இலங்கையின் வரலாறு (History of Sri Lanka)
இலங்கையின் வரலாறு 1900 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும். இலங்கையின் காலத்தால் முந்திய வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தின்படி இலங்கையின் வரலாறு கிமு 6ம் நூற்றாண்டு அளவில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் எழுநூறு பேருடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகின்றது. எனினும் இதற்கு முன்னரே இயக்கர், நாகர் ஆகிய இரண்டு இனத்தவர்கள் இலங்கையில் வாழ்ந்தது பற்றியும், அவர்கள் இங்கே அரசமைத்து ஆண்டது பற்றியதுமான குறிப்புகளும் மகாவம்சத்தில் காணப்படுகின்றன.
தொடக்கத்தில் தமிழர் பண்பாட்டை பின்பற்றி இருந்த இவர்களிடையே மகிந்ததேரரால் கிமு 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பௌத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பெருமைக்குரிய நாகரிகம், அனுராதபுரம் (அரசு கிமு 200 இலிருந்து கிபி 1000 வரை), பொலன்னறுவை (அரசு கிபி 1070 முதல் கிபி 1200 வரை), ஆகிய இடங்களில் வளர்ச்சியடைந்தன. பொலன்னறுவையின் வீழ்ச்சிக்குப் பின்னர் இலங்கையில் பல்வேறு இராச்சியங்கள் உருவாகின.
இலங்கையின் வடபகுதியின் பண்டைய வரலாறு பற்றி இலங்கை வரலாற்று நூல்களில் அதிக தகவல்கள் இல்லை. எனினும் 14ம் நூற்றாண்டுக்குப் பின்னரே இலங்கையின் வடபகுதியில் இருந்த தமிழர் தனி அரசு பற்றிய ஆதாரங்கள் கிடைக்கப் பெறுகின்றன.
16வது நூற்றாண்டில் நாட்டின் சில கடலோரப் பகுதிகள் போர்த்துக்கேய, ஒல்லாந்திய பிரித்தானியப் பேரரசுகளின் கீழ் இயங்கின. அனுராதபுரத்திலிருந்து கண்டி வரை 181 அரசர்களும் அரசிகளும் வெவ்வேறு காலகட்டங்களில் ஆண்டு வந்துள்ளனர். 1815க்குப் பிறகு முழுமையான நாடும் பிரித்தானிய குடியேற்றவாத ஆட்சியின் கீழ் வந்தது. இவர்களுக்கு எதிராக ஆயுதப் புரட்சிகள் 1818இலும் 1848இலும் நடத்தப்பட்டன. இறுதியாக 1948இல் விடுதலை பெற்றது.
இலங்கையின் மத்திய காலம்
போர்த்துக்கீசக் கலபதி டொன் லொரேன்கோ டி அல்மேதா தலைமையில் 1505-இல் புறப்பட்ட கப்பல் புயலில் சிக்கித்தவித்து பின்னர் கொழும்புக் கரையை அடைந்தது. அங்கே முதலில் வணிகத் தளத்தை அமைத்த போர்த்துக்கீசர், பின்னர் அரசியல் உட்பூசல்களைப் பயன்படுத்தி தமது பலத்தை விரிவாக்கிக் கொண்டனர். 1580-இல் போர்த்துக்கீசத் தளபதி கோட்டே மன்னனுக்கு வாரிசு இல்லாத காரணத்தைப் பயன்படுத்தி இலங்கையை போர்த்துக்கீச மன்னன் பெயரில் உயில் எழுதிக்கொண்டான். பின்னர் 1597-இல் கோட்டே மன்னன் இறக்க, இலங்கையின் கரையோரம் போர்த்துக்கீச வசப்பட்டது. கண்டி இராசதானியுடன் 1638-இல் செய்யபட்ட ஒப்பந்தத்தின் காரணமாக ஒல்லாந்தர் சிறிது சிறிதாக போர்த்துக்கீசர் வசமிருந்த கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றினர்.
1796-இல் ஒல்லாந்தர் பிரித்தானியக் கப்பல்களை திருகோணமலைத் துறைமுகத்தில் தரிக்க இடமளிக்காததால் பிரித்தானியர் முதலில் திருகோணமலையையும் பின்னர் மற்றைய இலங்கைக் கரையோரப் பகுதிகளையும் கைப்பற்றினர். ஒல்லாந்தர் 1801-இல் ஆங்கிலேயருடன் செய்த ஒப்பந்தத்தின் மூலம் ஆங்கிலேயருக்கு இலங்கையை தத்தம் செய்தனர். ஆங்கிலேயர் தமிழரசனுக்கும் சிங்களப் பிரதானிகளுக்கும் இடையில் இருந்த பகையைப் பயன்படுத்தி அதுவரை இலங்கையின் மத்திய பகுதியில், போர்த்துக்கீச, ஒல்லாந்த ஆட்சிகளுக்கு உட்படாது சுதந்திரயரசாயிருந்து வந்த கண்டி இராசதானியையும் 1815-இல் தந்திரத்தால் கைப்பற்றி முழு இலங்கையையும் தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்தனர்.
இலங்கையின் நவீன காலம்
ஆங்கிலேயரின் 133 வருடகால ஆட்சிக்குப் பின்னர், 1948இல் இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சுமுக நிலையில் இருந்துவந்த, தமிழ் - சிங்கள இனங்களுக்கிடையேயான தொடர்புகள், சிறிது சிறிதாகச் சீர்கெடத் துவங்கின. இன முரண்பாடுகளின் வெளிப்பாடுகள், அரசியல், பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, குடியேற்றம் போன்ற பலதரப்பட்ட துறைகளிலும் காணப்பட்டன. ஐரோப்பிய குடியேற்றவாத காலங்களிலும், அதற்கு முன்னரும், சிங்கள சமுதாயத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைச் சரிசெய்வதாகக் கூறிக்கொண்டு சிங்கள அரசியல்வாதிகளும், இனப்பாகுபாடு, இன ஒழிப்பு போன்ற குற்றச்சாட்டுகளுடன் தமிழ் அரசியல்வாதிகளும் போட்டி போட்டுக்கொண்டு காழ்ப்புணர்வுகளை வளர்த்துக்கொண்டிருந்தார்கள்.
1958ல் ஆரம்பித்து, இனக்கலவரங்கள் அடிக்கடி நிகழத்தொடங்கின. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, சிங்களம் மட்டும் சட்டமும், 1972ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய குடியரசு அரசியல் யாப்பும், பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வது தொடர்பில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் முறையும், நிலைமையை மேலும் மோசமாக்கின. 1983க்குப் பின்னர், கடந்த பல வருடங்களாக நடைபெறும் ஆயுதமேந்திய உள்நாட்டுப்போரினால், ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தோ, படுகாயமடைந்தோ, அகதிகளாகியோ, சொத்துக்களை இழந்தோ பாதிக்கப்பட்டுள்ளார்கள். 1987ஆம் ஆண்டில், இந்த உள்நாட்டுப் போருக்குத் தீர்வு காணும் நோக்கத்தில், இலங்கை - இந்திய அரசுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தமொன்றின்படி இந்தியா அமைதிகாக்கும் படையொன்றை (IPKF) இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பியது.
முரண்பாடுகளில் சம்பந்தப்பட்ட முக்கிய தரப்புகளில் ஒன்றான தமிழர் தரப்பை நேரடியாகச் சம்பந்தப்படுத்தாத இந்த ஒப்பந்தம், இந்திய அமைதி காக்கும் படைகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குமிடையில் ஏற்பட்ட போருடன், தோல்வியில் முடிந்தது. 2001 ஆம் ஆண்டில், சமாதான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க நார்வே முன் வந்ததையடுத்து, அந்நாட்டின் அனுசரணையுடன், போர்நிறுத்த ஒப்பந்தமொன்று நடைமுறைக்கு வந்துள்ளதுடன், இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே நேரடிப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன.
சில காரணங்களால், பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தி வைக்கப் பட்டிருந்தாலும், போர் நிறுத்தமும், சமாதான முயற்சிகளும் இன்னும் நடைமுறையில் உள்ளன.
இலங்கையின் புராதன குடிகள்
இலங்கையின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும். இலங்கையின் வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தின்படி இலங்கையின் வரலாறு கிமு 6ம் நூற்றாண்டு அளவில் ஆரியர்களின் வருகைக்கு முன்னர் இலங்கையில் பின்வரும் சுதே மக்கள் வாழ்ந்ததாக கூறப்படுகின்றது.
இயக்கர்
நாகர்
இலங்கை நாணயத்தின் வரலாறு
இலங்கை நீண்ட வரலாற்றையும் அதேபோன்று நீண்டதும் செல்வம் மிகுந்த பொருளாதார வரலாற்றையும் கொண்டதொரு நாடாகும். அத்தகைய வரலாற்றினைக் கற்பது பொருளியலாளாகளுக்கு மட்டுமன்றி சமூகத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் நன்மையளிப்பதாக அமையும் என்பதில் ஐயமில்லை. நாட்டின் வெவ்வேற காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட நாணயக் குத்திகள் அந்நாட்டின் வரலாற்றினைக் கற்கும் பொழுது முக்கிய பங்கினை ஆற்றுகின்றன. அளவில் சிறிதாக இருந்தபோதும் அதன் அற்பசொற்ப விடயங்களினூடாக நாணயங்கள் அவை பயன்படுத்தப்பட்ட நாட்டின் பொருளாதாரம் மற்றும் கலாச்சார வரலாறு பற்றிய பெறுமதிமிக்க தகவல்களை வழங்கக்கூடியதாக இருக்கிறன.
இலங்கையில் தமிழ் மன்னர்களின் ஆட்சி
இலங்கையில் சுகேசனின் ஆட்சி
சுகேசன் தெய்வதி என்னும் அரச குமாரியை விவாகஞ் செய்து மாலியவான், மாலி என்னும் புத்திரர்களைப் பெற்றான். சுகேசனின் ஆட்சி மிகவும் மெச்சத்தக்தாக அமைந்திருந்தது. இவன் கிராமங்கள் தோறும் ஆலயங்களை அமைப்பித்தான். பல வீதிகளைப் புதிதாக உருவாக்கினான். பழைய வீதிகளைப் புதிப்பித்தான், காடுகளை அழித்து நாடுகளாக்கினான். விவசாயத்தை விருத்தியடையச் செய்தான்.
குளங்கள், கால்வாய்கள் பல வெட்டியும் புதுப்பித்தும் பயிர்ச் செய்கைக்கு உதவியளித்தான். நூல் நூற்றல், ஆடை நெய்தல் ஆகிய கைத்தொழில்களையும் விருத்தி பண்ணினான். வைத்தியரையும் வைத்திய நூல்களையும் ஆதரித்ததோடு பல வைத்தியசாலைகளிலும் நிறுவினான். பல பாடசாலைகளை அமைத்தான். பல தமிழ்ச்சங்கங்களையும் உருவாக்கினான். இவன் காலத்தில் தமிழ் மொழியில் எல்லாத் துறைகளிலும் நல்ல நல்ல நூல்கள் எழுந்தன. நீதி பரிபாலனமும் செவ்விதாய் அமைந்திருந்தது. சுகேசன் நாற்பத்தொரு வருடங்களும் ஏழுநாட்களும் ஆட்சி புரிந்த பின் தனது மூத்த புத்திரனாகிய மாலியவானை இலங்கைக்கு அரசனாக்கி காட்டுக்கு சென்றான்.
இலங்கையில் மாலியவான் ஆட்சி
தமிழ் அரசனாகிய மாலியவான் நாகதீவுக்கு அரசனாகி இலங்காபுரம் என்னும் நகரத்தை அழகாக கட்டுவித்து, அதைத் தலைநகராக்கி அங்கிருந்து இலங்கை என்னும் நாகதீவை ஆண்டான். இவன் கட்டுவித்த அரண்மனைகளும் மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் விலையுர்ந்த இரத்தினக் கற்களாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டன. இவனது முடியின் மீது பத்துக் கிரீடங்கள் அமைந்திருந்தன. இவனுடைய சிங்காசனமும் வாளும் முடியும் செங்கோலும் கட்டிலும் நவரத்தினங்களாலும் முத்துகளாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கின. அக்காலத் தமிழர்களில் பலர் எல்லா வசதிகளும் ஒருங்கே அமைந்த பல அடுக்கு மாளிகைகளில் வாழ்ந்தனர்.
இவனது முடியை அலங்கரித்துக் கொண்டிருந்த பத்து கிரீடங்களும் பத்து நாடுகளுக்கு இவன் அதிபதி என்பதை எடுத்து காட்டுகின்றன. இவன் இருபத்தொரு வருடங்கள் இலங்கையை மகோன்னதமாக ஆட்சி புரிந்து வந்தான். மாலியவான் இறந்த பின்பு அவனுடைய தம்பியாகிய சுமாலி என்பவன் ஆட்சி புரிந்தான். இவன் மாந்தையிலிருந்தும் இலங்காபுரத்தில் இருந்தும் அரசான்டான். சுமாலி கேதுமதியை மணந்து ஒரு மகளைப் பெற்றேடுத்தான். அவளின் பெயர் கைகேசி என்பதாகும். சூரியப் பிரகாசம் என்னும் ஆகாய விமானத்தை அவன் வைத்திருந்தான்.
சுமாலியின் ஆட்சி முன்னையவர்களது ஆட்சி போன்று அத்துனை சிறப்பாக அமையாமையால் அவனால் ஐந்தரை வருடங்களும் மூன்றரை மாதங்களுமே ஆட்சி புரிய முடிந்தது. மக்கள் கிளர்ச்சி செய்து அவனை சிங்காசனத்தில் இருந்து நீக்கி விட்டனர். இவனது ஆட்சியில் வெறுப்படைந்த தமிழ்மக்கள் பாண்டி நாடு, சேரநாடு, சோழ நாடு முதலிய தமிழ் நாடுகளில் சென்று குடியேறினர். சுமாலிக்குப்பின் அரசாட்சிக்குரிய கைகேயி சிறு குழந்தையாய் இருந்த படியால் இலங்கையை ஆழ அரசனில்லாதிருந்தது. இதனால் வச்சிரவாகு என்பவன் தனக்கும் இயக்கப் பெண்ணாகிய தேவகன்னி என்பவளுக்கு பிறந்த புத்திரனாகிய வைச்சிரவணானை இலங்கைக்கு அரசனாக்கினான். வச்சிரவாணனுக்கு குபேரன் என்னும் மறு பெயரும் உண்டு.
இலங்கையில் குபேரன் ஆட்சி
குபேரன் அரசானான பின்பு அவனது தாய் வழியைச் சேர்ந்த பல இயக்க குடிகள் இலங்கையில் வந்து குடியேறினார்கள். இவர்களும் தமிழர்களே. நாகரிகத்திலும் கல்வியிலும் இயக்கர் என்னும் தமிழர் மிகவுஞ் சிறந்தவர்களாய் இருந்தார்கள். இயக்கரும் தமிழரும் பேசிய மொழி தமிழேயாகும். பண்டைக்காலத்தில் வரன் என்பவன் புலத்தியவனைப் பெற்றான். புலத்தியன் குணவதியை மணந்து வச்சிரவாகுவைப் பெற்றான். இந்த வச்சிரவாகு குபேரனுடைய தந்தையவான். இந்தக் குபேரன் இலங்கையை நீதியாக ஆண்டான். இவன் புட்பக விமானம் என்னும் ஆகாய ஊர்தியை வைத்திருந்தான்.
இலங்கையில் இராவணன் ஆட்சி
கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும். ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர். இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான்.
அழகாபுரியில் வாழ்ந்தவர்களும் இயக்கர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். குபேரனோடு இலங்கையில் வந்து குடியேறிய தமிழர் குபேரனோடு திரும்பிப் போகாமல் இலங்கையிலேயே தங்கி விட்டனர். குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இவன் இலங்கையை பல வருடங்களாக மாற்றாரும் மெச்சும் வகையில் சிறப்பாக அரசோச்சி வந்தான். இவன் தனது மூதாதைகளில் ஒருவனான மாலியவனைப் போன்றே பத்து நாடுகளுக்கு அரசனாக முடி சூடப்பட்டான்.
இதனால் இவனை தசக்கீரிவன் என்றும் அழைத்தனர். இரமாயணத்தில் கூறுவது போன்று இவனுக்கு பத்து தலைகள் இல்லை. பத்து கிரீடங்களே அன்றி பத்து தலைகள் அன்று. இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள். இராவணன் பல துறைகளிலும் ஒப்பற்று விளங்கினான். சங்கீத துறையானாலும் சரி, போர்த் திறமையானலும் சரி, தவ வலிமையிலும் சரி, கடவுட் பக்தியிலும் சரி இவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாது விளங்கினான். இவற்றை விட யோக சித்திகளும் கைவரப்பட்டவனாக விளங்கினான். இதனால் இவன் தான் நினைத்த வடிவத்தை கொள்ளவும், எதிரிகளுக்கு தெரியாமல் மறைத்து நிற்கக் கூடிய பல சித்துகளில் வல்லவனாக விளங்கினான்.
யாகங்களில் மிருகங்களை பலி கொடுத்தலை இராவணனும் அவனுடைய இனத்தவர்களும் வெறுத்தார்கள். மிருக வதை அவனுடைய காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு பிடிக்காது. இராவணன் சிவபூசை செய்யும் நியமம் உடையவன். ஏகபத்தினி விரதம் பூண்டவன். பழிக்குப் பழி வாங்கும் நோக்குடனேயே சிதையை சிறை வைத்தான். இம்சித்து அல்ல. இவனது பகைவர்களாகி ஆரியர்களே இவன்மீது இவ்வாறு வீண் பழி சுமத்தினர். இவனும் இவனது தாயாகிய கைகேசியும் மனைவியாகிய மண்டோதரியும் சிவபெருமான் இடத்தில் மிகுந்த பற்றுக் கொண்டவர்கள். இந்த இராவணன் ஆகியோரின் ஆட்சிக்காலம் ஈழத்தமிழரின் பொற்காலம் எனப்போற்றப் படுகின்றது.
இராம இராவண யுத்தத்தில் இராவணன் தம்பி விபீஷணன் தமையனாகிய இராவணனை விட்டு நீங்கி இராமன் பக்கம் சேர்ந்து இராவணன் படைப்பலம் யுத்ததந்திர முறைகள், அந்தரங்கள் எல்லாவற்றையும் இராமனுக்கு காட்டிக் கொடுத்து இராவணனின் அழிவுக்கு ஏதுவாக இருந்தான். இராவணனுக்குப் பின் இராமனுடைய அனுசரணையுடன் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டான்.
இதன் மூலம் தமிழரின் வரலாற்றில் மாபெருங் களங்கத்தை ஏற்படுத்தினான். இவன் இராமனது அருவருடியாகி, அடிமைச் சின்னமான ஆழ்வார் பெயருடன் விபீஷண ஆழ்வாராகவே இருந்து இறந்தான். இராவணனின் வீழ்ச்சிக்குப் பின் சேர, சோழ, பாண்டி, ஈழம் ஆகிய திராவிட நாடுகள் ஆரியரின் ஆதிக்கத்திற்குப் உற்பட்டன. எனவே இந்த இராவணன் வரலாறு ஈழத்தமிழர்களாகிய எமக்கு ஒரு பெரும் எச்சரிக்கை எனக் கொள்ள வேண்டும். எமது மக்கள் விபீஷணனைப் போன்று கோடாரி காம்புகளாக மாறக்கூடாது. எல்லாத்தமிழர்களுமே இராவணனைப் போன்று தேச பக்தி உடையவர்களாகவும், வீரம் மிகுந்தவர்களாகவும், வீர சுதந்திரம் வேண்டி நிற்பவர்களாகவும் மாற வேண்டும்.
எப்பொழுது இந்நிலை எம்மிடம் உருவாகின்றதோ அன்றுதான் சுதந்திர தமிழீழத்தை அமைத்து சுதந்திர புருடர்களாக வாழ்வோம். வீபீஷணனின் ஆட்சியுடன் இலங்கையின் பூர்வீக வரலாறும் முடிகிறது எனலாம். சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடும் இலங்கை வரலாறும் விஜயனின் விஜயத்துடன் ஆரம்பிக்கின்றது.
இலங்கையின் வரலாறு தொடர்பான கேள்விகள்.
இலங்கை எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன?ஒன்பது மாகாணங்கள்
வடக்கு மாகாணம்
கிழக்கு மாகாணம்
வடமத்திய மாகாணம்
வடமேல் மாகாணம்
மத்திய மாகாணம்
சபரகமுவை மாகாணம்
ஊவா மாகாணம்
தென் மாகாணம்
மேல் மாகாணம்
இலங்கையில் எத்தனை அரச சேவை மாவட்டங்கள் உள்ளன?
25 மாவட்டங்கள்
கொழும்பு
கம்பகா
கழுத்துறை
கண்டி
மாத்தளை
நுவரெலியா
காலி
மாத்தறை
அம்பாந்தோட்டை
யாழ்ப்பாணம்
மன்னார்
வவுனியா
முல்லைத்தீவு
கிளிநொச்சி
மட்டக்களப்பு
அம்பாறை
திருகோணமலை
குருநாகல்
புத்தளம்
அனுராதபுரம்
பொலன்னறுவ
பதுளை
மொனராகலை
இரத்தினபுரி
கேகாலை
இலங்கையில் எத்தனை தேர்தல் மாவட்டங்கள் உள்ளன?
22
இலங்கையின் தலைப்பட்டினம் எது?
ஸ்ரீ ஜயவர்தனபுர
இலங்கையின் பெரிய நகரம் எது?
கொழும்பு
இலங்கையின் சனாதிபதிகளின் பட்டியல்.
மேன்மைதங்கிய வில்லியம் கொபல்லாவ (மே 22, 1972 - பெப்ரவரி 4, 1978)
மேன்மைதங்கிய ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (பெப்ரவரி 4, 1978 - ஜனவரி 2, 1989)
மேன்மைதங்கிய ரணசிங்க பிரேமதாசா (ஜனவரி 2, 1989 - மே 1, 1993)
மேன்மைதங்கிய டிங்கிரி பண்டா விஜயதுங்கா (மே 2, 1993 - நவம்பர் 12, 1994)
மேன்மைதங்கிய சந்திரிகா குமாரதுங்க (நவம்பர் 12, 1994 - நவம்பர் 19, 2005)
மேன்மைதங்கிய மகிந்த ராஜபக்ச (நவம்பர் 19, 2005 - இன்றுவரை)
இலங்கையின் பரப்பளவு என்ன?
65,610 கிமீ² / 25,332 சதுரமைல்
இலங்கை எப்போது (பிரித்தானியவிடம் இருந்து) சுதந்திரம் பெற்றது?
04.02.1948
இலங்கை அரசை எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
இலங்கை சனநாயக சமத்துவ குடியரசு (Democratic Socialist Republic of Sri Lanka)
இலங்கையில் உயர்ந்த நீவீழ்ச்சி எது?
பம்பரகந்த.
இலங்கையில் நீளமான ஆறு எது?
மகாவலி கங்கை 335 கி. மீ
இலங்கையின் உயர்ந்த மலை எது?
பிதுருதலாகல (Pidurutalagala) கடல் மட்டத்திலிருந்து 2524 மீட்டர் (8200 அடி)
மக்கள் தொகை என்ன?
2009 மதிப்பீடு 20,238,000 - July 2008 குடிமதிப்பு 21,324,791
இலங்கையில் பாவனையில் உள்ள நாணயம் என்ன?
இலங்கை ரூபாய் (LKR)
இலங்கையின் நேர வலயம்
(ஒ.ச.நே + 5.30 மணி (கிறீன்வீச் நேரத்துடன் 5.30 மணி கூட்டவேண்டும்)
இலங்கையின் இணையக் குறி என்ன?
lk
இலங்கையின் தொலைபேசி எண் என்ன?
+94
இலங்கையில் பாவனையில் உள்ள மின்னழுத்தம் எது?
230V
இலங்கை எங்கே அமைந்துள்ளது?
இந்து சமுத்திரத்தில் மையக்கோட்டிற்கு வடக்காக 6 பாகை 54 கலைக்கும் (6°54’ - 6° 9’N), நெட்டாங்கிற்கு கிழக்காக 79°54’ - 79°9’E வும் அமைந்துள்ளது
இலங்கையின் முக்கிய நிலையங்கள்
செய்மதி தகவல் தொடர்பு நிலையம்
பாதுக்கை
புடைவைக் கைத்தொழில் நிலையம்
வியாங்கொடை, பூகொட துல்கிரிய
எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம்
சப்புகஸ்கந்த
பிறிமா மாவு ஆலை
திருகோணமலை
விவசாய ஆராட்சி நிலையம்
மகாஇலுப்பள்ளம, இங்குராகொட, பதல்கொட
தாவரவியல் பூங்காக்கள்
பேராதனை, கனோபத்த, ஹக்கல
தேயிலை ஆராட்சி நிலையம்
தலவாக்கலை
சோயா ஆராட்சி நிலையம்
பல்லேகலை, கண்ணொறுவ
ரயர் (டயர், டியூப்) தொழிற்சாலை
களனி
இறப்பர் ஆராட்சி நிலையம்
அகலவத்தை
வனவிலங்குச் சரணாலயம்
வில்பத்து, யால, உடவளவை, றுகுணு, லகுகல
பருத்தி ஆராட்சி நிலையம்
அம்பாந்தோட்டை
உருளைக்கிழங்கு ஆராட்சி நிலையம்
நுவரேலியா
சீமெந்து தொழிற்சாலை
புத்தளம், காலி
ஓட்டுத் தொழிற்சாலை
அம்பாறை
ஆயுர்வேத ஆராட்சி நிலையம்
நாவின்ன
அரசினர் சுதேச வைத்தியசாலை - இராஜகிரிய
பறவைகள் சரணாலயம்
முத்துராஜவெல, குமண, பூந்தல
குஷ்டரோக வைத்தியசாலை
மாந்தீவு மட்டக்களப்பு
கலாசார முக்கோண வலையம்
கண்டி, அனுராதபுரம், பொலநறுவை
சீனித் தொழிற்சாலை
கந்தளாய்
காரீயச் சுரங்கம்
போகலை
புற்றுநோய் வைத்தியசாலை
மகரகம
துறைமுகங்கள்
கொழும்பு, திருகோணமலை, காலி, அம்பாந்தோட்டை, காங்கேசந்துறை
காகிதத் தொழிற்சாலை
வாளைச்சேனை
ஏற்றுமதிப் பொருட்கள்
தேயிலை, றபர், கறுவா
மிருகக்காட்சிச்சாலை
தெஹிவளை
இலங்கையின் தேசிய சின்னங்கள்
இலங்கையின் தேசிய மரம் - நாகமரம்
இலங்கையின் தேசியப் பறவை - காட்டுக்கோழி
இலங்கையின் தேசிய மிருகம் - யானை
இலங்கையின் தேசிய மலர் - நீலஅல்லி