01. 1ஆம் புவனேகபாகு மன்னன் தலைநகரமாக்கிய பிரதேசம்.
1) தம்பதெனியா 2) யாப்பாகுவா 3) குருநாகல் 4) கம்பளை
02. கண்டி இராச்சியத்தில் அதிகளவான நிலம் பயன்படுத்தப்பட்டிருந்த பயிர்ச் செய்கை.
1) நெல் 2) குரக்கன் 3) சேனைச்செய்கை 4) கறுவா
03. மறுமலர்ச்சிக்காலத்தில் இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் வாழ்ந்து கலைகளின் வளர்ச்சிக்கு அனுசரணை வழங ;கிய செல்வந்த குடும்பத்தினர்.
1) ரொமனோ 2) றிச்சி
3) பியான்சி 4) மெடிசி
04. மறுமலர்ச்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட கலைப்படைப்புக்களில் மையப்பொருளாக இருந்த விடயங்கள்.
1) தனியார்மயமாக்கம், உலகியல் ரசனை
2) சமயக்கருத்துக்கள், வகுப்பு ரீதியான பாகுபாடு
3) தனியார் மயமாக்கம், சமயக்கருத்துக்கள்
4) உலகியில் ரசனை, சமயக்கருத்துக்கள்.
05. ஆசியாவுக்கான புதிய பாதையைக் கண்டறிவதில் முதலிடம் வகித்த ஜரோப்பிய நாட்டவர்.
1) பிரித்தானியர் 2) ஒல்லாந்தர் 3) போர்த்துக்கேயர் 4) பிரான்சியர்
06. ஆசியாவிற ;கு வருகை தந்த ஒல்லாந்தரின் கீழைத்தேச மத்திய நிலையமான பத்தேவியா அமைந்திருந்த தீவு.
1) சுமாத்திராத்த தீவு 2) பப்புவா நியூகினித்தீவு
3) சம்பாத்தீவு 4) ஜாவாத்தீவு
07. 18 ஆம் நூற்றாண்டில் குடியேற்ற நாடுகளைக் கொண்டிருந்த ஜரோப்பிய நாடுகளின் தொகுதியைப் பின்வரும் விடைகளிலிருந்து தெரிவு செய்க.
1) பிரான்ஸ், பெல்ஜியம், ஒல்லாந்து
2) பிரான்ஸ், போர்த்துக்கல், ஸ்பானியா
3) பிரான்ஸ், ஒல்லாந்து, போலந்து
4) சுவீடன், ஸ்பானியா, ரஷ;யா
08. நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிக்கும் அரசின் தலையீட்டைக் குறைந்தளவினதாக்கும் தலையிடாக் கொள ;கையை முன்வைத்தவர்.
1) மாட்டின் லூதர் 2) இராஸ்மஸ் 3) அடம்ஸ்மித் 4) ஜோன் விறஸ்
09. 1876 ஆம் ஆண்டு இரண்டு இடங்களுக்கு இடையில் கேபிள ; கம்பி ஊடாக வாய்மொழியாக கருத்து பரிமாற்றக்கூடிய தொலைபேசியைக் கண்டறிந்தவர்.
1) கலிலியோ கலிலி 2) அலெக் சாண்டர் கிரகம் பெல்
3) குக்லி மார்க்கோனி 4) ரைட் சகோதரர்கள்.
10. சென்னை நிர்வாகத்தினால் இலங்கையின் கரையோரப் பிரதேசங ;களை நிர்வகிக்க அனுப்பப்பட்ட வதிவிடப் பிரதிநிதிகளான கலெக்டர் எனப்பட்டவர்களின் நிர்வாக மையம்.
1) பிரதேச செயலகம் 2) உதவி அரசாங்க அதிபர் காரியாலயம்
3) கச்சேரி 4) மாகாண செயலகம்
11. 1978 இல் இருந்து 1802 வரை இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் நிலவிய ஆட்சி முறை
1) மன்னராட்சி 2) பிரதேச நிர்வாகம் 3) சென்னை ஆட்சி 4) இரட்டை ஆட்சி
12. இரத்மலானை பரமதம்ம சேதிய பிரவேனாவை ஆரம்பித்த தேரர்.
1) ஹக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேரர் 2) வலானை சித்தார்த்த தேரர்
3) தர்மாலோக்க தேரர் 4) மீகெட்டுவத்தே குணானந்த தேரர்.
12. துறவிகளையும் இல்லறத்தாரையும் ஒன்றுபடுத்தி பௌத்த பிரம்மஞான சங்கத்தினை இலங்கையில் 1880 ஆம் ஆண்டில் ஆரம்பித்தவர்.
1) ஹென்றி ஸ்டீல் ஒல்கொட்
2) வஸ்கடுவே ஸ்ரீ சுபுதி தேரர்
3) அமாரிஸ்த சில்வா படுவன் துவாட
4) ஸ்ரீ தர்மா லோக தேரர்.