Type Here to Get Search Results !

இலங்கை சார்ந்த பொது அறிவு வினாக்கள் - 2023 - 2024 SRI LANKA GK




 01. கி.பி 4ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்ட இலங்கையின் மிகப்                          பழமையான உள்நாட்டு  இலக்கிய மூலாதாரமாகக் கருதப்படும் நூல்.

1) மகாவம்சம்       2) தாதுவம்சம்                3) தீபவம்சம்         4) சூளவம்சம்

02. இலங்கையின் கம்பளை முதல் கோட்டை இராசதானி வரையிலான ஆட்சிக்காலங்களின் அரசியல் தகவல்களை உள்ளடக்கியுள்ள நூலினைப் பின்வரும் விடைகளிலிருந்து தெரிவு  செய்க.

1) ராஜாவலிய    2) பூஜாவலிய     3) பெரகும்பசிரித்த      4) நிக்காய சங்கிரகய

03. நாடு ஒன்றின் வரலாற்றை அறிந்து கொள்வதற்காக இலக்கிய மூலாதாரங ;களைப் பயன்படுத்தும் போது கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் எவை.

1) நூல் எழுதப்பட்ட காலம் , நூல் ஆசிரியரின் நோக்கம்

2) கலைத்திறனை வெளியிடும் முறை, தனித்துவத்தினை எடுத்துக்காட்டும் முறை

3) கட்டட நிர்மானம், நூலுக்கான தகவல் திரட்டப்பட்ட முறை

4) புராதன மனிதனின் வாழ்க்கைத் தகவல்கள், நூல் அசிரியர்

04. 'ரிபைரோவின் இலங ;கை வரலாறு' என்னும் நூலை எழுதிய ரிபைரோ என்பவரின் தாய் நடாகக் கருதப்படுவது.

1) சீனா             2) போர்த்துக்கல்         3) பிரித்தானியா      4) ஒல்லாந்து

05. கி.பி 90-168 காலப்பகுதியில் அலெக்சாந்திரியாவில் வாழ்ந்த உரோம இனத்தவரான  குளோடியஸ் தொலமி அவர்களால் வரையப்பட்ட உலகப் படத்தில் இலங்கைக்கு வழங்கப்பட்ட பெயர்.

1) செரண்டிப்            2) சைலான்        3) சிலோன்           4) தப்ரபேன்

06. சீனாவின் சன் - சீ என்னும் பிரதேசத்தில் பிறந்து கி.பி 5ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வருகை தந்து அபயகிரி விகாரையில் மூன்று ஆண்டுகளாகத் தங ;கியிருந்து கல்வி கற்றார் எனக் குறிப்பிடப்படுபவர்.

1) ஹியுங ;சாங் பிக்கு     2) கொன்பியூசியஸ்        3) பாஹியன் தேரர்                            4) யுவான் சொன்கான் 


07. புராதன காலத்தில் பயன்படுத்தப் பட்டதாகக் கருதப்படுகின்ற நாணயங ;கள் மூலம் நாம் அறிந்து கொள ;ளக் கூடிய விடயங்கள்.

1) பொருளாதார வளர்ச்சி, எதிர்கால சந்ததியினர்

2) பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப அறிவு

3) தனித்துவம், ஆட்சியாளர் செயற்பாடுகள்

4) வரலாற்றைக் கட்டியெழுப்புதல், நாட்டின் பரிணாம வளர்ச்சி

08. இலங்கையின் 38000 வருடங்களுக்கு முன்னர் தாழ்நில ஈரவலயத்தில் வரலாற ;றுக்கு முற்பட்ட கால மனிதன் வாழ்ந்தமை தொடர்பான முக்கியம் வாய்ந்த தரவுகளைத் தருகின்ற குகை.

1) பட்ட தொம்பலென 2) கித்துள்கல

3) பெலிலென 4) பாகியன்கல

09. இலங்கையின் முன்வரலாற ;றுக் கால பண்பாட்டைக் கற்பதற்கான பிரதான ஆதாராமாக விளங்குவது இறந்தவர்களுக்கு என அமைக்கப்பட்ட மெகாதிலிக் மயானங்களாகும். இந்த மரணச்சடங்கு முறைகளில் அஸ்தியுடன் கூடிய சிறிய பாத்திரங்கள் பெரிய பாத்திரங்களினுள் வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளன. இவ்வாறான மயானங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பெயர்.

1) கல்லறை மயானங்கள் 2) களிமண் ஓட கல்லறை மயானங்கள்

3) பரணி மயானங்கள் 4) அஸ்திவைக்கப்பட்ட கல்லறை மயானங்கள்

10. வரலாற ;றுக்கு முற்பட்ட காலத்திலிருந்த கல்லாயுத தொழில் நுட்பத்திலிருந்து விடுபட்டு உலோக மட்பாண்டங ;கள் செய்யும் தொழில் நுட்பத்திற ;கு மாற்றமடைந்தமை ஆரம்பமான காலம்.

1) முன் வரலாற்றுக் காலம் 2) ஆரம்ப வரலாற்றுக் காலம்

3) வரலாற்றுக் காலம் 4) அண்மைக்காலம்

11. கி.மு 2400 வருடங்களுக்கு முன்பிருந்தே இலங ;கையில் முன்னேற்றகரமான விவசாய சமூகம் ஒன்று இருந்துள்ளது என்பதற்கான ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்ட பிரதேசங்கள்

1) இபன்கட்டுவ, சிகிரியா அலிகல

2) சிகிரியா பொத்தான பிதுருங்கல

3) உடரஞ்சாமடம், சொல்கைன்

4) பெரகல, ஹிந்துமுல்ல.

12. இலங்கையில் அரசுக்கு முற்பட்ட காலத்தில் சிறிய பிரதேசங்களில் சொத்துள்ள செல்வந்த பிரபுக்களாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள்.

1) கமிக 2) பருமக  3) கம்லத்தன்  4) குர்க்கபதி


13. ஆட்சிப் பிரதேசத்தினை நிர்வாக மாவட்டங ;களாகப் பிரித்து ஒவ்வொரு மாவட்டங்களையும் நிர்வகிப்பதற ;கு அமைச்சர்களை நியமித்ததாக கருதப்படும் மன்னன்.

1) துட்டகைமுனு 2) பண்டுகாபயன்

3) தேவநம்பிய தீசன் 4) வசபன்

14. இந்து சமுத்திரத்தில் மேற்கை மையமாகக் கொண்டு நடைபெற்ற சர்வதேச வியாபாரம் கிழக்கிற ;கு நகர்ந்தமையைக் கருத்தில் எடுத்து இலங்கையின் தலைநகரத்தினைப்

பொலன்னறுவைக்கு மாற்றி தூர நோக்குடன் செயற்பட்ட மன்னன்.

1) முதலாம் பராக்கிரம பாகு 2) நிசங்க மல்லன்

3) முதலாம் விஜயபாகு 4) இரண்டாம் விஜயபாகு


16. புராதன காலத்தில் இலங ;கையின் கிழக்குக் கரையில் அமைந்திருந்த துறைமுகங்களைத் தரும் விடையினைத் தெரிவு செய்க.

1) உருவெல, மகாதித்த 2) சல்வத்தொட்ட, கிம்மதித்த

3) பல்லவங்க, கோகண்ணதித்த 4) சுகரதித்த, ஜம்புகோளப்பட்டினம்


18. 'விண்ணிலிருந்து பொழியும் ஒரு துளி நீரேனும் மனிதனுக்குப் பயன் படாது கடலில் கலக்க விடமாட்டேன்' என்னும் கூற ;றுடன் தொடர்புடைய மன்னன்.

1) மகாசேனன் 2) தாதுசேனன்

3) வசபன் 4) முதலாம் பராக்கிரம பாகு

19. திரிபீடக நூலுக்கு மேலதிக விளக்கமான அட்டுவாக்களை எழுதிய புத்த கோச தேரர் கல்வி கற்ற விகாரை.

1) மகாவிகாரை 2) அபயகிரிவகாரை

3) ஜேத்வனராமய 4) ஆலாகான பிரிவேனா

20. கி.பி 7ஆம் நூற்றாண்டில் ஈராக்கின் கூபா நகரத்தை மையமாகக் கொண்டு வளர்ச்சியடைந்த எழுத ;து.

1) பிராமி 2) திராவிடம் 3) கியுபிக் 4) பாளி

21. வெள்ளை நிறப் பின்னணியில் செந்நிறக் கோடுகள ; வரையப்பட்ட மடக்கு என்னும் மட்பாண்டம் கண்டெடுக்கப்பட்ட இடம்.

1) இபன்கட்டுவ 2) கல்சொகன் 3) பிதுருங்கல 4) உடரஞ்சாமடம 


22. அலைகளினால் ஏற ;படும் அழுத்தத ;தால் அணைக்கட்டு அரிப்படைவதனைத் தடுப்பதற்காக குளதத்pல் அமைக்கப்பட்ட உறுப்பு.

1) கலிங ;கல் தொட்டி 2) சுருங்கை 3) மடைக்கதவு 4) அலைதாங்கி

23. கி.பி 9ஆம் நூற்றாண்டில் இலங்கையை ஆட்சி செய்த அரசர்களின் பரம்பரை (வம்சம்)

1) இலம்ப கர்ணவம்சம் 2) மானவர்மன்வம்சம்

3) மோரிய வம்சம் 4) பரணவம்சம்

24. உயர் நிலங்களில் உள்ள மரங்களை வெட்டக்கூடாதென அநுராதபுர கல்வெட்டில் பொறிப்பித்த மன்னன்.

1) மூன்றாம் உதயன் 2) நிஸங்க மல்லன்

3) நான்காம் மகிந்தன் 4) ஐந்தாம் காசியப்பன்

25. இராசரட்டை இராச்சியத்தின் வீழ்ச்சிக்குப் பின்பு வடபகுதியில் உருவான பிரதான பிரதேச ஆட்சி அலகு.

1) தொலஸ்பரட்டை 2) மாகமை 3) கோட்டை 4) வன்னி



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad