Type Here to Get Search Results !

இலங்கை தேசிய கல்வியற் கல்லூரி வரலாறு

இலங்கை தேசிய கல்வியற் கல்லூரி வரலாறு



ஆசிய பிராந்தியத்தில் கல்வியை சிறப்பாக வழங்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் . பல வல்லரசு நாடுகளில் இலங்கையில் கல்வி கற்றவர்கள் பல பெரிய பொறுப்புகளில் இருந்து வருகிறார்கள். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் உலகில் மிக உயரமான நிலையில்  இருக்கும் நாசா நிறுவனத்திலும் இலங்கையின் பலர் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது .


இவ்வாறு இலங்கை மாணவர்களை சிறந்த தலைவர்களாக மாற்றும் செயற்பாட்டில் முக்கிய பங்கு வகுக்கும் நிறுவனமாக இலங்கை தேசிய கல்வியற் கல்லூரிகள் சிறந்து விளங்குகின்றது . சிறந்த முறையில் பயிற்சி வழங்கப்பட்டு அங்கிருந்து வெளியாகும் ஆசிரியர்கள் குறித்த செயற்பா மிட்டைக சிறப்பாக செய்து வருகிறார்கள் .


இந்தக் கட்டுரையில் இலங்கை தேசிய கல்வியற் கல்லூரி வரலாறு மற்றும் அதன் மூலம் இலங்கை நாட்டுக்கு வழங்கப்படும் சேவை தொடர்பாக சுருக்கமாக பார்ப்போம் .


 

மாறிவரும் கல்வி முறைகள் மற்றும் சவால்கள்  போன்றவற்றுக்கு சிறப்பாக முகம் கொடுக்கும் வகையில் ஆசிரியர்களை தயார் செய்து வழங்கும் பாரிய பொறுப்பை தேசிய கல்வியற் கல்லூரிகள் செய்து வருகின்றன .



அக்காலத்தில் பாடசாலை கல்வி முறைக்கு வந்த தேவைகளுக்கு ஏற்ப காலத்துக்கு காலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் சில நிறுவனங்கள் உருவாகின . 1873 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் இலங்கையின் முதலாவது ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்பு 1930 ஆம் ஆண்டு இன்னும் ஒரு ஆசிரியர் கல்வி வழங்கும்  கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது . இவையே  இன்றைய  தேசிய கல்வியற்  கல்லூரிகளுக்கான ஆரம்ப படியாக கருதப்படுகிறது.



1930 ஆம் ஆண்டுக்குப் பிறகு  சில ஆசிரியர்களுக்கு கல்வி வழங்கும் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் அவற்றிலிருந்து வெளியாகும் ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்கப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாக பாடசாலைகளில் பாரிய பிரச்சினைகள் உருவாக தொடங்கியது.


இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் அன்று கல்வி அமைச்சராக இருந்து ரணில் விக்ரமசிங்க அவர்களினால் 1981 ஆம் ஆண்டு பணிந்துறைகளுடன் கல்வி முறைமை காண பத்திரம் வெளியிடப்பட்டது . பின்பு 1985 ஆம் ஆண்டு தேசிய கல்வியற் கல்லூரி உத்தியோபூர்வமாக நிறுவப்பட்டது.


ஆரம்ப நிலை கல்வியை வழங்குவதற்காக பொல்கொல்ல பகுதியில் மகாவலியும் , மீரிகம பகுதியில் ஹெபிடிகம தேசிய கல்வியற் கல்லூரிகளும் , நிட்டபுவ பகுதியில் பெளத்த கல்வியை வழங்குவதற்காக சரிபுட்ட கல்வியற் கல்லூரியும் , சுகாதாரம் மற்றும் உடற்கல்வியை வழங்குவதற்காக பண்டாரவளை கல்வியற் கல்லூரியும் , கணிதம் மற்றும் விஞ்ஞானம் கல்விற்காக வேயங்கோடை பகுதியில் சியனே கல்வியற் கல்லூரியும் மற்றும் ஆங்கில மொழி கல்விற்காக களுத்துறையில் பஸ்துன்ரட கல்வியற் கல்லூரிகளும் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கில் முதன் முதலாக 1985ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.


ஆரம்பிக்கப்பட்ட ஆண்டில் இருந்து பல கட்டங்களாக விரிவடைந்து தற்போது 19 இலங்கை தேசிய கல்வியற் கல்லூரிகளாக மாறி , நாடுமுழுவதும் சிறந்த முறையில் ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற்ற ஆசியர்களை பாடசாலைகளுக்கு வழங்குகின்றன .

 அவை அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி , மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி , தர்கா நகர் தேசிய கல்வியற் கல்லூரி , ஹபிடிகம் தேசிய கல்வியற் கல்லூரி,யாழ்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி, மகரகம தேசிய கல்வியற் கல்லூரி , மகாவலி தேசிய கல்வியற் கல்லூரி , நிலவலா தேசிய கல்வியற் கல்லூரி , பஸ்துன்ரட தேசிய கல்வியற் கல்லூரி , பேராதெனிய தேசிய கல்வியற் கல்லூரி , புலதிசிபுர தேசிய கல்வியற் கல்லூரி , ருஹுணு தேசிய கல்வியற் கல்லூரி ,ருவன்புற தேசிய கல்வியற் கல்லூரி ,சரிபுட்ட தேசிய கல்வியற் கல்லூரி ,சியன தேசிய கல்வியற் கல்லூரி ,ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி , ஊவா தேசிய கல்வியற் கல்லூரி , வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி மற்றும் வயம்ப தேசிய கல்வியற் கல்லூரி ஆகும் 

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் சித்தி அடையும் மாணவர்கள் இலங்கை தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.  விஞ்ஞானம் , கணிதம் , உடற்கல்வி , சமயம் , ஆங்கிலம் , தகவல் தொழிநுட்பம் , சிங்களம் , தமிழ் என பல பாடநெறிகள் குறித்த இலங்கை தேசிய கல்வியற் கல்லூரிகளில் காணப்படுகிறது. எனவே எமக்கு ஏற்ற பாடநெறியை தெரிவு செய்து நாம் விண்ணப்பிக்க வேண்டும் . மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கை கொண்ட மாணவர்கள் நேர்முகப்பரீட்சை ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.


ஒவ்வொரு ஆண்டும் தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு மாணவர்கள் உள்வாங்கப்படுவார்கள். குறித்த பாடநெறியானது மூன்று வருடங்கள் ஆகும் . இரண்டு வருடங்கள் கல்வி நடவடிக்கையும் மூன்றாம் வருடம் ஆசிரியர் பயிற்சியும் ஆகும் . மூன்றாவது வருடம் அரச பாடசாலை ஒன்றிற்கு சென்று ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும் .


பாடநெறியின் இறதியில் பரீட்சை  நடைபெறும் அதில் சித்தி அடையும் மாணவர்கள் தேசிய டிப்ளோமா பட்டதாரி சான்றிதழை பெற்றுகொள்வார்கள் . குறித்த பரீட்சையில் சித்தி அடைய தவறும் மாணவர்கள் , அடுத்த மாணவ தொகுதியுடன் மீண்டும் பரீட்சை எழுத முடியும் .

பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கு விரைவாக அரச பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமனம் வழங்கப்படும் . இலங்கை தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயின்று பாடசாலைகளில் சிறப்பாக பணியாற்றி வரும் / பணியாற்ற காத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad