Type Here to Get Search Results !

உலகில் மிகப்பெரிய விலங்கு எது?

 உலகில் மிகப்பெரிய விலங்கு



 திமிங்கலங்கள் நீரில் வாழும் பாலூட்டி இனைத்தை சேர்ந்தவை. இதில் மொத்தம் 75 வகை உண்டு. அதில் நீலத் திமிங்கலம் தான் உலகின் மிகப்பெரிய விலங்காகும். சற்றேறக்குறைய 100 அடி நீளமும் 150 டன் எடை உள்ளதாகவும் வளரக்கூடியவை இந்த நீலத் திமிங்கிலங்கள்.


திமிங்கலங்கள் பற்றிய தகவல்கள்

திமிங்கலம் எவ்வாறு சுவாசிக்கிறது?

திமிங்கிலங்களின் தலைப்பகுதியில் குழாய் போன்ற மேல் நோக்கிய துளை ஒன்று உள்ளது. இவை இத்துளைகளின் வழியாகவே சுவாசிக்கின்றன.

திமிங்கல உமிழ்நீர் என்றால் என்ன?

திமிங்கில வாந்தி அல்லது அம்பர்கிரிஸ் (Ambergris) எண்ணெய்த் திமிங்கிலம் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒரு வகை திடக்கழிவுப் பொருள் ஆகும். இது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும். எண்ணைத்திமிங்கிலமானது பீலிக் கணவாய் போன்ற உயிரினங்களை வேட்டையாடி உண்பது வழக்கம்.

ஆம்பர் கிரீஸ் என்றால் என்ன?

அம்பெர்கிரீஸ், அல்லது சாம்பல் அம்பர், விந்தணு திமிங்கலங்களின் செரிமான அமைப்பில் உற்பத்தி செய்யப்படும் மந்தமான சாம்பல் அல்லது கருப்பு நிறத்தின் திடமான, மெழுகு, எரியக்கூடிய பொருள். புதிதாக உற்பத்தி செய்யப்படும் அம்பெர்கிரிஸில் கடல், மல வாசனை உள்ளதாக இருக்கும்.

திமிங்கில வாந்தி



திமிங்கில வாந்தி அல்லது அம்பர்கிரிஸ் (Ambergris) எண்ணெய்த் திமிங்கிலம் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒரு வகை திடக்கழிவுப் பொருள் ஆகும். இது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும். எண்ணைத்திமிங்கிலமானது பீலிக் கணவாய் போன்ற உயிரினங்களை வேட்டையாடி உண்பது வழக்கம். 

அந்த பீலிக் கணவாயின் ஓட்டை இத் திமிங்கலங்களின் செரிமான அமைப்பால் செரிக்கவைக்க முடியாது. அதனால் இந்த ஓடுகள் திமிங்கிலத்தின் குடலில் சிக்கிக்கொள்ளும். இந்த ஓட்டினால் திமிங்கிலத்தின் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த ஒட்டை சுற்றிய செரிமான அமைப்பிலிருந்து ஒரு சிறப்பு வகை திரவம் உற்பத்தியாகிறது. 

இதனை அம்பர் கிரீஸ் என்பர். இது நறுமணப் பொருட்கள் மற்றும் பாலியியல் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அம்பர் கிரீசை சிலசமயம் எண்ணெய்த் திமிங்கிலங்கள் மூலம் வாந்தியெடுப்பதன் மூலம், வெளியேற்றுகிறது. சில எண்ணெய்த் திமிங்கலங்கள், மலப்புழை வழியாகவும் இதை வெளியேற்றுகிறது.


எண்ணெய்த் திமிங்கிலம் தன் உடலிலின் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றிய வாந்தி, கடலின் மேற்பரப்பில் மிதக்கிறது. சூரிய ஒளி மற்றும் உப்பு நீரும் சேர்ந்து இந்த வாந்தியை அம்பெர்கிரிஸ் எனும் பொருளாக உருவாக்குகின்றன. அம்பர்கிரிஸ் எனும் வாந்தி நறுமணப் பொருள்களை தயாரிக்க பயனுள்ளதாக இருக்கிறது.


திமிங்கில வாந்தி எனும் அம்பெர்கிரிஸ் கருப்பு, வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் எண்ணெய் நிறைந்த பொருள் ஆகும். இது நீள் வட்ட அல்லது வட்ட வடிவத்தில் காணப்படும். இது கடல்நீரில் தொடர்ந்து மிதந்து பயணம் செய்வதால் அத்தகைய வடிவம் ஏற்படுகிறது.


எண்ணெய்த் திமிங்கலத்தின் தலையில் ஸ்பெர்மாசிட்டி எனப்படும் ஒரு உறுப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இது எண்ணெயால் நிரம்பியுள்ளது. இது திமிங்கிலத்தின் விந்து என்றும் நம்பப்பட்டது. எனவே இதற்கு விந்துத் திமிங்கிலம் எனப்பெயர் சூட்டப்பட்டது. ஆனால் இந்த உறுப்பு உண்மையில் ஒலி சமிக்ஞைகள் மற்றும் மிதப்பைக் கட்டுப்படுத்துவதில் உதவுகிறது.


திமிங்கில வாந்தியின் மணம் முதலில் கெட்ட நாற்றம் கொண்டதாக இருக்கும். ஆனால் நேரம் செல்லச் செல்ல, உலர்ந்த பிறகு அது நறுமணமாக மாறும் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 வாசனை திரவியத்தின் வாசனை காற்றில் விரைவாக கரைவதைத் தடுக்க அம்பெர்கிரிஸ் ஒரு நிலைப்படுத்தியாக பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய்த் திமிங்கிலம் தனது உடலிலிருந்து வெளியேற்றிய அம்பரிஸ் எனப்படும் வாந்தி கரையை அடைய பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகும்.


திமிங்கல வாந்தி எனும் அம்பர்கிரிஸ் எத்தனை பழையதோ, எத்தனை பெரியதோ அதற்கு அதிக விலை வழங்கப்படும். நாய்கள் அம்பெர்கிரிசின் வாசனையால் ஈர்க்கப்படுவதால், குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் அம்பெர்கிரிஸை வர்த்தகம் செய்யும் நபர்கள் சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்களை வைத்திருக்கிறார்கள்.

திமிங்கல வாந்தி எனும் அம்பரிசின் பயன்பாடுகள்

சீனாவில் பாலியல் திரவ மருந்து தயாரிக்க அம்பெர்கிரிஸ் பயன்படுத்தப்படுகிறது. அரபு நாடுகளில் இது உயர் தரமான வாசனை திரவியங்களை தயாரிக்க பயன்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் பல நூற்றாண்டுகளாக அம்பெர்கிரிஸ் ஒரு வாசனை திரவியமாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச பயணிகளான மார்கோ போலோ போன்றோரின் பயணக் குறிப்புகளிலும் அம்பெர்கிரிஸ் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தைத் தவிர, யுனானி மருத்துவத்திலும் அது பயன்படுத்தப்படுகிறது. 

இது மூளை, உடல், நரம்பு மற்றும் பாலுறவு பிரச்சனைகளுக்கு பல்வேறு மூலிகைகளுடன் பயன்படுத்தப்படுகிறது. யுனானி மருந்தான மஜூன் மும்சிக் முகாவ்வி உடன் சர்க்கரை பாகு மற்றும் பிற மூலிகைகளுடன் அம்பெர்கிரிஸ் பயன்படுத்தப்படுகிறது. குழம்பி வடிவில் உள்ள இந்த மருந்து பாலியல் பலவீனத்திற்கு, பாலியல் செயல்திறனை மேம்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. திமிங்கல வாந்தியிலிருந்து தயாரிக்கப்படும் ஹப்பே நிஷாத் எனும் மருந்து விந்தணுக்கள் எண்ணிக்கையை பெருக்கவும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தாகப் பயன்ப்டுகிறது.


அம்பெர்கிரிஸ் அரிதாகவே கிடைக்கிறது. அரபு நாடுகளில் திமிங்கல வாந்தி எனும் அம்பரிசுக்கு பெரும் தேவை உள்ளது. எனவே, அதன் விலை மிக அதிகம். தங்கத்தின் விலையை விட அதன் விலை அதிகமாக இருப்பதால் இது 'கடல் தங்கம்' அல்லது 'மிதக்கும் தங்கம்' என்றும் அழைக்கப்படுகிறது. பன்னாட்டுச் சந்தையில் இதன் விலை கிலோ ஒன்றுக்கு 1.5 கோடி ரூபாய் வரை மதிப்பிடப்படுகிறது



மீன்களுக்கும் திமிங்கிலங்களுக்குமுள்ள வேறுபாடு

திமிங்கிலங்கள் பாலுட்டி வகையைச் சேர்ந்தவை ஆகும். கடலில் வாழ்ந்தாலும் மற்ற மீன்களில் இருந்து பல்வேறு வகைகளில் திமிங்கிலங்கள் வேறுபட்டுள்ளன.

திமிங்கிலங்கள்     மீன்கள்
வெப்ப இரத்த பிராணி  குளிர் இரத்த பிராணி
நுரையீரல் முலம் சுவாசிக்கின்றன    பூக்கள் மூலம் சுவாசிக்கின்றன
குட்டி போட்டு பால் கொடுக்கின்றன  
 முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.

செதில்களற்ற தோலையும், முடிகளையும் பெற்றுள்ளன 
   செதில்கள் உள்ளன


திமிங்கலம் எச்சம்

சில எண்ணெய்த் திமிங்கலங்கள், மலப்புழை வழியாகவும் இதை வெளியேற்றுகிறது. எண்ணெய்த் திமிங்கிலம் தன் உடலிலின் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றிய வாந்தி, கடலின் மேற்பரப்பில் மிதக்கிறது. சூரிய ஒளி மற்றும் உப்பு நீரும் சேர்ந்து இந்த வாந்தியை அம்பெர்கிரிஸ் எனும் பொருளாக உருவாக்குகின்றன.


திமிங்கிலம்

திமிங்கிலம் (திமிங்கலம், Whale) நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத் திமிங்கிலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது. திமிங்கிலங்கள் வெப்ப இரத்தப் பிராணிகளாகும். இவை நுரையீரல் மூலமே மூச்சுவிடுகின்றன. 

இவை வெப்ப இரத்த விலங்குகள். திமிங்கிலங்களில் 75 வகைகள் உள்ளன. உலகிலுள்ள உயிரினங்களுள் மிகப்பெரியதாக வளரக்கூடிய இனம் நீலத் திமிங்கிலம் ஆகும். இது சற்றேறக்குறைய 100 அடி நீளமும் 150 டன் எடையுள்ளதாகவும் வளரக்கூடியது. நீலத் திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும். இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும்.


 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad