இலங்கையை ஆண்ட முதல் மன்னன் யார் ?
கடலால் சூழப்பட்ட மிக அழகான தீவான இலங்கையை ஆண்ட முதல் மன்னன் தொடர்பாக இன்றைய ஆக்கத்தில் பார்ப்போம் .
கிறிஸ்துக்கு முன் 543 முதல் கிறிஸ்துவுக்கு முன் 505 ஆண்டு வரையில் இலங்கையை ஆண்ட துணிச்சலான மன்னனாக விஜயன் வரலாற்றில் இடம் பிடிக்கின்றார் .பாலி நூல் ஆதாரங்களின்படி இலங்கை ஆண்ட முதல் மன்னனாக விஜயன் பெயரிடப்பட்டுள்ளார் .
விஜயனின் வரலாறு ஆரம்பிப்பது இந்தியாவில் ஆகும் . அக்காலத்தில் இந்தியாவின் கிழக்கு பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த சிங்கபாகு மன்னனின் மூத்த மகன் விஜயன் ஆவார் .விஜயன் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு அவரின் தந்தையான சிங்கபாகு மன்னனின் வரலாற்றை தெரிந்து கொள்வோம் .
விஜயனின் தந்தை அதாவது அரசன் சிங்கபாகு இந்தியாவின் சிங்கபுரவை ஆட்சி செய்தி வந்துள்ளார் . இந்த சிங்கபுர எனும் இடம் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்திருப்பதாகவும் சிலர் இது மலேசியா அல்லது தாய்லாந்து நாடுகளில் ஒரு இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள் .
விஜயனின் தாத்தா அதாவது சிங்கபாகு மன்னனின் தந்தை ஒரு சிங்கம் என இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சம் குறிப்பிடுகிறது . ஆனால் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து படி சிங்கபாகு மன்னனின் தந்தை ஒரு சிங்கம் அல்ல எனவும் காடு ஒன்றில் வசித்த ஒரு சிங்கம் போன்ற உருவமைப்பை கொண்ட ஒரு சக்தி வாய்த்த மனிதர் ஒருவரையே அவரின் தோற்ற அமைப்பை வைத்து இவ்வாறு அந்த நூல்கள் அவரை சிங்கம் என விபரித்துள்ளதாக அவர்கள் தெரிவிகின்றனர் .
இவ்வாறு இந்த வரலாறு ஆரம்பிக்க குறித்த சிங்கம் ஒரு சந்தர்ப்பத்தில் அரசனாகும் நோக்கில் வாங்கா இராஜ்ஜியத்தின் இளவரசியான சுப்பாதேவியை கடத்திச் சென்று குகை ஒன்றினுள் அடைத்து வைக்கின்றது .பின்பு சிங்கத்திற்கு இளவரசி உடன் விரும்பம் ஏற்பட்டு இரண்டு குழந்தைகளை அவர்கள் இருவரும் சேர்ந்து பெற்று எடுக்கிறார்கள் . இவர்களுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒருவர் சிங்கபாகு மற்றவர் சிங்க சிங்கவல்லி .
பின்பு இந்த குழந்தைகள் குறித்த அடைக்கப்பட்ட குகையில் வளர , தாய் மற்றும் குழந்தைகள் இருவரும் அந்தக் குகையில் இருந்து தப்பி தனது சொந்த தேசமான வாங்காவுக்கு செல்கின்றனர் . தனது குடும்பத்தை தொலைத்த சிங்கம் ஒவ்வொரு கிராமாக அழிக்க ஆரம்பிக்கிறது
நாடு திரும்பிய சுப்பாதேவி தனது தந்தையின் ராஜ்ஜியத்தில் ஜெனரல் ஒருவராக இருந்த தனது சொந்தக்கார ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார் . குறித்த சிங்கத்தை கொலை செய்பவருக்கு வெகுமதி அளிப்பதாக வாங்கா இராஜ்ஜியத்தின் மன்னன் சுப்பாதேவியின் தந்தை அறிவிக்கின்றார் .
பின்பு சிங்கபாகு குறித்த சிங்கத்தை அதாவது தனது தந்தையை கொலை செய்து விட்டு நாடுக்கு திரும்புகிறார் . சிங்கபாகு நாடு திரும்பும் பொழுது வாங்கா நாட்டின் அரசன் சிங்கபாகுவின் தாத்தா உயிரிழந்துள்ளார் . பின்பு நாட்டின் மந்திரிகள் ஆலோசித்து சிங்கபாகுவை நாட்டின் ச அரசனாக முடி சூடி வைக்கின்றனர் .
தான் பெற்ற அரச பதவியை தனது அம்மாவின் இரண்டாம் கணவருக்கு (சிங்கத்தின் பின் திருமணம் செய்து கொண்ட நாட்டின் ஜெனரல் )வழங்கிவிட்டு சிங்கபாபு நாட்டை விட்டு வெளியேறுகின்றார் . பல இடங்களை கடந்து செல்ல அவர் அடையாளம் கண்ட இடம் தான் சிங்கபுர .
தனது தங்கையுடன் சிங்கபுர சென்ற சிங்கபாகு , தங்கையை திருமணம் செய்து கொள்கின்றார் . பின்பு அவர்கள் அங்கு ஆட்சி அமைக்க அவர்களுக்கு 32 குழந்தைகள் பிறக்கிறது . அந்த 32 குழந்தைகளும் 16 இரட்டை குழந்தை ஜோடிகள் என வரலாறு குறிப்பிடுகிறது . அதில் கிடைத்த மூத்த குழந்தை விஜயன் ஆவான் . அவருடன் பிறந்த மற்ற இரட்டை குழந்தையின் பெயர் சுமித்தா .
இவ்வாறு சிங்கபாகு நாட்டை பல வருடங்கள் ஆட்சி செய்த மன்னனின் மூத்த மகனான விஜயன் தொடர்பாக சில மோசமான நடவடிக்கைகளை நாட்டு மக்கள் சிங்கபாகுவிடம் பல முறை முறைப்பாடு செய்கின்றனர் . இறுதியாக அவரை கொலை செய்யும் படி வேண்ட , சிங்கபாகுவின் கோபத்துக்குள்ளான விஜயன் சிங்கபுரவை விட்டு நாடு கடத்தப்படுகிறார் .
விஜயனும் அவரது அவரது நூற்றுக்கணக்கான தோழர்கள் பலரும் கப்பல் மூலம் நாடு கடத்தப்படுகின்றனர் முதலில் அவர்கள் இறங்கிய இடம் சுப்பரக்க ஆகும் . அங்கும் அவர்களுக்கு பாரிய எதிர்ப்பு கிளம்ப அவர்கள் மீண்டும் தமது பயணத்தை ஆரம்பிக்கின்றனர் . இரண்டாவதாக அவர்கள் தர இயங்கிய இடம் இலங்கையாகும் .
விஜயனும் அவனது நூற்றுக்கணக்கான தோழர்களும் இலங்கை வந்ததாக இலங்கை மற்றும் இந்திய வரலாற்று நூல்கள் தெரிவித்தாலும் அதற்கான எவ்வித தொல்பொருள் ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை .
விஜயன் இலங்கை வரும் பொழுது யட்ச இனத்தை சேர்ந்த குவேனி நூல் நூற்றுக் கொண்டு இருந்ததாகவும் அவர்கள் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு அதன் மூலம் யட்ச இனத் தலைவரை கொலை செய்து விஜயன் இலங்கையில் சில இடங்களை கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
விஜயன் கைப்பற்றிய இடத்தை தம்பபண்ணி என பெயரிட்டு அதனை விஜயன் ஆட்சி செய்ய தொடங்கினார் . விஜயன் மற்றும் குவேனிக்கு இடையில் தொடர்பு ஏற்பட்டு அவர்களுக்கு இடையில் இரண்டு குழந்தைகள் பிறக்கிறது . ஒருவர் ஜீவஹத்தா மற்றவர் தீசல ஆவார்கள் .விஜயனை பின்தொடர்ந்த சமூகத்தினரை சிங்கள என்று குறிப்பிட அதன் பின் ஆரம்பித்தனர் .
விஜயனுக்கு அரசு பட்டம் வழங்க அமைச்சர்கள் யோசனை செய்தார்கள் . ஒருவருக்கு அரச பதவி வழங்க அவர் இளவரசி ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்பது அவர்களது வழக்கமாகும் . இதன் காரணமாக அவர்கள் இளவரசி ஒருவரை விஜயனுக்கு மணமுடித்து வைக்க ஆலோசனை வழங்கினார்கள் . இந்தியாவில் மதுரை என்ற இராஜியத்தின் இளவரசியை விஜயனுக்கு இதன் பின் மணமுடித்து வைத்தனர்.
பின்பு விஜயன் குவேனியை வெளியேறும்படி கூறினார். தனது குழந்தைகளை வைத்துவிட்டு குவேனிக்கு மாத்திரம் வெளியேறும்படி விஜயன் ஆணையிட்டான் . பணம் தருவதாகவும் சொன்னார் . இருப்பினும் தனது இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு யக்ச நகருக்கு அதாவது லங்காபுரம் என்ற இடத்திற்கு குவேனி சென்றார். தம்மை தம்மைக் காட்டி கொடுத்தவள் மீண்டும் உளவு பார்க்க வந்திருக்கிறாள் என்று அஞ்சி அவளை அவர்கள் கொலை செய்தார்கள் . பின்பு அவரின் குழந்தைகள் இருவரும் சுமணகூட்ட அதாவது சிவனொளிபாத மலை பகுதிற்கு தப்பி சென்றதாக குறிப்பிடப்படுகிறது . இவர்கள் மூலம் இலங்கையின் வேடர் இனம் உருவானதாக வரலாறு தெரிவிக்கிறது .
இதன் பின் விஜயன் மதுரை அரசனின் மகளை திருமணம் செய்து அரசனாக மகுடம் சூடி இலங்கையை பல வருடங்கள் ஆட்சி செய்தான் .
இலங்கையை ஆண்ட முதல் மன்னன் மற்றும் இலங்கையை ஆண்ட முதல் சிங்கள மன்னனும் விஜயன் ஆவான் .