Type Here to Get Search Results !

அரிசி : பொது அறிவு வினாடி வினா

 அரிசி : பொது அறிவு வினாடி வினா



உலகில் பரவலாக உட்கொள்ளப்படும் உணவாக அரிசி உள்ளது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இது அதிக அளவில் நுகரப்படுகிறது. நம் முக்கிய உணவாக உள்ள அரிசி பற்றி, நாம் எவ்வளவு விசயங்கள் அறிந்து வைத்துள்ளோம் என்பதை சோதித்துப் பார்ப்போம் வாருங்கள்.


(வினாடி வினா பகுதி, கேள்விகளுக்குக் கீழே உள்ளது. தவறாமல் பங்கெடுக்கவும்)


கேள்விகள்:


உலகின் எந்தப் பகுதி அரிசியை அதிகம் உட்கொள்கிறது?

உலக அளவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும், மக்காச் சோளம், கரும்பு, அரிசி போன்றவற்றில் அரிசியின் இடம் என்ன?

2014-ம் ஆண்டு கணக்கீட்டின் படி அரிசியின் உலக உற்பத்தி எவ்வளவு?

உலக அளவில் மனித குலத்திற்கு தேவைப்படும் கலோரி உணவுப் பொருளில் அரிசியின் இடம் என்ன?

அரிசியை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு தேவைப்படும் சாதக அம்சங்கள் என்ன?

உலக அளவில் மனித குலத்திற்கு தேவைப்படும் உணவு எரிபொருளில் அரிசி, கோதுமை, சோளத்தின் பங்கு என்ன?

தொல்லியல் மற்றும் மொழியியல் ஆதாரத்தின்படி அறிவியல் முன்வைக்கும் அரிசி சாகுபடி செய்யப்பட்ட முதல் இடம் உலகில் எங்கு இருக்கிறது?

இந்தியா-பாகிஸ்தானுக்கு அரிசி அறிமுகமான ஆண்டு எது?

சீனா, இந்தியா, இந்தோனேசியா, வங்கதேசம், வியட்நாம், தாய்லாந்து, மியன்மார், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கொரியா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகள் உலக அளவில் அரிசி உற்பத்தியில் கொண்டிருக்கும் விகிதம் என்ன?

2016-ம் ஆண்டு கணக்கின் படி ஆண்டுக்கு 209.5 மில்லியன் டன்கள் அரசியை உற்பத்தி செய்யும் இந்த நாடுதான் உலக அரிசி உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிறது. (உலகின் மொத்த உற்பத்தி 741 மில்லியன் டன்கள்)

2016-ம் ஆண்டின் கணக்குப்படி இந்தியாவின் அரிசி உற்பத்தி எவ்வளவு?

2012-ம் ஆண்டு கணக்கின் படி உலகில் அதிக அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடு எது? ( 9.75 மில்லியன் டன்கள்)

2010-ம் ஆண்டு கணக்கின் படி உலக அளவில் சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு எத்தனை டன் அரசி உற்பத்தி செய்யப்படுகிறது?

உலக அளவில் சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 10.8 டன் அரிசியை உற்பத்தி செய்யும் நம்பர் ஒன் நாடு எது?

ஒரு இலட்சம் அரிசி வகைகளைக் கொண்ட சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையம் எந்த நாட்டில் உள்ளது?

2009-ம் ஆண்டு கணக்கின் படி இந்திய விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக உற்பத்தி செய்த அரிசியின் அளவு என்ன?

2009-ம் ஆண்டு கணக்கின் படி உலக அளவில் அரிசி உற்பத்தியில் இந்தியாவின் இடம் எது?

உரம் – பூச்சிகொல்லி மருந்து போன்ற ரசாயனங்கள் இன்றி ஆர்கானிக் முறையில் இந்தியாவில் விவசாயம் செய்யப்படும் ஹெக்டேர் நிலம் எவ்வளவு?

உரம், பூச்சிகொல்லி மருந்து போன்ற ரசாயனங்களைப் பயன்படுத்தியும்

 இந்தியாவின் சராசரி அரிசி உற்பத்தி சீனாவின் சராசரி உற்பத்தியில் பாதியை மட்டுமே கொண்டிருப்பதன் காரணம் என்ன?

2012- ஆண்டு கணக்கின் படி இந்திய மக்களின் மொத்த தற்கொலையில் விவசாயிகளின் தற்கொலை விகிதம் எவ்வளவு?

இந்தியாவில் 2016-ம் ஆண்டு கணக்கின் படி 15.75 மில்லியன் டன் அரசியை உற்பத்தி செய்து முதலிடத்தை பிடித்த மாநிலம் எது?

2015-16ம் ஆண்டு கணக்கின் படி தமிழகத்தின் அரிசி உற்பத்தி எவ்வளவு?


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad