GK Questions in Tamil (GK Questions with Answers in Tamil)
1 . சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் எது?
விடை: திருச்சி, தஞ்சாவூர்
2. சங்க காலத்தில் நிலம் எத்தனை வகைகளாக இருந்தது?
விடை: 5
3. உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
விடை: சுரதா
4. பண்டைய சோழர்களின் சின்னம் எது?
விடை: புலி
5. ”ஓடி கூடி” இச்சொற்களில் அமைந்துள்ள யாப்பிலக்கணம்?
விடை: எதுகை
6. குஜராத் மாநிலத்தின் தலைநகரம் என்ன?
விடை: காந்தி நகர்
7. சோழர்களின் துறைமுகம் எது?
விடை: காவிரிப்பூம்பட்டினம்
8. முதல் சொல்லின் இறுதி எழுத்து அடுத்த சொல்லின் முதல் எழுத்தாக அமைவது?
விடை: அந்தாதி
9. சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம் எது?
விடை: உத்திரப்பிரதேசம்
10. சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் யார்?
விடை: செங்குட்டுவன்