Type Here to Get Search Results !

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இலங்கை

 

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இலங்கைக்குக் கிடைத்துள்ள இடம்!



ஐக்கிய நாடுகள் சபையின் 2022ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி நாடுகள் அறிக்கையில் இலங்கை 127ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.


இப்பட்டியலில் பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு உலக மகிழ்ச்சி அறிக்கையில் 149 நாடுகளில் இலங்கை 129வது இடத்தில் இருந்தது. இப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் மகிழ்ச்சியற்ற நாடாக இறுதி இடத்தை பெற்றுள்ளது. பொருளாதாரச் சரிவை எதிர்கொண்டுள்ள லெபனான் கடைசிக்கு முன்னரான இடத்தை பெற்றுள்ளது.


பட்டியலில் 121வது இடத்தில் பாகிஸ்தானும், இந்தியா 136வது இடத்திலும், நேபாளம் 84வது இடத்திலும், வங்கதேசம் 94வது இடத்திலும் உள்ளன.


முதல் 20 இடங்களில் ஆசிய நாடுகள் எவையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஐக்கிய நாடுகள் சபையின் இப்பட்டியல் மக்களின் சொந்த கருத்துக்களின் மதிப்பீட்டின் அடிப்படையிலும், பொருளாதார மற்றும் சமூகத் தரவுகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளது.  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad