இலங்கை மாகாணங்கள் தமிழ்
- வடக்கு மாகாணம்
- கிழக்கு மாகாணம்
- தென் மாகாணம்
- மேல் மாகாணம்
- மத்திய மாகாணம்
- சபரகமுவை மாகாணம்
- ஊவா மாகாணம்
- வடமத்திய மாகாணம்
- வடமேல் மாகாணம்
Provinces of Sri Lanka English
- Northern Province
- Eastern Province
- Southern Province
- Western Province
- Central Province
- Sabaragamuwa Province
- Uva Province
- North Central Province
- North Western Province
இலங்கையில் மாகாணங்கள் எவ்வாறு தோற்றம் பெற்றது.
பிரித்தானிய ஆட்சியில் இருந்து இலங்கை விடுதலை அடைந்த பின், நடைமுறையிலிருந்த அரசியல் அதிகாரங்களை மையப்படுத்திய ஆட்சிமுறை இலங்கை மக்களின் அரசியல் தேவைகளை நிறைவு செய்யமுடியாமல் போகவே. 1955 ஆண்டு தொடக்கமே அரசியல் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இம் முறைகள் பலனற்று போனபோது புதிய பரவலாக்க முறைகள் பரிந்துரைக்கப்பட்டன. அவற்றில் சில
1973/74 மாவட்ட அரசியல் அதிகார சபை முறை
1979/80 மாவட்ட அபிவிருத்தி சபை/மாவட்ட அமைச்சர் முறை
1987/88 மாகாணசபை முறை
1987 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் 13ஆவது அரசியல் அமைப்புச் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இது மாகாணசபைகளை அமைத்தல், மாகாணசபைகளுக்கு ஆளுனர்களை நியமித்தல், மாகாணசபை அமைச்சர் நியமனம், மாகாணசபையின் அதிகாரங்கள், மாகாணசபைகள் சட்டத்தை மீறும் போது எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கைகள், மாகாண உயர் நீதிமன்றங்கள் அமைப்பு, மாகாண நிதி ஆனைக்குழு போன்றவற்றுக்கான அடிப்படைச் சட்டமாகும். இதன் பிறகு பாராளுமன்றத்தில் 1987 ஆம் ஆண்டு 42ஆம் இலக்க மாகாணசபைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் மாகாணசபை உறுப்பினர் எண்ணிக்கை, மாகாணசபைக் கூட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகள், நிதிச் செயற்பாடுகள், பொதுச் சேவைகள் அமைத்தல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது.
மாகாணசபையானது கொண்டிருக்கும் நிர்வாகக் கட்டமைப்புகள்
- ஆளுனர்
- மந்திரி சபை
- முதலமைச்சர்
- 4 மாகாணசபை அமைச்சர்கள்
- மாகாணசபை பொதுப் பணிகள் ஆணைக்குழு
- தலைமை செயலாளர்
ஒவ்வொறு மாகாணங்களும் எத்தனை மாவட்டங்களை கொண்டிருக்கின்றது.
|
மாகாணங்கள் |
மாவட்டங்கள் |
1. |
வடக்கு மாகாணம் |
5 |
2. |
கிழக்கு மாகாணம் |
3 |
3. |
தென் மாகாணம் |
3 |
4. |
மேல் மாகாணம் |
3 |
5. |
மத்திய மாகாணம் |
3 |
6. |
சபரகமுவை மாகாணம் |
2 |
7. |
ஊவா மாகாணம் |
2 |
8. |
வடமத்திய மாகாணம் |
2 |
9. |
வடமேல் மாகாணம் |
2 |
ஒவ்வொறு மாகாணங்களும் எந்த மாவட்டங்களை தலை நகரமாக கொண்டிருக்கின்றது.
|
மாகாணங்கள் |
மாவட்டங்கள் |
1. |
வடக்கு மாகாணம் |
யாழ்ப்பாணம் |
2. |
கிழக்கு மாகாணம் |
திருகோணமலை |
3. |
தென் மாகாணம் |
காலி |
4. |
மேல் மாகாணம் |
கொழும்பு |
5. |
மத்திய மாகாணம் |
கண்டி |
6. |
சபரகமுவை மாகாணம் |
இரத்தினபுரி |
7. |
ஊவா மாகாணம் |
பதுளை |
8. |
வடமத்திய மாகாணம் |
அனுராதபுரம் |
9. |
வடமேல் மாகாணம் |
புத்தளம் |
ஒவ்வொறு மாகாணங்களும் எத்தனை சதுர கிலோ மீட்டர்களை கொண்டிருக்கின்றது.
|
மாகாணங்கள் |
மாவட்டங்கள் |
1. |
வடக்கு மாகாணம் |
8,882 |
2. |
கிழக்கு மாகாணம் |
9,951 |
3. |
தென் மாகாணம் |
5,559 |
4. |
மேல் மாகாணம் |
3,709 |
5. |
மத்திய மாகாணம் |
5,584 |
6. |
சபரகமுவை மாகாணம் |
4,902 |
7. |
ஊவா மாகாணம் |
8,488 |
8. |
வடமத்திய மாகாணம் |
10,724 |
9. |
வடமேல் மாகாணம் |
7,812 |
2012 கணக்கெடுப்பின் படி, இலங்கையின் மாகாண ரீதியாக மக்கள்தொகை
|
மாகாணங்கள் |
மக்கள் தொகை 2012 |
1. |
வடக்கு மாகாணம் |
1,061,315 |
2. |
கிழக்கு மாகாணம் |
1,555,510 |
3. |
தென் மாகாணம் |
2,477,285 |
4. |
மேல் மாகாணம் |
5,851,130 |
5. |
மத்திய மாகாணம் |
2,571,557 |
6. |
சபரகமுவை மாகாணம் |
1,928,655 |
7. |
ஊவா மாகாணம் |
1,266,463 |
8. |
வடமத்திய மாகாணம் |
1,266,663 |
9. |
வடமேல் மாகாணம் |
2,380,861 |