Type Here to Get Search Results !

இலங்கை பற்றிய தகவல்கள்

 




1. இலங்கையில் எத்தனை தேர்தல் மாவட்டங்கள் உள்ளன? - 22

2.  இலங்கையின் தலைப்பட்டினம் எது?  ஸ்ரீ ஜயவர்தனபுர

3.  இலங்கையின் பெரிய நகரம் எது? - கொழும்பு

4.  இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன  

இலங்கையின் சனாதிபதிகளின் பட்டியல்.

► மேன்மைதங்கிய வில்லியம் கொபல்லாவ (மே 22, 1972 - பெப்ரவரி 4, 1978)

► மேன்மைதங்கிய ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (பெப்ரவரி 4, 1978 - ஜனவரி 2, 1989)

► மேன்மைதங்கிய ரணசிங்க பிரேமதாசா (ஜனவரி 2, 1989 - மே 1, 1993)

► மேன்மைதங்கிய டிங்கிரி பண்டா விஜயதுங்கா (மே 2, 1993 - நவம்பர் 12, 1994)

► மேன்மைதங்கிய சந்திரிகா குமாரதுங்க (நவம்பர் 12, 1994 - நவம்பர் 19, 2005)

► மேன்மைதங்கிய மகிந்த ராஜபக்ச (நவம்பர் 19, 2005 - 2015)

* கெளரவ மைத்திரிபால சிறிசேன (2015--)

5.  இலங்கையின் தற்போதைய பிரதம மந்திரி யார்? மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்கள்

6.  இலங்கையின் பரப்பளவு என்ன? 65,610 கிமீ²  / 25,332 சதுரமைல்

பூமியின் பரப்பளவு : 196,936,481 - சதுர மைல் பூமியின் நிலப் பரப்பளவு : 57,505,431 - சதுர மைல் பூமியின் நீர்ப் பரப்பளவு : 139,431,011 - சதுர மைல் இந்தியாவின் பரப்பளவு : 1,222,559 - சதுர மைல்

7. இலங்கை எப்போது (பிரித்தானியவிடம் இருந்து) சுதந்திரம் பெற்றது?. - 04.02.1948ல்

8. இலங்கை அரசு எவ்வாறு அழைக்கப்படுகின்றது? – இலங்கை சனநாயக சமத்துவ குடியரசு (Democratic Socialist Republic of Sri Lanka)

9. இலங்கையில் உயர்ந்த நீவீழ்ச்சி எது? - பம்பரகந்த.

10. இலங்கையில் நீளமான ஆறு எது? – மகாவலி கங்கை 335 கி. மீ

11. இலங்கையின் உயர்ந்த மலை எது? - பிதுருதலாகல (Pidurutalagala) கடல் மட்டத்திலிருந்து 2524 மீட்டர் (8200 அடி)

12. மக்கள் தொகை என்ன? 

               2009 மதிப்பீடு 20,238,000 -  July 2008 குடிமதிப்பு 21,324,791

13. இலங்கையில் பாவனையில் உள்ள நாணயம் என்ன?\

 இலங்கை ரூபாய் (LKR)

14. இலங்கையின் நேர வலயம்: (ஒ.ச.நே + 5.30 மணி (கிறீன்வீச் நேரத்துடன் 5.30 மணி கூட்டவேண்டும்)

15. இலங்கையின் இணையக் குறி என்ன?

                    lk

16. இலங்கையின் தொலைபேசி எண் என்ன?

      +94

17. இலங்கையில் பாவனையில் உள்ள மின்னழுத்தம் எது?: 230V

18. இலங்கை எங்கே அமைந்துள்ளது?: இந்து சமுத்திரத்தில் மையக்கோட்டிற்கு வடக்காக 6 பாகை 54 கலைக்கும் (6°54’ - 6° 9’N),  நெட்டாங்கிற்கு கிழக்காக 79°54’ - 79°9’E வும் அமைந்துள்ளது.

இலங்கையின் முக்கிய நிலையங்கள்:

1.  செய்மதி தகவல் தொடர்பு நிலையம் - பாதுக்கை

2.  புடைவைக் கைத்தொழில் நிலையம் - வியாங்கொடை, பூகொட துல்கிரிய

3.  எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம் - சப்புகஸ்கந்த

4.  பிறிமா மாவு ஆலை - திருகோணமலை

5.  விவசாய ஆராட்சி நிலையம் - மகாஇலுப்பள்ளம, இங்குராகொட, பதல்கொட

6.  தாவரவியல் பூங்காக்கள் - பேராதனை, கனோபத்த, ஹக்கல

7.  தேயிலை ஆராட்சி நிலையம் - தலவாக்கலை

8.  சோயா ஆராட்சி நிலையம் - பல்லேகலை, கண்ணொறுவ

9.  ரயர் (டயர், டியூப்) தொழிற்சாலை - களனி

10.  இறப்பர் ஆராட்சி நிலையம் - அகலவத்தை

11. வனவிலங்குச் சரணாலயம் - வில்பத்து, யால, உடவளவை, றுகுணு, லகுகல

12.  பருத்தி ஆராட்சி நிலையம் - அம்பாந்தோட்டை

13.  உருளைக்கிழங்கு ஆராட்சி நிலையம் - நுவரேலியா

14.  சீமெந்து தொழிற்சாலை – புத்தளம், காலி

15.  ஓட்டுத் தொழிற்சாலை - அம்பாறை

16.  ஆயுர்வேத ஆராட்சி நிலையம் - நாவின்ன

17.  அரசினர் சுதேச வைத்தியசாலை - இராஜகிரிய

18.  பறவைகள் சரணாலயம் - முத்துராஜவெல, குமண, பூந்தல

19.  குஷ்டரோக வைத்தியசாலை - மாந்தீவு மட்டக்களப்பு

20.  கலாசார முக்கோண வலையம் - கண்டி, அனுராதபுரம், பொலநறுவை

21.  சீனித் தொழிற்சாலை – கந்தளாய்

22.  காரீயச் சுரங்கம் - போகலை

23. புற்றுநோய் வைத்தியசாலை - மகரகம

24. துறைமுகங்கள் - கொழும்பு, திருகோணமலை, காலி, அம்பாந்தோட்டை, காங்கேசந்துறை

25. காகிதத் தொழிற்சாலை - வாளைச்சேனை

26, ஏற்றுமதிப் பொருட்கள் - தேயிலை, றபர், கறுவா

27. மிருகக்காட்சிச்சாலை - தெஹிவளை

இலங்கையின் தேசிய சின்னங்கள்

1.  இலங்கையின் தேசிய மரம் - நாகமரம்

2.  இலங்கையின் தேசியப் பறவை - காட்டுக்கோழி

3.  இலங்கையின் தேசிய மிருகம் - யானை

4.  இலங்கையின் தேசிய மலர் - நீலஅல்லி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad