தரம் 7 சைவநெறி வினா விடை
01. திருச்சிராப்பள்ளிக் குன்றுடையான் என்பவர்,
1. விநாயகர் 2. முருகன்
3. சிவபெருமான் 4. விஷ;ணு
02. கந்தப்புராணத்தைப் பாடியவர்,
1. அருணகிரிநாதர் 2. சம்பந்தர்
3. மாணிக்கவாசகர் 4. கச்சியப்ப சிவாச்சாயரியார்
03. சைவ இலக்கியங்களாவன பின்வருவனவற்றுள்,
1. புராண இலக்கியம் 2. திருக்குறள்
3. பகவத் கீதை 4. வேதம்
04. சைவர்களிடையே காணப்படும் நற்பண்புகள் அடங்கிய தொகுதி,
1. பணிவு, பொறாமை 2. விட்டுக் கொடுக்காமை, இரக்கம்
3. இரக்கம், அன்பு 4. அன்பு, வெறுப்பு
05. நல்லொழுக்கங்களை போதித்து கல்வியையும் வழங்கும் இடம்,
1.ஆலயம் 2. வீடு
3. பாடசாலை 4. அலுவலகம்
06. வெள்ளிக்கிழமைகளில் கோயில்களிலும், பாடசாலைகளிலும் பஞ்சபுராணம் ஓதப்பட்டு விசேடமாக தொடர்ந்து பாடப்படுவது,
1. கந்தப்புராணம் 2. சிவப்புராணம்
3. திருமந்திரம் 4. பக்திப்பாடல்
07. திருச்சிராப்பள்ளிக்கும் திருவானைக்காவிற்கும் இடையே ஓடும் ஆறு,
1. கங்கை 2. யமுனை
3. காவிரி 4. மகாவலி
08. தோத்திரப் பாடல்களை நாம் ஓதுவதால் நாம் பெறும் நன்மை,
1. களைப்பு ஏற்படும் 2. வெறுப்பு ஏற்படும்
3. தாகம் ஏற்படும் 4. இறையுணர்வு ஏற்படும்
09. நவராத்திரி காலங்களில் நாம் செய்யக்கூடிய இறை செயல்களில் ஒன்று,
1. கொலு வைத்தல் 2. விளையாடுதல்
3. பிறர் குறை காணுதல் 4. வீட்டிற்குள் அமைதியாக இருத்தல்.
10. மாணவர்கள் பாடசாலைகளில் நிகழும் சமய விழாக்களில் பங்கு கொள்வதன் மூலம்,
1. சண்டை ஏற்படுகின்றது 2. கூட்டுறவு ஏற்படுகின்றது.
3. வெறுப்பு ஏற்படுகின்றது 4. கால தாமதம் ஏற்படுகின்றது