங்கிய அம்சம் என்ன

v  30 வருடங்கள் தொடர்ச்சியாக ஆவணங்கள் அல்லாத காணிகள் அரசாங்கத்திற்கு சொந்தமாகும் இச்சட்டத்தின்படி மலையக மக்களின் விவசாய காணிகள் அனைத்தும் அரசாங்கத்தால் சேகரிக்கப்பட்டன இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட தால் விவசாயம் மந்தை வளர்ப்பு பெறுதல் என்பன பாதிக்கப்பட்டன


v  vஆங்கிலேயர் சுதேச விவசாயத்தை வளர்க்க எடுத்த நடவடிக்கைகளை தருக

v  குளங்களை புனரமைத்தல்
v  நீர்ப்பாசன திணைக்களத்தை ஆரம்பித்தல்
v  கூட்டுறவு சங்கங்களை ஆரம்பித்தல்



vஆங்கிலேயர் குளங்களையும் அணைக்கட்டுகள் புனரமைத்தமை பற்றி விளக்குக

●     ஆளுநர் என்ட்ரி வாட் இவர் 1855இல் நீர்ப்பாசன நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய ஒரு குழுவை நியமித்தார் இறக்காமம் அம்பாரை குளங்களை புனரமைக்க ஆளுநர் ரொபின்சன் இவர் நீர்ப்பாசனம் தொடர்பாக ஆராய ஆணைக்குழு நியமித்தார் திஸ்ஸமகாராம குளத்தை புனரமைத்து

●     ஆளுநர் வில்லியம் கிழக்கரை அனுராதபுரத்தில் பசவக்குளம் திசாவை மதவாச்சியில் மகாபாவி கலாவாவி என்பவற்றைப் உணர வைத்தார்

●     ஆளுநர் ஆதரவுடன் இவர் 42 குளங்களில் புனரமைத்தல்


 v நீர்ப்பாசன திணைக்களத்தின் அமைத்தமை பற்றி விளக்குக

1900 ஆம் ஆண்டு ஆளுநர் பெஸ்ட் ரீச் நீர்ப்பாசன திணைக்களத்தின் ஆரம்பித்தார் இது பழைய நீர்பாசன கால்வாய்களை திருத்துதல் புதிய கால்வாய் அமைத்தல் ஆகிய இரு பெரும் பணிகளை ஆற்றியது

 vகூட்டுறவு சங்கங்களை ஆங்கிலேயர் அமைப்பைப் பற்றி      விளக்குக

●     1911இல் மக்களும் ஆளுநர் கூட்டுறவு சங்கங்களை ஆரம்பித்தார் இதன் மூலம் பின்வரும் நன்மைகள் ஏற்பட்டன விவசாயிகளுக்கு சங்கங்கள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டது விவசாயிகளை கடன் சுமையில் இருந்து விடுவித்து அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த கூட்டுறவு சங்கங்கள் உதவின விவசாயிகளின் நலன்களை மேம்படுத்த இச்சங்கங்கள் உதவின கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த அவை உதவின பலருக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad