Type Here to Get Search Results !

History of Sri Lanka Administrative Service 2023

The Sri Lanka Administrative Service's past



Following the British colonial takeover of Sri Lanka's coastal regions in 1796, the East India Company administrators based in Madurai were responsible for overseeing the region's administrative operations. In 1802, the British selected a few officers to manage Sri Lanka's administrative operations because of practical issues.

This marked the start of the nation's civil service, which was subsequently modeled after the British Civil Service and dubbed the Ceylon Civil Service (CCS) in 1833. After absorbing the Regional Revenue Administrative Officer Service, it was renamed Ceylon Administrative Service (CAS) in 1963. Following the Republic of Sri Lanka's 1972 proclamation, the Sri Lanka Administrative Service (SLAS) was designated as


இலங்கை நிர்வாக சேவையின் வரலாறு

1796 ஆம் ஆண்டு இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியின் கீழ் வந்ததன் பின்னர் அப்பிரதேசங்களின் நிர்வாக நடவடிக்கைகள் மதுரையிலிருந்து செயற்பட்டு வந்த கிழக்கிந்திய வர்த்தக கம்பனி (East India Company) அலுவலர்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் போது ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக 1802 ஆம் ஆண்டு இலங்கையின் நிர்வாக நடவடிக்கைகளுக்கென அலுவலர்கள் சிலர் பிரித்தானியாவினால் நியமனம் செய்யப்பட்டார்கள்.


இது இந்நாட்டின் சிவில் சேவையின் ஆரம்பமாக இருந்ததுடன், பின்னர் இந்தச் சேவை பிரித்தானிய சிவில் சேவையை அடிப்படையாகக் கொண்டு 1833 இல் இலங்கை சிவில் சேவை (Ceylon Civil Service-CCS) எனப் பெயரிடப்பட்டது. இது 1963 ஆம் ஆண்டு அப்போது காணப்பட்ட பிராந்திய வருமான நிர்வாக அலுவலர் சேவையையும் உள்ளடக்கி இலங்கை நிர்வாக சேவையென (Ceylon Administrative Service-CAS) பெயரிடப்பட்டது. பின்னர் 1972 இல் இலங்கை குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டதை அடுத்து இலங்கை நிர்வாக சேவையென (Sri Lanka Administrative Service-SLAS) பெயரிடப்பட்டு இந்நாட்டின் முதற்தர சிவில் சேவையாக இயங்கி வருகின்றது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad