கடவுச்சீட்டினை விநியோகித்தல்
சாதாரண கடவுச்சீட்டு
அனைத்து நாடுகளுக்கும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை ?
தற்போதுள்ள கடவுச்சீட்டும், தரவுகள் பதியப்பட்டுள்ள பக்கத்தின் நிழற் பிரதியும். (விபரங்களுக்கு இங்கு கீழே பார்க்கவும்.)
புகைப்பட ஸ்டுடியோ ரசீது.
விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி
விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் மூலப்பிரதியும் நிழற்பிரதியும்.
தேவைப்படும் பட்சத்தில் விவாகச் சான்றிதழின் மூலப் பிரதியும், நிழற் பிரதியும். (விவாகத்தின் பின்னர் பாவிக்கப்படுகின்ற பெயரை உறுதிப்படுத்துவதற்காக)
உங்களது தொழிலை உறுதி செய்வதற்கான தொழிற் தகைமைச் சான்றிதழும், அதன் நிழற் பிரதியும். / கல்வி மற்றும் சேவைச் சான்றிதழ்.
சங்கைக்குரிய பௌத்த பிக்குகள்:
பிக்கு சான்றிதழை (சாமனேர சான்றிதழ்) அல்லது பிக்கு பட்டமளிப்புச் சான்றிதழை (உபசம்பதா சான்றிதழ்) அதன் நிழற் பிரதியுடன் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.
* செல்லுபடியான கடவுச்சீட்டொன்று ஏற்கெனவே உங்களிடம் இருப்பின் விண்ணப்பப் பத்திரத்துடன் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவமொன்றைப் பெற்றுக் கொள்வது எப்படி?
கொழும்பு, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில்.
கண்டி, மாத்தறை, வவுனியா மற்றும் குருணாகல் பிராந்திய அலுவலகங்கள்.
உங்கள் பிரதேசத்தின் பிரதேச செயலகத்திலிருந்து.
வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் மூலமாக.
அச்சிடப்பட்ட விண்ணப்பப் பத்திரங்களைப் பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.
விண்ணப்பப் படிவத்தை ஒப்படைக்க வேண்டிய இடம் யாது ?
கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில்.
கண்டி, மாத்தறை, வவுனியா மற்றும் குருணாகல் பிராந்திய அலுவலகங்கள்.
வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தில்.
அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டினை வழங்க எவ்வளவு காலம் செல்லும் ?
சாதாரண அடிப்படையில் - 30 வேலை நாட்கள்
அவசர அடிப்படையில் - அதே தினத்தில்
அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டை தயாரிப்பதற்கான கட்டணம் யாது ?
சாதாரண அடிப்படையில் - இலங்கை ரூபா. 5,000.00
அவசர அடிப்படையில் - இலங்கை ரூபா. 20,000.00