1. எவரெஸ்ட் சிகரம் (8848 மீ ), நேபாளம்.
1953-ஆம் ஆண்டில் சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே ஆகியோர் முதன் முதலில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்கள்.
சிகரத்தின் சரியான நிலையை முதலில் கண்டுபிடிக்க முயன்ற நில அளவையாளர் ஜெனரல் ‘சர் ஜார்ஜ் எவரெஸ்ட்’ நடத்தியதால் ஆய்வின் பின்னர் ‘மவுண்ட் எவரெஸ்ட்’ என்று பெயர் பெற்றது. இதுவே உலகின் மிக உயரமான மலையில் முதலிடம் ஆகும் எவரெஸ்ட் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8848 மீ (29 ,029 அடி) உயரம் கொண்டது.
நேபாளத்தில் “சாகர் மாதா” என்றும் சீனாவில் சோமோலுங்க என்றும் அழைக்கப்படுகிறது.
2. மவுண்ட் கே 2 (8611 மீ ), பாகிஸ்தான்.
எவரெஸ்ட் சிகரத்திற்கு பிறகு உலகின் இரண்டாவது மிக உயர்ந்த மலை கே 2 ஆகும். 8611 மீட்டர் உயரம் கொண்டது. இது சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இதனை சீனர்கள் கோகிர் (Qogir) என்றும் அழைப்பார்கள்.
கே2 மலை ஏறுவது சவாலான விசியம் அனாலும் 250 நபர்களுக்கு மேல் வெற்றிகரமாக மலை உச்சத்தை அடைந்துள்ளனர். இதுவே உலகின் இரண்டாவது உயர்ந்த சிகரம் என அழைக்கப்படுகிறது.
3. மவுண்ட் கஞ்சன்ஜங்கா (8586 மீ ), நேபாளம் /இந்தியா.
கஞ்சன்ஜங்கா என்பது “பனியின் ஐந்து பொக்கிஷங்கள்” என்று பொருள்தரும். ஏனென்றால் இது தங்கம், வெள்ளி, கற்கள், தானியங்கள் மற்றும் புனித புத்தகங்கள் என்று கடவுளின் ஐந்து பொக்கிஷங்கள் கொண்டு ஆசிர்வதிக்கப்பட்டவையென நம்பப்படுகின்றது.
இது நேபாளத்தில் உள்ள இரண்டாவது உயரமான மலையாகும். ஜோ பிரவுன் மற்றும் ஜார்ஜ் பேண்ட் ஆகியோர் 1995-ஆம் ஆண்டில் உலகின் முதல் நபர்களாக ஏறினார்கள் .
4. மவுண்ட் லோட்ஸ் (8511 மீ ), நேபாளம்.
மவுண்ட் லோட்ஸ் எவரெஸ்ட் சிகரத்தோடு இணைந்து காணப்படும், ஆபத்தான மற்றும் வியக்கத்தக்க பாறை பாதைகளை கொண்டது. ஏற முயற்சிக்கும்போது பலர் தோல்வியுற்றுள்ளனர் . மேலும் உயிர் இழப்புகளும் நடந்துள்ளது. இம்மலை திபெத்துக்கும் (சீனாவின் பகுதி) நேபாளத்திற்கும் இடையே உள்ள எல்லைப்பகுதியில் உள்ளது.
உலகில் மிக ஆபத்தான மலைகளில் ஒன்றாக அறியப்படுகிறது. எர்னஸ்ட் ரெய்ஸ் மற்றும் பிரிட்ஸ் லூட்சிங்கர் 1956-இல் வெற்றிகரமாக இந்த உச்சத்தை ஏறினார்கள்.
5. மாகலு மலை (8462 மீ ), நேபாளம்.
மிகவும் கூர்மையான விளிம்புகள் மற்றும் செங்குத்தான பிட்சுகளை கொண்டுள்ளது. இதனால் ஏற மிகவும் கடினமாக இருக்கும். இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சிகரம்.
அதன் வடிவம் நான்கு பக்க பிரமிடு போல காட்சி அளிக்கும். லியோனல் டெர்ரே மற்றும் ஜீன் கூஷி ஆகியோர் 1955-ஆம் ஆண்டில் வெற்றிகரமாக ஏறினார்கள் .
6. மவுண்ட் சோ ஓயு (8201 மீ ), நேபாளம் .
இந்த மலை ஏற மிக எளிதாக அணுகக்கூடிய மலைகளில் இதுவும் ஓன்று. 1954-இல் எச்.டிச்சி, எஸ்.ஜோசலர், பசாங்லாமா இதை முதலில் ஏறி வெற்றி கண்டவர்கள் ஆவார்கள். சோ ஓயு என்ற இந்த மலை திபேத்தியில் “டர்க்கைஸ் தேவி” என்றும் அழைக்கப்படுகிறது. எவரெஸ்ட் மலைக்கு 20 கி.மீ மேற்கிலும் நேபாளம் மற்றும் சீனாவிற்கும் இடையிலும் உள்ளது.
7. மவுண்ட் தவுலகிரி (8167 மீ ),நேபாளம்.
மத்திய நேபாளத்தின் வடக்கே அமைந்துள்ள உலகின் ஏழாவது மலை தவுலகிரி மலையாகும். இது சுற்றுலா பயணிகள் மற்றும் ஏறுபவர்களின் முக்கியப் புள்ளியாக மாறியுள்ளது. இந்த மலை பெயரின் அர்த்தம் “வெண் மலை” என்றும் அழைக்கப்படுகிறது.
நைமா டோர்ஜி, பி.டைனர் ஆகியோர் 1960-இல் இதில் ஏறினார்கள்.
8. மானஸ்லு மலை (8163 மீ ), நேபாளம்.
உலகில் எட்டாவது பெரிய மலை. இதன் அடிப்பகுதியில் பெரிய பனியால் சூழப்பட்டது. இது நேபாளத்தில் உள்ள மனசிரி இமாலய மலைத்தொடரில் உள்ளது. மனஸ்லு என்னும் பெயர் சமஸ்கிருத மொழியில் “மனதின் சிகரம்” என்னும் பொருள் தருவதாகும். ஜப்பானை சேர்ந்த ட.இமானிஷி 1956-ஆம ஆண்டில் இந்த மலையை ஏறிய முதல் நபர் ஆவார்.
9. நங்க பர்பத் (8125 மீ ),பாகிஸ்தான்.
இது பாகிஸ்தானில் கில்கிட் பல்டிஸ்தானில் உள்ள சிந்து நதியின் தெற்கே அமைந்துள்ளது. நங்க பர்பத் என்றால் “நிர்வாண மலை ” என்று பொருள். இருபதாம் நூற்றாண்டில் முதல் பாதியில் ஏராளமான மலை ஏறுபவர்கள் இறந்ததால் இது “கில்லர் மலை” என்று அழைக்கப்படுகிறது. ஆஸ்திரேயாவைச் சேர்ந்த ஹெர்மன் பஹ்ல 1953-ஆம் ஆண்டு முதன் முதலில் இம்மலையில் ஏறினார் .
10. அன்ன பூர்ணா மலை (8091 மீ ), நேபாளம்.
அன்னப்பூர்ணா என்பது ஒரு சம்ஸ்கிருத பெயர் ஆகும். இது அறுவடை தெய்வத்தை குறிக்கிறது. உலகின் ஆபத்தான இந்த அன்ன பூர்ணா மலை 7,629 சதுர கிமீ கொண்டது. மௌரிஸ் ஹெர்ஸ்வ்க் மற்றும் லூயிஸ் லாச்சேனல் 1950-ல் முதலில் இம்மலையில் ஏறினார்கள்.
இந்த மலையை ஏற அன்னபூர்ணா நுழைவு வாயில் அடித்தளம் முகாம் மலையேற்றமாக இருக்கிறது.